அரபா நோன்பு

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ், சாந்தியும் சமாதானமும் இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மது நபி ஸல் அவர்கள் மீதும் இவ்வுலகத்தார் அனைவர் மீதும் உண்டாவதாக.... ஆமீன்


இறைவனால் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்ட 12 மாதங்களில் யுத்தம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களில் செய்கின்ற அமல்களை நபியவர்கள் ஏனைய காலங்களில் ஈடுபடும் வணக்க வழிபாடுகளை விட அதிகம் விரும்புகிறான் என சிறப்புப்படுத்தி கூறினார்கள். ஏனனில் இந்த நாட்களில் இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகள் எல்லாம் ஒருமித்துக் காணப்படுகிறது.


இந்த பத்து நாட்களில் இருக்கின்ற ஒரு சிறப்பான நாள் தான் அரபா தினமாகிய துல்ஹஜ் ஒன்பதாம் நாள். இத்தினத்தில் ஹஜ் செய்கின்ற ஹாஜிகள் எல்லாம் அரபா மைதானத்தில் ஒன்றுகூடுவார்கள். இத்தினத்தில் தான் அதிகமான அடியார்கள் நரகத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். இதில் ஹாஜிகள் அல்லாத ஏனைய மக்கள் நோன்பு நோற்பது ஒரு சுன்னத்தான வணக்கமாகும்.

عن أبي قتادة أن النبي صلى الله عليه وسلم سئل عن صوم يوم عرفة فقال

يكفر السنة الماضية والباقية

அபூ கதாதா ரழி அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படுகிறது நபி ஸல்-அம் அவர்களிடம் அறபா நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அதுவுமோ கடந்த ஆண்டுக்குரிய பாவங்களையும், வரக்கூடிய ஆண்டுக்குரிய பாவங்களையும் அழித்துவிடும் என சொன்னார்கள் அருமை நாயகம் ஸல்-அம் அவர்கள்.

ஸஹீஹ் முஸ்லிம்.


நோன்பு அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு அமல், அதை பல இடங்களில் அவன் சிறப்புப்படுத்திக் கூறியுள்ளான், இந்த நோன்பிற்கு அல்லாஹ் அளித்திருக்கும் சிறப்பு அளப்பெரியது, ஒரு நாள் நோன்பு பிடிப்பதன் மூலம் சுமார் இரண்டு வருடங்கள் செய்த செய்கின்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இது இறைவன் நமக்கு அளித்திருக்கின்ற ஒரு கொடையாகும்.

மனிதனுடைய ஆயுள் குறைவானதாக இருந்தாலும் இப்படியான நல்லமல்களை செய்கின்ற பொழுது அவன் பல வருடங்கள் வாழ்ந்தது பல நூறு நன்மைகளை செய்தவனை போல் ஆகிவிடுகிறான்.

எனவே இந்த நாளில் நாம் நோன்பு நோற்று மேலும் பல வணக்க வழிபாடுகளை செய்து இறைவனை பிரார்த்தித்து அவனுடைய திருப்பொருத்தத்தை பெற்ற நல்ல மக்களாக வாழ அல்லாஹ் நம்அனைவருக்கும் அருள்புரிவனாக.....

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget