ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 06

இறைமைக் கோட்பாடு (தவ்ஹீதுல் உலூஹிய்யா)

03. தவ்ஹீதுல் உலூஹிய்யா அல்லாஹ்வை ஈமான் கொள்வதில் முன்றாவது விடயமாகும்.

வணக்கங்களில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதலை தவ்ஹீதுல் உலூஹிய்யா குறிக்கின்றது. இதற்கு உதாரணமாக பிரார்த்தனை செய்தல், தொழுகை, பாதுகாப்பு கோருதல், தவக்குல் வைத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

அல்லாஹ் கூறுகிறான், 'ஆகவே அல்லாஹ்வுடன் வேறு கடவுளை (இணையாக) ஏற்படுத்தாதீர்; (அப்படிச் செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும், துரத்தப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்'. (அல்குர்ஆன் - 17 : 39).

இறைமைக் கோட்பாடு அனைத்து விடயங்களை விடவும் சிறந்தது. மனிதனின் சீரான நிலையை நிர்ணயிக்கக்கூடியது. இதற்காகவே அல்லாஹ் மனிதர்களையும், ஜின்களையும் படைத்தான். அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட அனைத்துத் தூதர்களும் இதனையே போதித்தார்கள்.

அல்லாஹ் கூறுகிறான், (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: 'நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்' என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை'. (அல்குர்ஆன் - 21 : 25).

அல்லாஹ் கூறுகிறான், இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை'. (அல்குர்ஆன் - 51 : 56)

எல்லா மதங்களும் இறைக்கோட்பாட்டை கூறினாலும் இஸ்லாம் மாத்திரமே இவற்றில் தனித்து விளங்குகின்றது.

வணக்கம் என்பது அல்லாஹ் ஏவிய வெளிப்படையான, மறைமுகமான சொல், செயற்பாடுகளை குறிக்கின்றது. அது உள்ளத்தாலும், நாவாலும், உடலாலும் செய்யப்படுவதாகும். அச்சம், எதிர்பார்ப்பு போன்றன உள்ளத்தாலும்;, அல்லாஹ்வை துதிப்பது, குர்ஆன் ஓதுவது போன்றன நாவாலும், தொழுகை, ஹஜ் போன்றன உடல் உறுப்புக்களாலும் நிகழ்கின்ற வணக்கங்களாகும்.

அல்லாஹ்வுக்கு மாத்திரமே நிறைவேற்ற வேண்டிய இவ்வணக்கங்கள் அனைத்தையும் பிறருக்கு நிறைவேற்றும் போது அல்லாஹ்வின் அனைத்து வல்லமைகளும் பிறருக்கும் இருப்பதாய் எண்ணி செயற்பட தூண்டுகின்றன. அல்லாஹ்வோடு அவர்களை இணையாக்கிய பாவத்தை ஏற்படுத்துவதோடு அதற்காக தண்டனையை மறுமையில் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.இறைமைக் கோட்பாட்டில் இணைவைத்தலின் தோற்றம்

மனிதனின் வாழ்க்கை இவ்வுலகில் தவ்ஹீதை அடிப்படையாகக் கொண்டு துவங்கியதா? அல்லது ஷிர்க்கை அடிப்படையாகக் கொண்டு துவங்கியதா? மனிதன் முதலில் ஓரிறைக் கொள்கையாளனாக இருந்து பின்னர் பல தெய்வ வழிபாடு செய்பவனாக மாறினானா? அல்லது பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஓரிறைக் கொள்கைக்கு மாறினானா? என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். இதனை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

'நான் அடியார்களைத் தூயவர்களாகவே படைத்தேன். ஆனால் ஷைத்தான் தவ்ஹீதை விட்டும் அவர்களைத் திசைதிருப்பி விட்டான். அவர்களுக்கு (என்னால்) அனுமதிக்கப்பட்டிருந்தவைகளை ஷைத்தான் ஹராமானது என்று காட்டிவிட்டான்' என்று அல்லாஹ் கூறுவதாக நபி ள அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் இயாழ் இப்னு ஹிமார் ன, ஆதாரம் - முஸ்லிம் : 2865)

ஆதம் (அலை) அவர்களது காலம் முதல், நூஹ் (அலை) அவர்களது காலம் வரை 10 நூற்றாண்டுகளாக மனிதன் ஓரிறைக் கொள்கைவாதியாகவே இருந்தான். பின்னர்தான் பல தெய்வ வணக்க வழிபாடுகளில் மூழ்கிவிட்டான் என்பதை மேற்கூறிய நபி மொழி தெளிவுபடுத்துகின்றது.

(தவ்ஹீதை) ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்த நல்லடியர்களை அளவுக்கு அதிகமாகக் கண்ணியப்படுத்தி, கடவுள் நிலைக்கு உயர்த்தியமையே 'ஷிர்க்' (இணை வைத்தல்) தோன்ற மூல காரணமாக இருந்தது. இந்த உண்மையைத் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

'நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள்! மேலும் 'வத்து' 'சுவாவு' 'யஹூஸு' 'யஊக்' 'நஸ்ர்' ஆகிய தெய்வங்களை நீங்கள் விட்டு விடாதீர்கள்!' என்று அவர்கள் (நூஹ் நபியின் சமூகத்தினர்) கூறினார்கள்'. (அல்குர்ஆன் - 71 : 23)

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள ' 'வத்து' 'சுவாவு' 'யஹூஸு' 'யஊக்' 'நஸ்ர்' ஆகியோர் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த நல்லடியார்கள் என்றும், அவர்கள் மரணமடைந்த பின்னர் அவர்களையே மக்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தி விட்டனர் என்றும், ஆரம்பத்தில் நினைவுச் சின்னம் எழுப்பினர் பின்னர் அடுத்த தலைமுறையினர் அவர்களையே வணங்க முற்பட்டு விட்டனர்' என்று இப்னு அப்பாஸ் ன அவர்கள் விளக்கமளித்துளளார்கள். (ஆதாரம் - புஹாரி : 4920)

அன்று நபி நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் இணைவைக்க காரணம் எதுவோ, அதே காரணத்தால்தான் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தூய மார்க்கத்தைப் பின்பற்றிக் கொண்டிருந்த மக்கத்து குறைஷிகளும் இணைவைப்பில் விழுந்தார்கள். அம்ரு பின் லுஹைய் என்பவன் ஸிரியாப் பகுதிக்குச் சென்ற வேளை அங்கு மக்கள் சிலைகளை வைத்து வணங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவர்களிடமிருந்து ஹூபல் எனும் சிலையை வாங்கி வந்து கஃபாவில் வைத்து குறைஷிகளை வணங்கவும், தமது தேவைகளை கேட்கவும் தூண்டினான். அதன் பின்னர் லாத், உஸ்ஸா, மனாத் போன்ற நல்ல மனிதர்களின் உருவச் சிலைகளை வணங்கலானார்கள். (ஆதாரம் - புஹாரி : 4623, முஸ்லிம் : 2856)


அதே வழித்தோன்றலில் தான் இன்றும் முஸ்லிம்களில் சிலர் அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய பிரார்த்தனையை தாம் நல்லடியார்களாகக் கருதும் மரணித்த சிலரிடம் வேண்டுகின்றனர். அவர்களுக்காக அறுத்துப் பலியிடுகின்றனர். அவர்களின் பெயரில் நேர்ச்சை வைக்கின்றனர். எனவே நபி நூஹ் (அலை) அவர்களது காலத்து இணைவைப்பு, ஜாஹிலிய்யா காலத்து இணைவைப்பு, நவீன கால இணைவைப்பு அனைத்தும் நல்லடியார்கள் மீது அளவு கடந்து மோகம் கொண்டதன் வெளிப்பாடாகவே உள்ளன.

குறிப்பு

அல்லாஹ்வை ஈமான் கொள்வதில் உள்ளடங்கும் நான்காவது விடயம். அல்லாஹ்வின் பெயர், பண்களில் அவனுக்கு நிகர் ஏற்படுத்தாது ஒருமைப்படுத்துவதாகும். இது பற்றி எமது இந்நூலின் இரண்டாம் பாகத்தில் விரிவாக கற்போம்.வினா இல - 06

தௌஹீதுல் உலூஹிய்யா என்றால் என்ன ?

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget