1-நபிமார்களின் அற்புதங்கள்:
சில நபிமார்களுக்கு இறைவன் அவர்களின் நபித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் சில அற்புதங்களை வழங்கியிருந்தான் . உதாரணமாக நபி ஸாலிஹ் அவர்களுக்கு அவர்களின் கூட்டம் ஆச்சரியப்படும் வகையில் பாராங்கட்களுக்கு மத்தியிலிருந்து பருத்த ஒட்டகம் ஒன்றை வெளியாக்கினான் .
அதே போன்று நபி மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் தன் கையில் இருந்த தடியை கீழே எறிந்தால் அது பாம்பாக மாறும் , தன் கையை சட்டைப் பைக்குள் இட்டு எடுத்தால் பளபளக்கும் , தன் கையில் இருந்த தடியால் நைல் நதியில் அடத்த போது அது 12 பாதைகளாக பிரிந்தன.
நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் இறைவனின் அனுமதியுடன் வென்குஷ்டம் , குருடு போன்ற நோய்களைக் குணப்படுத்துபவரகவும் மரணித்தவர்களை உயிர்ப்பிப்பவரகவும் காணப்பட்டார்கள் .
அதே வரிசையில் இறுதி நபியும் எங்கள் தூதுவருமாகிய நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிஹ்ராஜ் பயணம் , சந்திரன் இரண்டாகப் பிலக்கல் போன்ற பல அற்புதங்களை வழங்கிய அல்லாஹ், அவைகளில் மிகப் பெரும் அற்புதமாகவும் மறுமை நாள் வரை உலக மக்கள் அனைவருக்கும் சவாலாகவும் அல்குர்ஆனை வழங்கினான் .
2- அல் குர்ஆன் :
இறைவன் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கிய மிகப் பெரும் அற்புதமே அல் குர்ஆன் . “ இறை அற்புதமாகவும் அதனைக் கொண்டு வானங்கப்படுவதற்காகவும் அல்லாஹ்வின் சொல் மற்றும் கருத்துக்களை உள்ளடக்கிய நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறக்கப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தைகளையே அல் குர்ஆன் எனப்படும் .
23 ஆண்டுகளில் காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ற வகையில் அருளப்பட்ட இப் புனித குர்ஆனே இறுதி வேதமாகும் . அல் குர்ஆன் , அல்கிதாப் , அல்புர்கான் , அந்நூர் , அத்திக்ர் போன்ற பல பெயர்கள் மூலம் அழைக்கப்படும் இவ்வேதம் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாகும் .
3 - அல்குர்ஆன் ஒன்று சேர்க்கப்படல் :
இதனை மூன்று கட்டங்களாக எங்களுக்கு நோக்கலாம்.
1- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் .
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இரண்டு முறைகளில் அல்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது :
1- சஹாபாக்கள் மனனமிடல் : முஆத் , உபை இப்னு கஹ்ப் , ஸைத் பின் ஸாபித் , அபூ யஸீத் ரலியல்லாஹு அன்ஹும் உட்பட பலர் முழுமையாக மனனமிட்டு பாதுகாத்தனர் .
2- எழுத்து மூலமாக பாதுகாத்தல் : முஆவியா , உபை இப்னு கஹ்ப் , ஸைத் பின் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹும் போன்றோர் நபிகளாருக்கு அல்குர்ஆன் அருளப்பட்ட பின்பு அதனை எழுதும் பணியில் ஈடுபட்டனர் .
2- அபூ பக்கர் ரலியள்ளஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலம் :
அபூ பக்கர் ரலியள்ளஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பல யுத்தங்களில் குறிப்பாக யமாமா யுத்தத்தில் அல்குர்ஆனை மனனமிட்டிருந்த பல சஹாபாக்கள் கொலை செய்யப்பட்டதனால் அல்குர்ஆன் ஒன்று சேர்க்கப்பட வேண்டிய கட்டாயத்தேவை ஏற்பட்டது . இப்பொறுப்பை நிறைவேற்ற உமர் , ஸைத் பின் ஸாபித் போன்ற சஹாபாக்களை நியமித்தார்கள். இது பல ஏடுகளில் எழுதப்பட்டது.
3 - உஸ்மான் ரலியள்ளஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலம் :
உஸ்மான் ரலியள்ளஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் குர்ஆனை ஓதும் விதத்தில் ( கிரா அத் ) முஸ்லிம்களிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையே இதற்கு முக்கியகாரணமாகும். அபூ பக்கர் ரலியள்ளஹு அன்ஹு அவர்களின் மூலம் பல ஏடுகளில் தொகுக்கப்பட்ட குர்ஆன் ஹப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடமே காணப்பட்டது . இதனை எடுத்து பல பிரதிகளாக எழுதி ஒரே நூல் வடிவில் ஒன்று சேர்த்து பல பகுதிகளுக்கும் அனுப்பினார்கள் .
4-
அல்குர்ஆனில் உள்ள மொத்த ஜுசுக்கள் : 30
அத்தியாயங்கள் : 114
வசனங்கள் : 6204 / 6214 / 6236 . ( கருத்து வேற்றுமையுள்ளது )
சொற்கள் : 77439
எழுத்துக்கள் : 321180
5- மக்கி ய்யா , மதனிய்யா .
அல்குர்ஆனில் உள்ள அத்தியாயங்களை மக்கிய்யத்தான அத்தியாயங்கள் மதனிய்யத்தான அத்தியாயங்கள் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் .
1 - மக்கிய்யா : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹிஜ்ரத்திற்கு முன் இறங்கிய அத்தியாயங்களை மக்கிய்யா என்று அழைக்கப்படும் . அது மக்கவிற்கு வெளியே இறங்கினாலும் சரியே .
மக்கிய்யத்தான வசனங்கள் தெளிவான , சுருக்கமான , சிறிய சிறிய வசனங்களைக் கொண்டதாகும் . மற்றும் அவை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் வசனங்களாகவும் முன்னைய கால சமூகங்களின் சம்பவங்களை உள்ளடக்கியதாகவும் காணப்படும் .
2 - மதனிய்யா : : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹிஜ்ரத்திற்கு பின் இறங்கிய அத்தியாயங்களை மதனிய்யா என்று அழைக்கப்படும் . அது மதீனாவிற்கு வெளியே இறங்கினாலும் சரியே.
இலகுவான வசனநடை , நீண்ட வசனங்கள் , சட்டங்கள் வழிகாட்டல்கள் போன்ற சிறப்பியல்புகளைக் கொண்டதாகவே மதனிய்யத்தான வசனங்கள் காணப்பட்டன .
6- தப்ஸீர் :
1 - சஹாபாக்களில் முக்கியமான முபஸ்ஸிரீன்ங்கள் : அபூ பக்கர் , உமர் , உஸ்மான் , அலி , இப்னு அப்பாஸ் , இப்னு மஸ்ஊத் , இப்னு சுபைர் , உபை இப்னு கஹ்ப் , ஸைத் இப்னு ஸாபித் , அபூ மூஸால் அஷ்அரி , ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹும் போன்றோர் இவர்களில் முக்கியமானவர்களாவர்.
2- தாபிஈன்களில் முக்கியமான முபஸ்ஸிரீன்ங்கள் : முஜாஹித் , ஸஈத் இப்னு சுபைர் , இக்ரிமா , கதாதா , அதா இப்னு அபீ ரபாஹ். ரஹிமஹுமுல்லாஹ் போன்ற பலர் காணப்பட்டனர் .
3- அல்குர்ஆன் விரிவுரை நூல்களில் பூரணமான முதலாவது நூல் இமாம் இப்னு ஜரீர் அத்தபரி அவர்களால் தொகுக்கப்பட்ட தப்ஸீருத் தபரியாகும் .
4- பிரபலமான அல்குர்ஆன் விரிவுரை நூல்கள் : தப்சீர் இப்னு கஸீர் , ஜாமியுல் பயான் , அல்பஹ்ருள் முஹீத் .
ஆக்கம் : F.R.Muhammad
B.A Reading
Al-Imam Muhammad Bin Saud Islamic University
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.