ரவ்ழதுல் இல்ம் - 2023 (பாடம் : பிக்ஹ், நாள் : 08)10. பஜ்ர், ஜும்ஆ, பெருநாள் போன்ற இரண்டு ரக்அத்துக்கள் கொண்ட தொழுகையாக இருந்தால் இரண்டாவது                 ஸஜ்தாவிற்குப் பின்னால் தனது வலது காலை நாட்டி இடது காலை விரித்து அதன் மீது உட்கார்ந்து, இரு கைகளையும் தனது தொடைகளிலும் முட்டுக்கால்களிலும் படுமாறு வைத்துக் கொள்வார்.

 

            மூன்று அல்லது நான்கு ரக்ஆத் தொழுகையை முடித்துக்கொள்ளும் அமர்வாக இருந்தால் (அத்தஹிய்யத்தில்)  இடதுகாலை வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி, வலதுகாலை நாட்டி தரையில் அமர வேண்டும்.

 

            அவருடைய கையின் சின்னவிரல், மோதிர விரல் ஆகியவற்றை மடித்து, பெரு விரலை நடு விரலுடன் வளையல் அமைப்பில் சேர்த்து, ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டி வலது முட்டுக்காலில் வைப்பார். அவரது இடது கையை இடது தொடை, முட்டுக்காலின் மீது வைத்துக்கொள்வார். பின்பு இவ்விருப்பில் அத்தஹிய்யாத் ஓதுவார்.

التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُه.

பொருள் : காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும்    ஸலாம் உண்டாகட்டும், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன்.

 

மேலும், முஹம்மத் ள  அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

 

            பின்பு நபி ள அவர்கள் மீது ஸலவாத் கூறி பிரார்த்தனைகளை செய்து      ஸலாம் கூறி தொழுகையை முடித்துக்கொள்வார்.

 

            மஃரிப் போன்ற மூன்று ரக்அத் தொழுகையாகவோ அல்லது ளுஹர், அஸர், இஷா போன்ற நான்கு ரக்அத்துக்களைக் கொண்ட தொழுகையாகவோ இருந்தால் ஏற்கனவே கூறப்பட்ட அத்தஹிய்யாத்தை ஓதுவார். பின்பு தனது முட்டுக்கால்களால் ஊன்றி, இருகைகளையும் தனது தோட்புயத்தளவிற்கு உயர்த்தி الله أكبر என்று கூறியவராக (மூன்றாவது ரக்அத்திற்காக) எழும்புவார்.

 

 11. கடைசி இருப்பில்; இடது காலை வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி, வலது காலை நாட்டி தரையில் அமர வேண்டும். முன் கூறிய அத்தஹிய்யாத்தை ஓதியதன் பின் பின்வரும் ஸலவாத்தைக் கூறுவார். அதேபோன்று இரண்டு, மூன்று ரக்அத்கள் கொண்ட தொழுகையை முடிக்கின்ற போதும் இதனையே ஓத வேண்டும்.

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ ، وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ ، وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ، إِنَّكَ حَمِيدٌ مَجِيد.

பொருள் : இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல், முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியமிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும், கண்ணியமிக்கவனும் ஆவாய்.

 

மேலும் நான்கு விடயங்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவார்:

اَللَّهُمَّ إِنِّيْ أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ ، وَمِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّال.

பொருள் : எங்கள் இரட்சகனே! நரக வேதனையிலிருந்தும், கப்ருடைய வேதனையிலிருந்தும், வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

 

அத்தஹிய்யாத்திலும் ஸூஜூதிலும் அவருக்கு தேவையான பிரார்த்தனைகளை கேட்கலாம்.

 

12. பின்னர் السلام عليكم ورحمة الله وبركاته என்று வலது, இடது பக்கங்களுக்குத் தலையை திருப்பி ஸலாம் சொல்வார்.

 

13. அனைத்து செயற்பாடுகளையும் அமைதியாக செய்து கொள்ளவேண்டும்.

 

 

தொழுகை முடிந்த பின் ஓதும் துஆக்கள்

 

أَسْـتَغْفِرُ الله، أَسْـتَغْفِرُ الله، أَسْـتَغْفِرُ الله.

اللّهُـمَّ أَنْـتَ السَّلامُ ، وَمِـنْكَ السَّلام ، تَبارَكْتَ يا ذا الجَـلالِ وَالإِكْـرام.

لا إلهَ إلاّ اللّهُ وحدَهُ لا شريكَ لهُ، لهُ المُـلْكُ ولهُ الحَمْد، وهوَ على كلّ شَيءٍ قَدير، اللّهُـمَّ لا مانِعَ لِما أَعْطَـيْت، وَلا مُعْطِـيَ لِما مَنَـعْت، وَلا يَنْفَـعُ ذا الجَـدِّ مِنْـكَ الجَـد

لا إلهَ إلاّ اللّه وحدَهُ لا شريكَ لهُ، لهُ الملكُ ولهُ الحَمد، وهوَ على كلّ شيءٍ قدير، لا حَـوْلَ وَلا قـوَّةَ إِلاّ بِاللهِ، لا إلهَ إلاّ اللّـه، وَلا نَعْـبُـدُ إِلاّ إيّـاه لَهُ النِّعْـمَةُ وَلَهُ الفَضْل وَلَهُ الثَّـناءُ الحَـسَن، لا إلهَ إلاّ اللّهُ مخْلِصـينَ لَـهُ الدِّينَ وَلَوْ كَـرِهَ الكـافِرون.

اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ.

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (1) اللَّهُ الصَّمَدُ (2) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (3) وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

﴿قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ ١ مِن شَرِّ مَا خَلَقَ ٢ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ٣ وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِی ٱلۡعُقَدِ ٤ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ٥

﴿قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ ١ مَلِكِ ٱلنَّاسِ ٢ إِلَـٰهِ ٱلنَّاسِ ٣ مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ ٤ ٱلَّذِی يُوَسۡوِسُ فِی صُدُورِ ٱلنَّاسِ ٥ مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ ٦

  

﴿ٱللَّهُ لَاۤ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلۡحَیُّ ٱلۡقَيُّومُۚ لَا تَأۡخُذُهُۥ سِنَةࣱ وَلَا نَوۡمࣱۚ لَّهُۥ مَا فِی ٱلسَّمَـٰوَ ٰتِ وَمَا فِی ٱلۡأَرۡضِۗ مَن ذَا ٱلَّذِی يَشۡفَعُ عِندَهُۥۤ إِلَّا بِإِذۡنِهِۦۚ يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡۖ وَلَا يُحِيطُونَ بِشَیۡءࣲ مِّنۡ عِلۡمِهِۦۤ إِلَّا بِمَا شَاۤءَۚ وَسِعَ كُرۡسِيُّهُ ٱلسَّمَـٰوَ ٰتِ وَٱلۡأَرۡضَۖ وَلَا يَـُٔودُهُۥ حِفۡظُهُمَاۚ وَهُوَ ٱلۡعَلِیُّ ٱلۡعَظِيمُ ٢٥٥﴾ 

اللَّهُمَّ أعِنِّي عَلَى ذِكْرِكَ، وشُكْرِكَ، وحُسْنِ عِبَادَتِكَ

.

سُبْحَانَ اللَّهِ، الحَمْدُ للهِ، اللهُ أكْبَرُ   33 தடவைகள

 

 

لاَ إلَهَ إلاَّ اللهُ وَحْدَهُ لا شَرِيْكَ لَهُ، لَهُ المُلْكُ ولَهُ الحَمْدُ، وهُوَ عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ.

 

 மறதிக்கான ஸஜ்தா 

இது மூன்று சந்தர்ப்பங்களில் நிகழும்

தொழுகையின் செயற்பாடுகளில் ஏதாவது ஒன்றை அதிகரித்தல். (உதாரணம் : ருகூஃ இரண்டு தடவைகள் செய்தல், ஒரு ரக்அத்தை அதிகரித்தல்)

தொழுகையின் வாஜிபில் ஒன்றை விடுதல். (உதாரணம் : முதல் அத்தஹிய்யாத் இருப்பை விட்டுவிடல்).

தொழுகையில் சந்தேகம் ஏற்படல். (உதாரணம் : ரக்அத்துகளின்  எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்படல்) இவ்வாறான நிலமைகளில் குறைந்த எண்ணிக்கையை கணக்கில் எடுக்க வேண்டும்.

 

            இவ்வாறான மூன்று நிலைகளிலும் தொழுகையில் ஸலாம் கொடுக்க முன்னர் ஸஜ்தா செய்ய வேண்டும். ஸஜ்தா ஸஹ்வின் போது ஸூஜூதில் ஓத வேண்டிய துஆவை ஓதுதல்.

 

குர்ஆன் ஓதலுக்கான ஸூஜூது

            அல்குர்ஆனை ஓதும் போது ஸஜ்தாவுடைய இடம் வந்தால் ஸஜ்தா செய்வது சுன்னத்தாகும். இது அல்குர்ஆனில் 15 இடங்களில் இடம் பெறுகின்றது. ஸூஜூதில் ஓதும் துஆவை இதில் ஓதலாம்.

 

நபி ள அவர்கள் ஸஜ்தாச் செய்யும் வசனத்தை எங்களுக்கு ஓதிக் காட்டும்போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள். எங்களுக்கு நெற்றியை வைக்க இடமில்லாத அளவுக்கு நாங்கள் அனைவரும் ஸஜ்தாச் செய்வோம். (ஆதாரம் - புஹாரி : 1075, முஸ்லிம் :  575)

 

நன்றிக்கான ஸூஜூது

நபி ள அவர்களுக்கு சந்தோஷம் ஏற்படுத்தும் செய்தியை கேட்டால் அல்லது நன்மாராயம் கூறப்பட்டால், இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக உடனே ஸூஜூது செய்வார்கள் (ஆதாரம் - அபூதாவூத் : 2774, திர்மிதீ : 1578)

 

இதிலும் ஸூஜூதில் ஓதும் துஆவை ஓதலாம்.

 

குறிப்பு : குர்ஆன் ஓதலுக்கான சுஜுது, நன்றிக்கான சுஜுது செய்வதற்கு வுழூ அவசியம் கிடையாது.

 

தொழுகையை முறிக்கும் காரியங்கள், தொழுகையில் தவிர்ந்து கொள்ளவேண்டிய அம்சங்கள்

தொழுகையை முறிக்கும் காரியங்கள்

தொழுகையின் ருக்னையோ, வாஜிபையோ, ஷர்தையோ வேண்டுமென்றே விடுவது.

வுழு முறிவது.

வேண்டுமென்றே பேசுவது, சிரிப்பது.

வேண்டுமென்றே சாப்பிடுவது, குடிப்பது.

தொழுகையுடன் தொடர்புபடாத மேலதிக செயற்பாடுகள்.

 

 

தொழுகையில் தவிர்ந்து கொள்ளவேண்டிய அம்சங்கள்

வானத்தை பார்த்தவராக தொழுதல்.

தேவையில்லாமல் கண்ணை மூடியவராக தொழுதல்.

அங்கும் இங்கும் பார்த்தவராக தொழுவது.

மலசலத்தை அடக்கியவராக தொழுவது.

உணவு தயாராக இருக்கின்ற போது பசித்தவரக தொழுவது.

இடுப்பில் கைவைத்தவராக தொழுவது.

அதிகமாக அசைதல்

விரலில் நெட்டி முறித்தல்.

அத்தஹியாத்து, நடு இருப்பில் மேற்குறிப்பிட்ட முறையல்லாத வேறு முறைகளில் இருத்தல்.

தேவையில்லாமல் சாய்ந்து தொழுதல்.

ஸூஜூது செய்யும் இடத்தை மாத்திரம் அடையாளம் வைத்து தொழ கூடாது.

 

ஜமாஅத் தொழுகை

ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவமும் சட்டமும்

அல்லாஹ் கூறுகிறான் : 'தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஸகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்' (அல்குர்ஆன் - 02 : 43)

 

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ன கூறினார்கள் : 'யார் மறுமை நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திக்க விரும்புகிறாரோ அவர் தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றட்டும். அல்லாஹ் உமது நபிக்கு நேர்வழிகளை காட்டியிருக்கிறான். தொழுகையை உரிய நேரத்தில் தொழுவது அவன் காட்டிய வழிகளில் ஒன்றாகும். பள்ளிக்கு பிந்துபவர் வீட்டில் தொழுவதை போன்று நீங்களும் வீட்டில் தொழுதால் உமது நபியின் வழிமுறையை தவறவிட்டவராகி விடுவீர். எவர் நல்ல முறையில் சுத்தமாகி பள்ளிக்கு சென்றால் அவருடைய ஒவ்வொரு எட்டிற்கும் அல்லாஹ் அவருக்கு ஒரு நன்மை வழங்கி, அவரது அந்தஸ்தை உயர்த்தி, பாவத்தையும் மன்னிக்கிறான். முனாபிக் என அறியப்பட்டவர்களை தவிர வேறு எவரும் ஜமாஅத் தொழுகைக்கு பிந்தமாட்டார்கள்';  (ஆதாரம் - முஸ்லிம் : 654)

 

நபி ள அவர்கள் கூறினார்கள் : 'ஜமாஅத்தாக தொழுவது தனித்து தொழுவதை விட இருபத்தி ஏழு மடங்கு நன்மை தரக் கூடியது'. (ஆதாரம் - புஹாரி : 645, முஸ்லிம் : 650)

 

ஜமாஅத் தொழுகையின் சட்டம்

            தொழுகையை ஜமாஅத்துடன் பள்ளிவாயலில் தொழுவது கட்டாயக் கடமையாகும்.

 

நபி ள அவர்களிடம் ஒரு பார்வையற்றவர் வந்து யாரசூலல்லாஹ் என்னை பள்ளிவாயலுக்கு அழைத்துச் செல்ல யாருமில்லை. அதனால் நான் வீட்டில் தொழலாமா? என கேட்டார். அதற்கு நபி ள அவர்கள் உமக்கு அதான் கேட்கிறதா? என கேட்க அம்மனிதர் ஆம் என்றார். அப்போது நபியவர்கள் அதற்கு நீர் பதிலளிப்பீராக (பள்ளிக்கு வருவீராக) என்றார்கள். (ஆதாரம் - முஸ்லிம் : 653)

 

 

பெண்களுக்கான ஜமாஅத் தொழுகையின் சட்டம்

            பெண்களுக்கு ஜமாஅத் தொழுகை கடமையில்லை. ஆனாலும் அவர்கள் பள்ளிக்கு வருவதை தடுப்பது கூடாது. அவர்கள் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே மிகச் சிறந்ததாகும்.

 

ஜமாஅத் தொழுகையை விட்டும் பிந்துபவர்களுக்கான சட்டம்

ஜமாஅத் தொழுகை விட்டும் பிந்துபவர்கள் இரு கூட்டத்தினர்

முதல் கூட்டத்தினர்                    : மிகக் கடுமையான நோய், உயிராபத்து போன்ற ஏதாவது காரணத்திற்காக  ஜமாஅத் தொழுகை விட்டும் பிந்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டவர்கள். இவர்கள் தனித்து தொழுதால் ஜமாஅத் உடன் தொழுத நன்மையை பெற்றுக் கொள்வார்கள்.

இரண்டாம் கூட்டத்தினர்         : எவ்வித காரணமும் இன்றி ஜமாஅத் தொழுகையை விடுபவர்கள். இவர்கள் ஒரு வாஜிபை விட்ட குற்றத்திற்கு ஆளாகின்றனர்.

 

மஃமூமுடன் (பின்பற்றித் தொழுபவர்) தொடர்புடைய சில சட்டங்கள்

பின்பற்றித் தொழுபவர் ஒரு போதும் இமாமை முந்தக்கூடாது. (இமாம் ருகூஃ செய்யாமல் ருகூஃ செய்யக் கூடாது, இமாம் ஸுஜூது செய்யாமல் ஸுஜூது செய்யக் கூடாது.)

இமாம் ருகூஃவிலிருந்து எழுமுன் மஃமூம் தொழுகையில் சேர்ந்தால் அந்த ரக்அத்தை அடைந்தவராகக் கருதப்படுவார். அவ்வாறில்லாத பட்சத்தில் அடுத்த ரக்அத்துக்காக இமாம் எழும்வரை காத்திருக்கத் தேவையில்லை. இமாம் எந்த நிலையில் இருக்கின்றாரோ அதில் போய் சேர்ந்து கொள்ள வேண்டும். அது ருகூஃ அல்லது அதற்கு முன் என்றால் அது ஒரு ரக்அத்தாக கணிக்கப்படும். இல்லாவிடில் கணிக்கப்படமாட்டாது.

  

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget