அல் இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர்களின் ஆறாவது தஃவா சுற்றுலா – 2017

அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனது தூதர் முஹம்மத் ஸல் அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தினர்கள், தோழர்கள், இன்று வரைக்கும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்றுகின்ற அனைவர் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக...


கடந்த 2012ம் வருடத்திலிருந்து எமது ஒன்றிய உறுப்பினர்களின் தஃவா முயற்சியில் ஓர் பாரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வீடியோ பதிவுகள், ஆக்கங்கள், தமது ஊர்களில் பங்காற்றுகின்ற கள தஃவா நிகழ்வுகள் என நடைபெறும் தஃவா நிகழ்வுகளையும் கடந்து, கோடை கால விடுமுறைக்காக இலங்கைக்கு வரும் வேளையில் இலங்கையில் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு இஸ்லாமிய கருத்தரங்குகளை நடாத்துதல் எனும் நிலைக்குச் சென்று, அதையும் தாண்டி எமது உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் என இலங்கையின் குறிப்பிட்ட பிரதேசங்களைத் தேர்வு செய்து, தஃவா சுற்றுலாவை மேற்கொள்ளும் நிலைக்குச் சென்றுள்ளனர். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...

இம்முறையும் அவ்வாறான ஓர் சுற்றுலாவை மேற்கொள்ளும் பாக்கியம் எமக்குக் கிடைத்தது. இதற்காக இம்மாதம் 03, 04 ஆகிய தினங்களையும், செல்லும் இடங்களாக அனுராதபுரம், வன்னி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களையும் தேர்வு செய்தோம். இதில் எமது ஒன்றிய உறுப்பினர்கள் 12 பேர் கலந்துகொண்டனர்.

முதலில் அனுராதபுரத்திற்குச் செல்வதாக முடிவு செய்து 02ம் திகதி இரவு 8.30க்கு பயணத்தை ஆரம்பித்த எமது உறுப்பினர்கள் ஹொரோபொதான பிரதேசத்தில் அமைந்திருக்கும் ரஷீதிய்யா அரபுக் கல்லூரிக்கு தமது முதல் விஜயத்தை மேற்கொண்டனர். அங்கு இரவு தங்கி 03ம் திகதி காலை அனுராதபுர மாவட்டத்தில் தமது தஃவாப் பணிகளை ஆரம்பித்தனர்.

முதல் நிகழ்வாக ரஷீதிய்யா அரபுக் கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்களின் அனுமதிக்கினங்க அக்கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனி வகுப்புக்களில் பிரத்தியேக ஆலோசனை வழிகாட்டல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அடுத்து கஹடகஸ்கிலிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஜமாலிய்யா அரபுக் கல்லூரிக்கு நண்பகல் வேளையில் விஜயத்தை மேற்கொண்ட எமது ஒன்றிய உறுப்பினர்கள் அங்கும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுவான ஆலோசனை வழிகாட்டல் நிகழ்வை நடாத்தினர்.. அதனை அடுத்து அக்கல்லூரியின் அதிபர் உட்பட ஆசிரியர்களுடன் ஓர் கலந்தாலோசனை நிகழ்வும் இடம்பெற்றது.

அன்று மாலை 4 மணிக்கு 4 குழுக்களாக எமது ஒன்றிய உறுப்பினர்கள் பிரிந்து வெவ்வேறு பிரதசங்களுக்குச் சென்றனர். முதலாம் குழு கஹடகஸ்கிலிய முஸ்லிம் பாடசாலையில் மாணவ, மாணவிகளுக்கான ஓர் செயலமர்வை ஏற்பாடு செய்தது. இதில் முஸ்லிம் இளஞ்சமூகம் மேற்கொள்ளும் சவால்களும், அவற்றை கையாழும் முறைகளும் எனும் தொனிப் பொருளில் கருத்தரங்கு நிகழ்த்தப்பட்டது. பாடசாலை நிகழ்வு நடைபெறும் அதே வேளை மற்ற இரு குழுக்களும் பெண்களுக்கான இரு விஷேட பயான் நிகழ்வுகளை அதே ஊரில் நிகழ்த்தின.

நான்காவது குழுவினர் இகிரிகொல்லாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு, அங்குள்ள O/L மாணவர்களுக்கு ஊடகமும், இன்றைய இளம் சமூகமும் எனும் தொனிப்பொருளிலும், O/L மாணவிகளுக்கு பரீட்சை பற்றிய சில ஆலோசனைகள் எனும் தொனியிலும் கருத்தரங்குகளை நடாத்தினர்.

இரண்டாம் நாள் இகிரிகொல்லாவையிலிருந்து வன்னி நோக்கிய பயணம் ஆரம்பமானது. எமது உறுப்பினர்கள் மீண்டும் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். முதலாம் குழு காக்கையங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள O/L மாணவ மாணவிகளுக்கு அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆ என்போர் யார் எனும் தொனியில் கருத்தரங்கு ஒன்றை நிகழ்த்தியது. அது வெள்ளிக்கிழமையாகையால் அன்றைய காக்கையங்குளம் ஜும்ஆப் பள்ளியின் குத்பாப் பேருரையையும், அஸருக்குப் பின் பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்வையும் இக்குழுவினரே பொறுப்பேற்றனர்.

மற்ற மூன்று குழுக்களும் முறையே ஆடுபுலியங்குளம், வாழவைத்த குளம், .... முதலிய ஊர்களில் ஜும்ஆ உரை, அஸருக்குப் பின் பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்வு முதலியவற்றை பொறுப்பேற்று மிகவும் சிறப்பாக நிகழ்த்தி முடித்தனர்.

அன்று மஃரிபுடன் எமது தஃவா சுற்றுலா முடிவடைந்தது.

இறைவா! இத் தஃவா சுற்றுலாவுக்கு பண உதவிகளை வழங்கிய சவூதியைச் சேர்ந்த உம்மு உமர் மற்றும் உம்மு ஸாமிர் ஆகியோருக்கும், இச்சுற்றுலாவுக்கான உதவியைப் பெற்றுத் தந்து, எமது சுற்றுலாவின் தலைமைப் பொறுப்பை ஏற்று சிறந்த முறையில் செயற்பட்ட எமது ஒன்றிய உறுப்பினர் அஷ்ஷேக் ரிஸ்மி (PHD reading) அவர்களுக்கும், அனுராதபுர மாவட்ட நிகழ்வுகளை சிறந்த முறையில் நடாத்த உதவியாய் இருந்த ரஷீதிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர், ஜமாலிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர், கஹடகஸ்கிலிய முஸ்லிம் பாடசாலையின் அதிபர் உட்பட அதன் ஆசிரியர்,இகிரிகொல்லாவ முஸ்லிம் பாடசாலையின் அதிபர் உட்பட அதன் ஆசிரியர் எமது ஒன்றியத்தின் பழைய மாணவர் அஷ்ஷேக் முஜீபர் BA அவர்களுக்கும், வன்னி மாவட்ட நிகழ்வுகளை சிறந்த முறையில் நடாத்த பெரிதும் உதவியாய் இருந்த அஷ்ஷேக் ஸாஜிதீன் (முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்)... காக்கையங்குளம் பாடசாலை அதிபர் உட்பட அதன் ஆசிரியர்கள் மற்றும் ஆடுபுலியங்குளம், வாழவைத்த குளம் முதலிய ஊர்களின் பள்ளித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரினதும் நற்கருமங்களை ஏற்று, அவர்களின் சகல பாவங்களையும் மன்னித்து, மறுமை நாளில் அவர்களை பிர்தவ்ஸ் எனும் சுவனத்தில் நுழைத்துவிடுவாயா!
  

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget