பத்ர் போர் || Assheikh Muhammad Abu Khalidh (Noori,Riyadhi) B.Com Reading


இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்கள் இஸ்லாத்தின் பகைவர்களை எதிர்த்துப் போராடிய முதலாவது போர் இதுவாகும். இந்தப் போர் மக்காவிலிருந்து 343 கி.மீ. தொலைவிலும், மதீனாவிலிருந்து 153 கி.மீ. தொலைவிலும் அமையப்பெற்றுள்ள பத்ர் என்ற இடத்தில் ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் மாதம் பிறை 17-ல் நடைபெற்றது. மக்காவில் இஸ்லாத்தை எதிர்த்த குறைஷியர்களுடன் இடம்பெற்ற இப்போர் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், இஸ்லாத்துக்கும் பெறும் திருப்புமுனையாக அமைந்தது. முஸ்லிம்கள் சார்பில் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே கலந்துக்கொண்டனர்; ஆனாலும் அவர்களிடம் காணப்பட்ட இறை நம்பிக்கையின் வலிமையும், இறைவனின் உதவியுமே அவர்களின் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. 

போருக்கான காரணம் 
  • போர் நடைபெறுவதற்குப் பல காரணங்களை வரலாற்றின் ஊடாக விளங்கிக் கொள்ளலாம். மதீனாவில் இஸ்லாம் தனிப்பெரும் அரசாக வளர்ந்து வந்தமை எதிரிகளால் விரும்பப்படவில்லை. மேலும் நாளுக்கு நாள் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருவதனை அவர்கள் அவதானித்து வந்தனர். இப்பரவல் முழு அரபு உலகத்தையும் மிக வேகமான முறையில் ஆட்கொண்டு வரும் என்று அவர்கள் கருதியதோடு, தமது அரசுகளின் செல்வாக்கு இல்லாமற் சென்றுவிடுமோ என்றும் அஞ்சினர். 
  • மக்கா குறைஷியர்கள் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடனும், முஸ்லிம்களுடனும் போர் ஒன்றை மேற்கொள்வதற்கு இன்னொரு முக்கியமான காரணம் நபியவர்கள் மதீனாவில் தம்மைத் திடப்படுத்திக்கொண்டு, மக்காவில் இருந்து சிரியாவை நோக்கிச் செல்லும் குறைஷி வணிகர்களைத் தடுத்து நிறுத்தி மக்காவாசிகளின் பொருளாதாரப் பலத்தை அழித்து விடுவார்களோ என்ற அச்சமாகும். 
  • அத்தோடு நபியவர்களது அழைப்புப் பணி மக்காவையும் புனித கஃபாவையும் இலக்காகக் கொண்டிருக்கிறது என்பதையும் எதிரிகள் அவதானிக்க தவறவில்லை. நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு வெளியேறும் போது கஃபாவை பார்த்து அழுததையும் எதிரிகளால் மறக்கக் கூடிய நிகழ்ச்சியாக இருக்கவில்லை. இதனால் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் முழுமையாக தமது கால்களை ஊன்றிக்கொள்ள முன்னர் அவரை படைத்துறை, பொருளாதார இழப்புகளுக்கு உள்ளாக்க வேண்டும் என்று எதிரிகள் எண்ணினர். 
போர் நிகழ்வு 

மேற் கூறப்பட்ட காரணிகள் போர் ஒன்றுக்கான சூழ்நிலை எதிரிகளிடத்தில் உருவாகி வந்த போது அபூஸுபியான் பெறுமதி மிக்க வர்த்தகப் பொருட்களுடன் சிரியாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான். ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை வைத்து முஸ்லிம்கள் தன்னையும் தாக்கி வர்த்தகப் பொருட்களையும் கொள்ளை அடிக்கலாம் என்ற அச்சம் அபூஸுபியானிடம் ஏற்பட்ட போது, மக்காவுக்கு இது பற்றிச் செய்தி அனுப்பினான். மக்காவில் இச்செய்தி மிக வேகமாகப் பரவியது. பெரும் செல்வந்தர்களது சொத்துகள் அபூஸுபியானிடம் இருந்ததனால் இது ஒரு பெரும் சிக்கலாக மாறவே அவர்கள் தலைவர்களை ஒன்றிணைத்து முஸ்லிம்கள் மீது போர் செய்ய ஆயத்தமாகினர். 1000 பேர் அவர்களது படைப் பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். முக்கியமான தலைவர்களும் அவர்களில் காணப்பட்டனர். 

ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு 12 ஆவது நோன்பில் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு சிறு குழுவினரோடு குறைசியர்களது படை வந்து கொண்டிருந்த தென் மேற்குத் திசையை நோக்கி முன்னேறினார்கள். 16 ஆம் நாள் மதீனாவில் இருந்து 153 கி.மீ. தொலைவில் இருந்த பத்ர் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். பள்ளத்தாக்கின் அடுத்த முனையில் எதிரிகள் வந்து சேர்ந்தனர். 

மறு நாள் காலை, அதாவது நோன்பு 17 இல் எதிரிகளோடு போர் தொடங்கியது. போர் மிகவும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் மிகவும் உறுக்கமான முறையிள் “இறைவா உன் தூதரை பொய்யர் என்று நிறுவ ஆணவத்தோடும், ஆயுத வலிமையோடும் இக்குறைஷியர்கள் வந்திருக்கின்றனர். நீ வாக்களித்திருக்கும் உதவியை இப்போது தந்து விடு. இன்று இந்த சின்னஞ்சிறு குழு அழிந்து விட்டால் இப்பூமியில் உன்னை வணங்க வேறு யாரும் இருக்க மாட்டார்கள்” என்று இறைவனிடம் துஆ கேட்க ஆரம்பித்தார்கள். 

இவ்வாறு நபியவர்களின் தோளில் இருந்த போர்வை விழும் வரை இறைஞ்சுதலில் ஈடுபட்டிருந்தார்கள். இதனைக் கண்ட அபூபக்கர் (ரழி) அவர்கள் நபியவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் நீங்கள் இறைஞ்சியது போதும் நிச்சயமாக அவன் உங்களுக்கு உதவி செய்வான் என்று கூறி ஆறுதல் படுத்தினார். 

இப்போராட்டத்தில் முஹாஜிரீன்கள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு சென்ற முஸ்லிம்கள்) தமது பெற்றோர்களையும், பிள்ளைகளையும், சகோதரர்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய ஒரு சோதனைக்கு ஆளானார்கள். இப்படியான சோதனையிலும் அவர்கள் இந்த யுத்தத்தில் வெற்றியடைந்தனர். இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் கொள்கைக்காக குடல்வாய் உறவுகளைப் போர்க் களத்தில் சந்தித்தனர். குடல்வாய் உறவுமுறையை விடவும் தங்களின் இஸ்லாமிய கொள்கை வலிமை மிக்கது என்பதை அவர்கள் போர்க்களத்தில் நிறுவிக் காட்டினர். 



கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget