புனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-05-01) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி



 குத்பா (2020/05/01) 

இடம்: மக்கா (மஸ்ஜிதுல் ஹராம்) 

குத்பா நிகழ்த்தியவர்: அஷ்ஷைக் உஸாமா கைய்யாத் 

இன்றைய குத்பாவிலிருந்து... 

இன்றைய குத்பாவின் தலைப்பாக சுருங்கக் கூறின் நோன்பு என்பது நோன்பாளியின் உள்ளத்தை மென்மைப்படுத்துகிறது, அவனது உணர்வை செம்மைப்படுத்துகிறது. அவ்வாறு நன்கு செம்மைப்படுத்தி அவனை தனிநபர் என்ற நிலையில் இருந்து அன்பு, இரக்கம், தாராளத் தன்மை என்பவற்றின்பால் முழுமையாக மாற்றி விடுகிறது. 

தனது குத்பாவின் ஆரம்பத்தில் சங்கையான, அதிகம் நல்லருள் புரியக்கூடிய அல்லாஹ்வை புகழ்ந்து அவன்தான் ரமலானுடைய நோன்பை உயர்ந்த நோக்கங்களுக்காக கடமையாக்கினான், அதேபோன்று நபிகளார் மீது சலவாத் சொல்லி அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு நல்லுபதேசம் செய்தார். 

அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்விடம் நீங்கள் மீட்டப்படும் நாளை அஞ்சிக் கொள்ளுங்கள். பின்னர் ஒவ்வொரு ஆத்மாவும் அவை சம்பாதித்தவற்றிக்கு (கூலி) முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்: 2:281) 

நிச்சயமாக மனிதன் என்பவன் உணர்வுகளோடும் தூண்டுதல்களோடும் பின்னிப்பிணைந்து காணப்படுகிறான். அதன்மூலம் சிலவேளை நேரான வழி, நல்லவற்றில் இருந்து தடம்புரண்டு விடுகிறான். அதேபோன்று அந்த உணர்வுகள், தூண்டுதல்கள் மூலம் சாலிஹான அல்லாஹ்வின் அடியார்களோடு சேர்ந்து விடுகிறான். அதனால் அவன் பூரணமான கூலியை பெற்றுவிடுகிறான். எனவேதான் ஒவ்வொருவரும் நல்ல வழிமுறைகளின்பால் தேவையுடையவர்களாக இருக்கிறார்கள். அதனைக்கொண்டு நேர்வழி பெற்று அல்லாஹ் எதிர்பார்க்கும் நல்ல மனிதர்களாக மாற முடியும். அந்த நேரான வழியின்பால் செல்லக்கூடியவையாக நோன்பு காணப்படுகிறது. சரியான இலக்கை அடைவதற்கு பாரிய அளவில் இது உதவி புரிகிறது. மனித உள்ளத்தை புதுப்பித்து கெட்டவையை நல்லதாக மாற்றி நல்லதை இன்னும் உயர்வானதாக சீர்செய்ய நன்கு பலம் மிக்க தூண்டியாக நோன்பு காணப்படுகிறது. 

இந்த நோன்பு அனைத்து உலக மக்களையும் சூழ்ந்துகொள்வதற்காக வருடாவருடம் மாறிமாறி வருகிறது. அதிகமான மக்களை நல்ல வாழ்க்கையின் பக்கம் திசைதிருப்புகிறது. அதிகமான நலவுகளை, நேரான வழியை, உள்ளச்சத்தை தன்னகத்தே கொண்டுவருகிறது. இயலுமானவரை வீண்பராக்குகளை விட்டும் மனிதர்களை தடுக்கிறது. இந்த நல்ல மாற்றங்களால் ஒரு மாதகாலம் மனிதன் முழுமையாக பயிற்றுவிக்கப்படுகிறான். இதன் மூலம் அவனிடம் உயர்ந்த குணங்கள் குடிகொள்கிறது, நலவு செய்ய விரும்புகிறான், நல்ல வழிகளின்பால் அவனது உள்ளம் நகர்கிறது. தனது பாதையில் உயர்வடைந்து செல்கிறான். 

ரமலான் மாதத்தின் முப்பது நாட்களிலும் இந்த மாற்றம் தொடராக நடைபெறுகிறது. தொடர்ச்சியான இந்த செயற்பாடுகளின் மூலம் அவன் பலப்படுத்தப்படுகிறான், உறுதியடைகிறான். இவ்வாறு சிறந்த வழிமுறைகளில் நகர்வதனால் அவனிடம் இந்த மாற்றங்கள் ரமலான் மாதம் அவனைவிட்டும் கடந்த பின்னரும் அவனது வாழ்வில் நிலைபெற்று விடுகின்றன. இந்த மாற்றம் அவனுக்கு மிகவும் தேவையானதாக, அவசியமானதாக இருக்கிறது. இந்த நோன்பின் மிகப்பெரிய எதிர்பார்ப்பான இறையச்சம் அவனது உள்ளத்தில் விதைக்கப்படுறது. மனோஇச்சைகளை விட்டும் சாந்தியடைகிறது. 



இரண்டாம் குத்பா... 

நிச்சயமாக நோன்புக்கென்று பல உயர்ந்த இலக்குகள் காணப்படுகிறன. அவையாவன: தியாக உணர்வின்பால் மனித உள்ளத்தை பயிற்றுவித்தல். தியாகம், தர்மம் செய்ய தூண்டுதல். வாழ்வின் கஷ்டங்களை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுத்தல். துன்பங்களில் பொறுமையை கடைப்பிடித்தல். உள விருப்பம், மனித உடலின் தேவைகளை நோன்பாளிக்கு கற்றுக்கொடுக்கிறது. நோன்பு என்பது மனித உடலுக்கு ஆகுமானதை தடுத்து விடுகிறது. அது பசியின் வலியை தாங்கிக்கொள்ள வழியமைக்கிறது. மனிதனது உணர்வுகளை பக்குவப்படுத்துகிறது. 

இந்த ரமலான் மாதத்தில் அடைந்துகொண்ட தியாக உணர்வின் அழகிய வெளிப்பாடுகள் யாதெனில் நோன்பாளியின் உள்ளத்தை மென்மைப்படுத்துகிறது, அவனது உணர்வை செம்மைப்படுத்திகிறது. அவ்வாறு நன்கு செம்மைப்படுத்தி அவனை தனிநபர் என்ற நிலையில் இருந்து அன்பு, இரக்கம், தாராளத் தன்மை என்பவற்றின்பால் முழுமையாக மாற்றி விடுகிறது. அடுத்த மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை உணர்த்துகிறது, அவனுக்கும் தேவைகள் இருக்கிறது. அவனுக்கு நலவுகள் செய்ய வேண்டும், ஏதாவது கொடுத்து உதவ வேண்டும். இதற்கு பகரமாக அல்லது இதைவிட உயர்ந்ததை அல்லது நல்ல, அழகிய கூலிகளை அல்லாஹ் எனக்கு தருவான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் தனது உள்ளத்துக்கு விருப்பமானதை கொடுக்க வேண்டும். இப்படியான தியாக உணர்வின் இறுதி முடிவு இன்பமானதாக இருக்கும். இப்படியான கொடுக்கும் பண்பு உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 

நபியவர்கள் கூறினார்கள்: “நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி 1904, முஸ்லிம் 1151). 

எவர் இந்த ரமலானின் தியாக உணர்வின் படிப்பினைகளை பெற்றுக்கொள்கிறாரோ அவர் பல நலவுகளை அடைந்து கொண்டுவிட்டார். தனது வாழ்நாளின் ஏனைய காலங்களில் கிடைக்காத பல வழிமுறைகளின்பால் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார். தன்னையும் தனது செல்வங்களையும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி அர்ப்பணித்திருக்கிறார், நபிகளாரிலும் அவர்களை பின்தொடர்ந்துவந்த சஹாபாக்களிலும் அழகிய தியாக உணர்வின் படிப்பினைகள் பல இருக்கின்றன. அவர்கள்தான் சிறந்த உதாரணத்திற்கு தகுதியானவர்கள். 

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget