மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழக பட்டப்படிப்பிக்கான விண்ணப்ப கோரல் 2018/2019

- muhammad abu khalidh - 
சவூதி அரேபியா மதீனா நகரில் அமையப்பெற்றுள்ள மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு ஹிஜ்ரி 1441/1440 (2018/2019) ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய வெளிநாட்டு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப் படவுள்ளனர். 
புலமைப் பரிசில் மூலம் கிடைக்கும் இவ் உயர் கல்வியைத் தொடர விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் கீழ் தந்திருக்கும் இணைப்பின் ஊடாக சென்று தேவையான ஆவணங்களை உட்செலுத்தி விண்ணப்பிக்க முடியும். 

விண்ணப்பிக்க வேண்டிய இணைப்பு : https://admission.iu.edu.sa/Note.aspx 
இவ்வினைப்பின் ஊடாக சென்று பெயர் மற்றும் ஜி-மெயில் கொடுப்பதின் மூலம் ஆவணங்களை உட்செலுத்துவதட்க்கான இணைப்பு உங்கள் ஜி-மெயில்க்கு அனுப்பப்படும். 

விண்ணப்பிக்கும் முன் கவனிக்குக : 

தேவையான ஆவணங்கள் || REQUIRED DOCUMENTS 
  1. உயர்தரப் பரீட்சை சான்றிதழ். 
  2. உயர்தரப் பரீட்சை பெறுபேறு. 
  3. பிறப்புச் சான்றிதழ். 
  4. கடவுச் சீட்டு. 
  5. கடவுச் சீட்டு அளவுள்ள புகைப்படம். (தலை மூடாமலும் மூக்குக் கண்ணாடி அணியாமலும் இருப்பதோடு பின்பகுதி வெள்ளை நிறமாக இருத்தல் வேண்டும்) 
  6. படிப்பை தொடர முடியாத எவ்வித நோயும் இல்லை என்ற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை. 
  7. இஸ்லாமிய நிறுவனமொன்றில் அல்லது இரண்டு பிரபலமான முஸ்லீம் நபர்களிடமிருந்து (சவூதி அரேபிய பல்கலைக்கழகங்களில் படித்து வெளியேறியவர்கள் வரவேற்கத்தக்கது) பெறப்பட்ட 2 நற்சான்றிதல்கள். 
  8. மிக முக்கியமாக உட் செலுத்தும் அனைத்து ஆவணங்களும் அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பு அலுவலகம் ஒன்றில் அரபு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உருதிபடுத்தப்பட்டிருக்க வேண்டும் (பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்படும் விடத்து ஆவணங்கள் கொழும்பில்லிருக்கும் சவூதி தூதரகத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்) 
குறிப்பு : விண்ணப்பிக்க முன் தேவையான அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்துக்கொள்ளவும் மேலும் நீங்கள் உள்ளிடும் அனைத்தும் விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ளது போன்று உள்ளதா என்பதையும் கவனத்தில் கொள்ளவும். 

விண்ணப்பிக்கும் முறை படங்களுடன்

step 01
step 02
step 03
step 04
step 05
step 06
தொடர்ந்து தகவல்களை சரியாக பதிந்து ஸ்கேன் செய்து வைத்துள்ள ஆவணங்களையும் உட்செலுத்து submit செய்த பின்னர் அவர்களால் உங்களுக்கு (Order number) رقم الطلب அனுப்பி வைக்கப்படும்  இலக்கங்களை பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள் அவ்விலக்கன்களின் மூலமே பின்னர் பரிசீலனை செய்ய முடியும்.
جزاكم الله خيرا


கருத்துரையிடுக...

Asalamu alaikum warahmathullah
Pengalukum padika anumathi India?

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget