![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgM7wXbdGhDbxz0K6k64diae71oStRGab4htYWkFyu7-7DoJLd7U5gKcjkUB1hHjEaLalDP7IvtB6D3-4e2_vixgwvaSSiPpdXwltvp-OQX4Q1HzyGqOOR2yj2sE2eOdU1yiUPEQqJcW6F4/s320/1+%25281%2529.jpg)
வருடா வருடம் எமது ஒன்றியத்தின் சார்பாக இலங்கையின் பல்வேறு பிரதேசங்ளில் நடைபெறும் இஸ்லாமிய கருத்தரங்கின் ஓர் கிளை, இம்முறையும் பதுளை மாவட்ட பஸ்ஸரை நகரில் இடம்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...
பஸ்ஸரை நகரில் அமைந்துள்ள BD/பஸ்ஸரை முஸ்லிம் மகா வித்தியாலயம் தமது மாணவர்களுக்கான சிறந்த கல்வியை வழங்குவதில் மும்முரமாக செயற்படும் ஓர் பாடசாலையாகும். அதன் அதிபர் M. இல்யாஸ் உட்பட அனைத்து ஆசிரியர்களும் ரமழான் மாதத்தில் ஓர் இஸ்லாமிய கருத்தரங்கை நிகழ்த்த அனுமதி கேட்ட போது உடனே அனுமதி வழங்கினர்.
இக் கருத்தரங்கிற்கு தரம் 9, 10, 11 ஆகிய மாணவ, மாணவியரில் சுமார் 45 பேர் கலந்து கொண்டனர். இதில் எமது ஒன்றியத்தினால் தொகுக்கப்பட்ட இஸ்லாமிய வாழ்வியல் வழிகாட்டி எனும் நூலே பாடநெறியாக கற்பிக்கப்பட்டது.
சுமார் 10 நாட்கள் (40 மணித்தியாலங்கள்) நடைபெற்ற இக் கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவ, மாணவியருக்கு சிறிய பரீட்சை ஒன்றை நடாத்தி, முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பணப் பரிசில்களும், சான்றிதழ்களும், ஏனைய கலந்து கொண்ட அனைவருக்கும் இஸ்லாமிய வாழ்வியல் வழிகாட்டி எனும் நூலும், சான்றிதழும் வழங்கப்பட்டது. மற்றும் பாடசாலை வளர்ச்சிக்காக சிறு நிதி உதவியும் வழங்கப்பட்டது.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.