ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – அகீதா, நாள் 06)பாடம் - 06
6.1. இறைமைக் கோட்பாடு (தவ்ஹீதுல் உலூஹிய்யா).
6.1.1 இறைமைக் கோட்பாடு.
இறைமைக் கோட்பாடு என்பது ஒரு மனிதன் அல்லாஹ்வை நெருங்குவதற்காக தன் செயற்பாடுகள் அனைத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே ஆக்கிக்கொள்வதைக் குறிக்கும், அல்லது சுருக்கமாகக் கூறுவதாயின் வணக்கங் களில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல் என்றும் கூறலாம்.
அல்லாஹ் கூறுகிறான், “ஆகவே அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஏற்படுத்தாதீர்; (அப்படிச் செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும், துரத்தப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்.” (அல்குர்ஆன் 17:39)
இறைமைக் கோட்பாடுதான் அனைத்து விடயங்களை விடவும் சிறந்தது. மனிதனின் சீரான நிலையை நிர்ணயிக்கக்கூடியது. இதற்காகவேண்டியே அல்லாஹ் மனிதர்களையும், ஜின்களையும் படைத்தான். அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட அனைத்துத் தூதர்களும் இதனையே போதித்தார்கள்.
அல்லாஹ் கூறுகிறான், “மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்” (அல்குர்ஆன் 16:36)
வணக்கம் என்பது அல்லாஹ் ஏவிய வெளிப்படையான, மறைமுகமான சொற்கள், செயற்பாடுகள் என்பவற்றைச் செய்வதைக் குறிக்கின்றது. அதாவது வெளிப்படையான, மறைமுகமான, சொற்கள், செயற்பாடுகள் என்பவற்றில் எவற்றையெல்லாம் அல்லாஹ் பொருந்திக் கொள்வானோ அவை அனைத்திற்கும் வணக்கம் என்று சொல்லப்படும். அல்லாஹ் மனிதர்கள், ஜின்கள் என்பவற்றைப் படைத்த நோக்கமும் இதுதான்.
அல்லாஹ் கூறுகிறான், “இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.” (அல்குர்ஆன் 51:56)
வணக்கவழிபாடுகள் பல வகைப்படும். அவற்றை இறைவனே குறிப்பிடுகிறான்.
பிரார்த்தனை புரிதல்: அல்லாஹ் கூறுகிறான், “ஆகவே, காஃபிர்கள் வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து) அழையுங்கள்.” (அல்குர்ஆன் 40:14), ““அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.” (அல்குர்ஆன் 72:18)
பாதுகாவல் தேடுதல்: “(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.” (அல்குர்ஆன் 113:01), “(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.” (அல்குர்ஆன் 114:01)
நிவாரணம் வேண்டுதல் : “(நினைவு கூறுங்கள்:) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.” (அல்குர்ஆன் 08:09).
அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடல்: நீர் கூறும்: மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.” (அல்குர்ஆன் 06:162), “எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.” (அல்குர்ஆன் 108:02)
வணக்கமானது பயம், எதிர்பார்ப்பு போன்று உள்ளத்தாலும் ஏற்படும். அல்லது அல்லாஹ்வை துதிப்பது, குர்ஆன் ஓதுவது போன்று நாவாலும் நிகழும். அல்லது தொழுகை, ஹஜ் போன்று உடல் உறுப்புக்களாலும் ஏற்படும்.
அல்லாஹ்வுக்கு மாத்திரமே நிறைவேற்றிட வேண்டிய இவ்வணக்கங்கள் அனைத்தையும் பிறருக்கு நிறைவேற்றிடும் போது அல்லாஹ்வின் அனைத்து வல்லமைகளும் பிறருக்கும் இருப்பதாய் எண்ணி, அவர்களோடு அல்லாஹ்வை இணைவைத்த தண்டனையைப் பெற்றுத் தந்திடும்..
6.2. இறைமைக் கோட்பாட்டில் இணைவைத்தலின் தோற்றம்.
மனிதனின் வாழ்க்கை இவ்வுலகில் தவ்ஹீதை  அடிப்படையாகக்  கொண்டு  துவங்கியதா? அல்லது ஷிர்க்கை அடிப்படையாகக் கொண்டு துவங்கியதா? மனிதன் முதலில் ஓரிறைக் கொள்கையாளனாக இருந்து பின்னர் பல தெய்வ வழிபாடு செய்பவனாக மாறினானா? அல்லது பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஓரிறைக்  கொள்கைக்கு மாறினானா? என்பதை நாம்  முதலில்  அறிய வேண்டும்.  இதற்குத் தெளிவான விளக்கத்தைத்  திருகுர்ஆன் கூறுவதைப்  பார்ப்போம்.  மனிதர்கள்  ஒரே சமுதாயமாகவே இருந்தனர்” (அல்குர்ஆன்2:213)
இந்த திருவசனத்தின்படி மனிதன் முதலில் தவ்ஹீது (ஏகத்துவம்) வாதியாகவே இருந்திருக்கிறான் என்பது தெளிவகின்றது. இதே கருத்தைத் தான் ஹதீஸும் வலியுறுத்துகிறது.நான் அடியார்களைத் தூயவர்களாகவே படைத்தேன். ஆனால் ஷைத்தான் தவ்ஹீதை  விட்டும்  அவர்களைத்  திசைதிருப்பி விட்டான். அவர்களுக்கு (என்னால்) அனுமதிக்கப்பட்டிருந்தவைகளை ஷைத்தான் ஹராமானது  என்று காட்டிவிட்டான்என்று அல்லாஹ் கூறுவதாக நபி r அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இயாழ் இப்னு அஹ்மது,  நூல்: முஸ்லிம் 2865.
ஆதம் (அலை) அவர்களது காலம் முதல், நூஹ் (அலை) அவர்களது காலம் வரை 10 நூற்றாண்டுகளாக மனிதன் ஓரிறைக் கொள்கைவாதியாகவே இருந்தான். பின்னர்தான் பல தெய்வ வணக்க வழிபாடுகளில் மூழ்கிவிட்டான் என்பதை மேற்கூறிய இறை வசனமும், நபி மொழியும் தெளிவு படுத்துகின்றன.
ஆதம் u அவர்களிலிருந்து மனிதன் ஓரிறைக் கொள்கையுடையவனாகவே இருந்து வந்தான். (தவ்ஹீத்) ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்த நல்லடியர்களை அளவுக்கு அதிகமாகக் கண்ணியப்படுத்தி, கடவுள் நிலைக்கு அவர்களை உயர்த்தியதுதான் ஷிர்க்” (இணை வைத்தல்) தோன்ற மூல காரணமாக இருந்தது. இந்த உண்மையைத் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள்! மேலும் வத்து’ ‘சுவாவு  ஹூஸு’ ‘க்’ ‘நஸ்ர்ஆகிய தெய்வங்களை நீங்கள் விட்டு விடாதீர்கள்!என்று அவர்கள் (நூஹ் நபியின் சமூகத்தினர்) கூறினார்கள் (அல்குர்ஆன் 71:23)

இந்தத் திரு வசனத்தில் கூறப்பட்ட வத்து’ ‘சுவாவு’ ‘யஹூஸு’ ‘க்’ ‘நஸ்ர்  ஆகியோர் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த நல்லடியார்கள் என்றும், அவர்கள்  மரணமடைந்த பின்னர் அவர்களையே மக்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தி விட்டனர் என்றும், ஆரம்பத்தில் நினைவுச் சின்னம் எழுப்பினர்; பின்னர் அடுத்த தலைமுறையினர் அவர்களையே வணங்க முற்பட்டு விட்டனர் என்றும் இப்னு அப்பாஸ் t அவர்கள் விளக்கம் தந்துள்ளார். (நூல்: புஹாரி- தப்ஸீர் பகுதி)
அன்று நூஹ் u அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் இணைவைக்க முற்பட்டதற்குக் காரணம் எதுவோ, அதே காரத்தினால் தான் இன்றும் பெரும் பகுதியினர் ஷிர்க்கில் வீழ்ந்து கிடக்கின்றனர். நபி r தம் உம்மத்தினர் ஷிர்க்கில் விழக்கூடாது என்று எவ்வளவோ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அத்தனையையும் மீறி நல்லடியார்கள் மரணித்த பின் அவர்களின் அடக்கஸ்தலத்தில் பல தகாத செயல்களை செய்யத் துவங்கிவிட்டனர்.
எத்தனையோ பள்ளிவாசல்கள் நிர்வாகம் நடத்தப் போதிய பொருளாதாரம் இன்றி திணறிக் கொண்டிருக்க, கப்ருகளை நிர்வாகம் செய்யப் பொருளாதாரம் குவிந்து கொண்டிருக்கிறது. அல்லாஹ்வை வணங்க நூறு பேர் வருகின்றனர் என்றால் அவனது அடிமைகளை வணங்க ஆயிரக்  கணக்கானோர் குவிந்த வண்ணமாக உள்ளனர்.
கேள்வி இல 06
எந்தப் பெயர் கொண்ட தெய்வங்களை நூஹ் நபியின் காலத்தில் மக்கள் வணங்கினார்கள்?

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget