கலாநிதி - துவான் புர்ஹானுத்தீன் ஜாயா வரலாற்றாவணம் (கி.பி 1890-1960)

(தொடர் 04)
 இதனால் முஸ்லிம் விவாக விவாகப்பதிவுச் சட்டம் பற்றி 1929 இல் சட்ட நிரூபண சபையில் கலந்துரையாடி சீர்த்திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டன. சட்டமா அதிபராக இருந்த ணி.ஹி அக்பர் தலைமையில் தேவையான திருத்தங்களை சிபாரிசு செய்ய ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவின் ஓர் உறுப்பினராக டி.பி ஜாயாவும் நியமிக்கப்பட்டார்.

இதன் சீர்த்திருத்தங்கள் அமுல் செய்வதற்குத் தேவையான விதிகளை உருவாக்க, பதிவாளர் நாயகத்தின் தலைமையில் ஒரு குழுவை 1939இல் அரசு நியமித்தது. அக்காலப்பரு வத்தில் அரசாங்க சபையில் அங்கத்தவர்களாக இரு ந்த டி.பி ஜாயாவும், தி.ஞி.ணி அப்துர்றாசிக்கும் உள்ளிட்ட ஐவர் உறுப்பினர்களாக இருந்தனர்.

இதன் சிபாரிசுகளின் அடிப்படையில் தான் 1954 முதல் நடைமுறையில் உள்ள 1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்கச் சட்டத்தின் ஓரங்கமாக முஸ்லிம் விவாக, விவாகரத்து ஆலோசனை சபை ஒன்று நடைமுறைக்கு வந்தது. இலங்கை முஸ்லிம்களின் விவாக, விவாகரத்து சட்டத்தின் அமுலாக்கலில் டி.பி. ஜாயா அவர்கள் பங்கு கொண்டு உழைத்துள்ளதை இதன் மூலம் அறிய முடியும்.

நடைமுறைப்படுத்தப்பட டொனமூர் அரசியல் சீர்த்திருத்தம் இலங்கையின் பெரும்பான்மைக் குடிமக்களையோ சிறுபான்மையினரையோ திருப்திப்படுத்தவில்லை. முஸ்லிம் சிறுபான்மையினரால் தொகுதிவாரியான பிரதிநிதித்துவத்தின் மூலம் தமது ஒரு பிரதிநிதியையேனும் தெரிவு செய்து கொள்ள முடியவில்லை;

இதனால் முஸ்லிம்கள் அரசாங்க சபை அமைப்பில் திருப்தி காணவில்லை. அரசாங்க சபையில் பெரும்பான்மைப் பலத்துடன் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றும் எந்த ஒரு தீர்மானத்தையும் தேசாதிபதியால் ரத்து செய்து விட முடியுமாக இருந்ததால் பெரும்பான்மைக் குடிமக்களான சிங்கள மக்களும் அரசாங்க சபை அமைப்பில் திருப்தி காணவில்லை. ஆதலால் டொமினியன் அந்தஸ்து தருமாறு கோரி இலங்கைக் குடிமக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கை பற்றி ஆராய சோல்பரி பிரபுவின் தலைமையில் இலங்கை வந்த குழுவினர் அரசியல் சீர்திருத்தம் ஒன்றை விதந்துரைத்தனர். சோல்பரி சீர்திருத்தம் 1945/11/09 ஆம் திகதி அரசாங்க சபையின் அங்கீகாரத்துக்காக வாக்களிப்புக்கு விடப்பட்டது.

முஸ்லிம் உறுப்பினர் அனைவரும் பிரேரணைக்கு சார்பாக வாக்களித்தனர். அச்சந்தர்ப்பத்திலே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை தத்தம் பேச்சில் டி.பி ஜாயா அவர்களும் ஏ.ஆர்.எம்.ஏ. ராசிக் பரீத் அவர்களும் முன்வைத்தனர். டி.பி ஜாயா அவர்கள் பேசும் போது பின்வரும் கருத்தை வலியுறுத்தினார். “இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த அகில இலங்கை முஸ்லிம் லீக் இலங்கையின் பல பகுதிகளையும் சேர்ந்த முஸ்லிம் பிரமுகர்களுடன் இம்மசோதா பற்றிக் கலந்துரையாடி, அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

ஆதலால் முஸ்லிம் சமூகத்தின் முழு ஆதரவுடன் நான் பேசுகின்றேன். இலங்கையின் அரசியல் சுதந்திரத்துக்காக தமது நலன்களையும் வரப்பிரசாதங்களையும் தியாகம் செய்தேனும் எல்லா வகையான நடவடிக்கையையும் எடுக்க முஸ்லிம் சமூகம் தயாராக உள்ளது. சுதந்திரத் துக்காகப் போராடுவது முஸ்லிம்களின் மரபும் கடமை யுமாகும்” அச்சபையின் சபை முதல்வரான ஷி.தீ.ஞி.ளி. பண்டாரநாயக்கா உரையாற்றும் போது இந்நாட்டு மக்களிடையே ஐக்கியத்தை உருவாக்கி சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள டி.பி. ஜாயாவின் உரை பெரிதும் உதவும் என்று பாராட்டினார்.

வெள்ளை அறிக்கை ஒன்றால் மறுசீரமைக்கப்பட்ட சோல்பரிப் பிரபுவின் சிபாரிசினடிப்படையிலான 1946-05-15யின் மசோதா அரசாங்க சபையில் அங்கீகரிக்கப்பட்டது. இதனடிப்படையில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியற் கட்சிகள் உருவாக்கப்பட்டன. 1946 செப்டம்பரில் ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கப்பட்ட போது டி.பி. ஜாயாவின் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் லீக் சங்கத்தினரும். தி.ஞி.ணி.தி. றாசிக் தலைமையிலான அகில இலங்கை சோனகர் சங்கத்தினரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டனர்.

இதன் மூலம் இலங்கை முஸ்லிம்கள் தேசிய அரசியல் நீரோட்டத்தில் பெரும்பான்மை மக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டனர். பெரும்பான்மை மக்கள் முஸ்லிம் மக்களிடம் வைத்திருந்த நம்பிக்கையினூடாக பொரலை, கலகெதர, பலாங்கொடை, ஹரிஸ்பத்துவ போன்ற சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த தேர்தல் தொகுதிகளில் இருந்தும் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கதாகும்.

முஸ்லிம் உலக அரங்கில் டி.பி ஜாயா

டி.பி ஜாயா அவர்களின் வாலிபப் பருவகாலத்தில் உலகமகா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வரலாற்றுப் பாடத்தைத் தனது பட்டப்படிப்பு பரீட்சைக்கு ஒரு பாடமாக எடுத்த டி.பி ஜாயா உலக மகா யுத்தம் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் ஊன்றிக் கவனித்தமை புதுமை அல்ல. யுத்தத்தின் முடிவில் முஸ்லிம் உலகுக்குத் தலைமை தாங்கிய துருக்கி தோல்வி அடைந்தது.

அதன் கீழ் இருந்த முஸ்லிம் நாடுகளும் பிரதேசங்களும் பறிக்கப்பட்டு துருக்கி அநாதை நிலைக்குத் தள்ளப்பட்டது. பிரித்தானிய கூட்டுப்படை அதிலும் திருப்தியடையாது உலக முஸ்லிம்களின் ஆன்மீகத் தலைமைத்துவத்தை தகர்த்து, முஸ்லிம்களின் ஒற்றுமையைக் குலைத்து. முஸ்லிம் நாடுகளைச் சிதறச் செய்யும் நோக்கில் கிலாபத்தை ஒழிக்கவும் நடவடிக்கை எடுத்தது. அதற்காக துருக்கியில் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றிய தேசியவாதியான முஸ்தபா கமாலின் கிலாபத் ஒழிப்பு முயற்சிக்கு தனது ஆசிர்வாதத்தை வழங்கியது. முஸ்தபா கமாலின் தலைமையில் இயங்கிய தேசிய அசெம்பிளி 1924-03-03 ஆம் திகதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி கிலாபத்தை ஒழித்தது.

 
முதலாம் உலகமாக யுத்தத்தில் பிரிட்டிஷாரின் வெற்றிக்காக இந்தியா பத்து லட்சம் போர்வீரர்களையும், வருடம் தோறும் பத்துகோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதியையும் வழங்கி பிரிட்டனின் வெற்றிக்கு வழிகோலியது. அதனால் இந்தியக் குடிமக்களின் அபிலாசைகளைப் பிரிட்டன் நிறைவேற்ற வேண்டும் என்று இன, மத, மொழி வேறுபாடின்றி அனைத்து இந்தியரும் கருதினர். இதனால் கிலாபத்தை மீளமைக்கும் போராட்டம் ஒன்றை இந்தியக் குடிமக்கள் முன்னெடுத்தனர்.

கிலாபத் இயக்கம் என்று வழங்கப்பட்ட இப்போராட்டத்தை மெளலானா முகம்மதலி முடுக்கிவிட்டார். இவ்வியக்கத்துக்கு மகாத்மா காந்தி தலைமை தாங்கினார்.

இலங்கையில் கிலாபத் இயக்கத்தை டி.பி. ஜாயாவே முன் எடுத்தார். கிலாபத்தை ஒழிக்க எடுக்கும் முயற்சிக்கு எதிராக தனது ஆதரவாளர்களின் துணையுடன் பல கூட்டங்களை நடாத்தினார். 1928 இல் மெட்ராஸில் நடைபெற்ற கிலாபத் இயக்கக் கூட்டத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இவ்வாறு உலக முஸ்லிம்களின் அபிலாசைகளுடன் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். கிலாபத்தை மீள் அமைப்பதற்கு குரல் கொடுத்த கூட்டங்களில் முஸ்லிம்களுடன் சிங்களப் பிரமுகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 1915 இல் ஏற்பட்ட சிங்கள முஸ்லிம் கலவரத்தினால் கசந்து போயிருந்த இரு சமூகங்களும் ஓரணியாகத் திரண்டு செயற்படும் வாய்ப்பை கிலாபத் இயக்கம் பெற்றுக் கொடுத்தது. 1905 இல் இடம் பெற்ற துருக்கித் தொப்பி விவகாரம் இலங்கை முஸ்லிம்கள் மருதானையில் ஒரு பேரணியாகத் திரண்டு, முஸ்லிம்களின் நலனுக்குக் குரல் கொடுக்க ஓர் இயக்கமாகச் செயற்பட வழிகோலியது. அதன்பின் ஜாயா முன் எடுத்த கிலாபத் இயக்கம் தான் முஸ்லிம்களை ஒரு தலைமையிக் கீழ் ஒன்றிணைத்து குரல் கொடுக்க வழியமைத்தது. கிலாபத் இயக்கம் தன் இலட்சியத்தில் தோல்வியடைந்தாலும், இலங்கையில் முஸ்லிம்கள் தம் தனித்துவத்தைப் பேணிக்காத்ததற்கும் சிங்கள, தமிழ் மக்களும் முஸ்லிம்களும் ஓரணியில் திரண்டு செயற்பாடுவதற்குமான உணர்வுகளை கொடுத்தது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது, துருக்கியரிடம் சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதாகவும், அறபு மண்ணை அறேபியரிடமே ஒப்படைப்பதாகவும் பிரிட்டன் தலைமையிலான நேசப் படையினர் வாக்களித்தனர். இவ்வாக்குறுதியை நம்பிய அறேபியர் தம் சமயத்தவர்களான துருக்கியருக்கு எதிராகப் போராடி, நேசப் படையினரின் கையைப் பலப்படுத்தினர். போரில் வெற்றி பெற்றதும், இவ்வுதவிக்குப் பிரதியுபகாரம் செய்வதற்குப் பதிலாக, அறபுப் பிரதேசங்களை பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் தமக்கிடையே பங்கு போட்டுக் கொண்டது மட்டுமல்லாமல், முஸ்லிம்களின் புண்ணிய தலமும் அறேபியர்களின் தாயகமுமாகிய பலஸ்தீனை யூதர்களுக்குத் தாரைவார்த்து, யூத நாடு ஒன்றை உருவாக்க, தாம் அமைத்துக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை மூலம் ஏற்பாடு செய்தனர். இதனால் முஸ்லிம் உலகெங்கும் கடும் எதிர்ப்பலைகள் தோன்றின.

பலஸ்தீன குடிமக்களை அகதிகளாக்கி, அவர்களின் தாயகத்தை அபகரித்து, இஸ்ரவேலர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அயோக்கியத்தனம் இலங்கை முஸ்லிம்களின் உள்ளத்தைப் பெரிதும் பாதித்தது. டி.பி. ஜாயா உட்பட்ட பிரமுகர்கள் பலர் நாடளாவிய ரீதியில் இக்கொடுமை பற்றி மக்களை அறிவுறுத்தினர். தமது எதிர்ப்பைக் காண்பிப்பதற்காக மருதானை ஜூம்ஆ மஸ்ஜித் முன்றலில் ஒரு பெருங்கூட்டத்தை நடாத்தினர். இக்கூட்டத்திற்கு அரசாங்க சபை உறுப்பினராக இருந்த சேர் முஹம்மத் மாக்கான் மாகார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் டி.பி. ஜாயா பின்வரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

“முஸ்லிம்களின் இம்மாபெரும் பேரணி ஆங்கிய அமெரிக்க

கொமிஷன் பலஸ்தீன பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையைக் கடுமையாகக் கண்டித்து நிராகரிக்கின்றது. அத்துடன் பலஸ்தீன சுதந்திரமான ஓர் அறபு நாடாக அங்கீகரிக்குமாறு கோருகிறது”

பலஸ்தீனைப் பங்குபோட்டு இஸ்ரேலுக்கு பகிர்ந்தளிக் கும் ஸியனிஸ்ட்களின் முயற்சியைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட் டது. இக்குழுவின் தலைவராக டி.பி. ஜாயாவும், காரியதரிசியாக ணி.வி.ணி. கலீல் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். மலைநாட்டிலும் கரைநாடுகளிலும் உள்ள பல நகர்களில் பொதுக்கூட்டங்களைக் கூட்டி முஸ்லிம்கள் தம் எதிர்ப்பைக் காட்டினர். இந்நடவடிக்கைக ளில் முஸ்லிம்களுடன் சிங்களவர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நடவடிக்கைகள் பற்றி விலீylon ளிaily னிலீws 1946 மே மாத வெளியீடொன்றில் எழுதிய போது “பலஸ்தீன் பிரச்சினை முஸ்லிம்களது அனுதாபத்தை மட்டுமன்றி முழுமையான சிங்கள மக்களின் அனுதாபத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது. அறபு மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பஸ்தீன யூதர்களைக் குடியேற்றம் சதித்திட்டம் ஒன்றுள்ளது. வெறுமையான நிலப்பரப்புள்ள அவுஸ்திரேலியா, கனடா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் அவர்களை ஏன் குடியேற்ற முடியாது. பலஸ்தீனில் அவர்களைக் குடியேற்றுவது மிகப்பெரும் அநியாயம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் எஜமான்களாக இருந்து ஆட்சி செய்து வரும் பிரித்தானியருக்கு எதிராகவே கிலாபத் ஒழிப்பு விடயத்திலும் பலஸ்தீனைப் பங்குபோடும் விடயத்திலும் இலங்கை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அணிதிரண்டார்கள். இது காலனித்துவ ஆட்சிக்கு எதிரான உணர்வுகளைத் தோற்றுவித்து சுதந்திரம் பெற வேண்டும் என்ற தாக்கத்தையும் இலங்கை மக்களிடம் ஏற்படுத்த உதவியது.

இருபதாம் நூற்றாண்டின் நான்காம் தசாப்தத்தில் இந்திய உபகண்டத்தில் பாகிஸ்தான் என்றொரு புதிய நாடு உதயமாகியது. அல்லாமா இக்பாலின் சிந்தனையில் உருவான இந்நாடு காஇதே அஃழம் முஹம்மதலி ஜின்னாவின் செயற்திறனில் 1947 இல் உதயம் பெற்றது. இதற்கான போராட்டம் ஒன்று இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் இருந்தே ஆரம்பமாகியது. இந்தியாவில் ஆட்சிசெய்த காலனித்துவ ஆட்சியாளர்களான ஆங்கிலேயரதும் இந்தியாவின் பெரும்பான்மை மக்களான இந்துக்களதும் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் பாகிஸ்தான் பிரதேசம் என்று கணிக்கப்படாத இந்திய பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்களின் ஒத்துழைப்பின்மைக்கு மத்தியிலும் பாகிஸ்தான் தோன்றியது. ஜின்னாவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக்கின் பாகிஸ்தான் போராட்டம், இலங்கை முஸ்லிம்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஜனாப் டி.பி. ஜாயாவின் தலைமையில் இயங்கிய அகில இலங்கை முஸ்லிம் லீக் பாகிஸ்தான் போராட்டத்தை இலங்கையின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலிக்கச் செய்தது. பொதுக்கூட்டங்களை நடாத்தியும், துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டும் இலங்கை மக்களை பாகிஸ்தான் கோரிக்கைக்கு சார்பானவர்களாக்க முஸ்லிம் லீக் முயற்சித்தது. 1946 செப்டம்பரில் ஒரு தினத்தில் இந்திய முஸ்லிம் லீக் ஹர்த்தாலை நடத்தியது. அத்தினத்தில் இலங்கையில் கடைகளை மூடிவிடுமாறு அகில இலங்கை முஸ்லிம் லீக் விடுத்த அழைப்புக்கு இலங்கை மக்கள பூரண ஒத்துழைப்பு நல்கினர். இலங்கையின் பல பகுதிகளிலும் இருந்த சட்டத்தரணிகள், வர்த்தகர்கள் இளைஞர்கள் இவ்வழைப்புக்கு ஒத்துழைப்பு நல்கினர். டி.பி ஜாயாவின் வழிநடத்தலால் நாட்டின் பல பகுதிகளில் இருந்த முஸ்லிம் லீக்கின் கிளைகள் உந்தப்பட்டன. உள்நாட்டின் பல பகுதிகளில் பாகிஸ்தானின் கோரிக்கையை ஆதரித்து கூட்டங்கள் நடத்தப்பட்டன. கொழும்பில் நடைபெற்ற பொதுக்கூட்ட மைதானத்துக்கு ஜின்னா மைதானம் என்று பெயர் சூட்டினர். இக்கூட்டத்துக்கு வருகை தந்த டி.பி ஜாயாவை இலங்கையின் ஜின்னா என்றழைத்து மக்கள் உற்சாக மிகுதியால் அவரை மேடைக்குத் தூக்கி வந்தனர்.கண்டியில் முஸ்லிம் லீக் நிறுவிய மண்டபத்துக்கு ஜின்னா ஹோல் என்று பெயர் சூட்டப்பட்டது.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget