ரவ்ழதுல் இல்ம் - 2023 (பாடம் : பிக்ஹ், நாள் : 06)

 


தொழுகையின் முக்கியத்துவமும், தொழுகையை விடுபவனின் சட்டமும்

 

தொழுகையின் முக்கியத்துவம்

அல்லாஹ்; கூறுகிறான் : 'தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஸகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள். ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்' (அல்குர்ஆன் - 02 : 43)

 

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள் : 'இஸ்லாம் ஐந்து (தூண்கள்) மீது நிறுவப்பட்டுள்ளது' (அவை)

01. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் ள அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழி அளிப்பது

02. தொழுகையைக் கடைப்பிடிப்பது.

03. ஸகாத் வழங்குவது.

04. ஹஜ் செய்வது

05. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது. (ஆதாரம் - புஹாரி 08, முஸ்லிம் : 21)

 

 

தொழுகை என்றால் என்ன?

          ஆரம்ப தக்பீர் முதல் ஸலாம் கொடுக்கும் வரை குறிப்பிட்ட வார்த்தைகள், செயற்பாடுகளை கொண்டுள்ள வணக்கமே தொழுகையாகும்.

 

 

தொழுகை எப்போது கடமையாக்கப்பட்டது?

          நபி அவர்கள் ஹிஜ்ரத் செல்வதற்கு முன்னர் மிஃராஜ் பயணத்தில் ஐவேளை தொழுகை கடமையாக்கப்பட்டது.

 

 

தொழுகையை விடுபவனின் நிலை

          தொழுகையை யார் மறுக்கிறாரோ அவர் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறியவராவார், இதிலிருந்து அவர் தௌபா செய்யவில்லையாயின் அவரை கொலை செய்ய வேண்டும் என்பதில் அனைத்து அறிஞர்களும் ஏகோபித்த கருத்தில் உள்ளனர். தொழுகை கடமையானது என்பதை அறிந்தும் அதிலே பொடுபோக்காக இருக்கிறாரோ அவர் பெரும்பாலான அறிஞர்களின் கருத்தின்படி காபிராவார்.

 

நபி ள அவர்கள் கூறினார்கள் : 'முஸ்லிமுக்கும் இறை மறுப்பாளனுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதாகும்' (ஆதாரம் - முஸ்லிம் : 82)

 

அதானும், இகாமத்தும்

அதான், இகாமத்தின் சட்டமும் முக்கியத்துவமும்

          ஐவேளை தொழுகைகளை குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும், அதற்கு முன்னர் நிறைவேற்றினால் அத்தொழுகை இறைவனிடத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, தொழுகை கடமையாக்கப்பட்ட போது மக்கள் உரிய நேரங்களைப் பற்றி அறியாதவர்களாக இருந்தார்கள். எனவே நபியவர்களும் ஸஹாபாக்களும் ஏது செய்யலாம் என்று கலந்துரையாடிய போது இறைவன் அப்துல்லாஹ் பின் ஸைத் ன அவர்களுக்கு அதானை கனவிலே தோன்றச் செய்தான், அதனை நபியவர்கள் அங்கீகரித்தார்கள். மேலும் ஹிஜ்ரி முதலாம் வருடம் 'அதான்' கடமையாக்கப்பட்டது.

  

          அதான், இகாமத் என்பன பர்ளு கிபாயாவாகும், இவை இரண்டும் இஸ்லாத்தின் அடையாளங்களாகும், இவைகள் ஆண்களுக்கு பிரயாணத்தின் போது கூட கடமையாக்கப்பட்டுள்ளது, இதனை ஊரிலே வாழும் அனைவரும் விட்டுவிட்டால் அவர்கள் குற்றவாளியாக மாறிவிடுவார்கள். இதனை விட்டதற்காக வேண்டி அவர்களுடன் யுத்தம் செய்ய வேண்டும்.

 

          நபி ள அவர்கள் எந்தக் கூட்டத்தினரோடாவது போரிடுவதாக இருந்தால் களத்தில் ஸுபஹ் நேரம் வரும் வரை எங்களைப் போரில் ஈடுபடுத்த மாட்டார்கள். ஸுபஹ்;   நேரம் வந்ததும் கவனிப்பார்கள். எதிர் தரப்பிலிருந்து அதான் சொல்லும் சத்தம் கேட்டால் தாக்காமலிருப்பதும் கேட்கவில்லையானால் திடீர்த் தாக்குதல் நடத்துவதும் நபி ள அவர்களின் வழக்கமாக இருந்தது. (ஆதாரம் - முஸ்லிம் : 610)

 

அதான் கூறுவதன் சிறப்பும், அதனை கூறுபவரின் சிறப்பும்

'அதான் கூறப்படும் சத்தத்தை கேட்கக் கூடிய ஜின்கள், மனிதர்கள் மற்றவை அனைத்தும் மறுமை நாளில் சாட்சி சொல்லுமென நபி ள அவர்கள் கூறினார்கள்'. (ஆதாரம் - புஹாரி : 609)

 

நபி ள அவர்கள் கூறினார்கள் : 'மறுமை நாளில் அதான் சொல்பவர்கள் மனிதர்களில்  கழுத்து நீண்டவர்களாக இருப்பார்கள்'. (ஆதாரம் - முஸ்லிம் : 387)

 

 

 

அதான் சொல்பவருக்கு (முஅத்தினுக்கு) இருக்க வேண்டிய பண்புகள்

உயர்ந்த குரலில், மிக அழகாக அதான் கூறுபவராக இருக்க வேண்டும்.

நம்பிக்கையானவராக இருக்க வேண்டும்.

கால நேரங்களை சரியாக அறியக்கூடியவராக இருக்க வேண்டும்.

 

 

 

 

அதான் கூறும் முறை

 

பொருள்

அரபு மூலம்

அல்லாஹ் மிகப் பெரியவன்

الله أكبر- الله أكبر

அல்லாஹ் மிகப் பெரியவன்

الله أكبر- الله أكبر

வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை

أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله

முஹம்மத் (ஸல் ) அல்லாஹ்வின் தூதர் என நான் சாட்சி கூறுகிறேன்

 

أشهد أن محمدا رسول الله- أشهد أن محمدا رسول الله

தொழுகையின் பக்கம் விரைந்து வாருங்கள்

 

 

حي على الصلاة- حي على الصلاة

வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்

 

حي على الفلاح- حي على الفلاح

அல்லாஹ் மிகப்பெரியவன்

الله أكبر- الله أكبر

வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை

 

 

لا إله إلا الله

 

 

 

குறிப்பு :

          பஜ்ர் தொழுகையில் حَيَّ عَلَى الْفَلَاحِ என்ற வாக்கியத்திற்குப் பிறகு                   الصلاة خير من النوم  என்று இரண்டு முறை கூறவேண்டும்.

 

பொருள் : தூக்கத்தை விட தொழுகை மேலானது.

 

அதானுக்குப் பதில் கூறல்

          அதான் கூறக் கேட்டால் முஅத்தின் சொல்வதைப் போன்று பதில் சொல்வது சுன்னத்தாகும்.

 

حَيَّ عَلَى الصَّلاَةِ حَيَّ عَلَى الْفَلَاحِ என்ற வாத்தைகளை கேட்டால் لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّه என்று சொல்ல வேண்டும்.  

         

பொருள் : நன்மை செய்வதற்குரிய சக்தியும், பாவத்தை விட்டும் திரும்புதலும் அல்லாஹ்வை நாடாமல் நடைபெறாது.

 

அதானுக்கு பதில் கூறல்

பதில் கூறும் முறை

அதான்

الله أكبر الله أكبر

الله أكبر الله أكبر

الله أكبر الله أكبر

الله أكبر الله أكبر

أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله

أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله

أشهد أن محمدا رسول الله- أشهد أن محمدا رسول الله

أشهد أن محمدا رسول الله- أشهد أن محمدا رسول الله

لا حول ولا قوة إلا بالله- لا حول ولا قوة إلا بالله

حي على الصلاة- حي على الصلاة

لا حول ولا قوة إلا بالله- لا حول ولا قوة إلا بالله

حي على الفلاح- حي على الفلاح

الصلاة خير من النوم

الصلاة خير من النوم

الصلاة خير من النوم

 الصلاة خير من النوم

الله أكبر- الله أكبر

الله أكبر- الله أكبر

لا إله إلا الله

لا إله إلا الله

 

 

அதானுக்குப் பின்னால் துஆ ஓதல்

          அதான் சொல்லப்பட்ட பின் நபி ள அவர்கள் மீது ஸலவாத் சொல்வது சுன்னத் ஆகும்.

நபி ள கூறினார்கள் : 'முஅத்தின் அதான் சொல்வதை கேட்டால் நீங்களும்  அவ்வாறே மீண்டும் சொல்லுங்கள், பின்பு என் மீது ஸலவாத் சொல்லுங்கள்'. (ஆதாரம் - முஸ்லிம் : 384)

 

ஸலவாத் சொன்ன பின் பின்வரும் துஆவை ஓத வேண்டும்.

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَه

பொருள் : முழுமையான இந்த அழைப்புக்குச் சொந்தக்காரனே. நிலையான தொழுகைக்கும் உரியவனே முஹம்மத் ள அவர்களுக்கு வஸீலா எனும் பதவிiயும், சிறப்பையும் வழங்குவாயாக. இன்னும் நீ அவர்களுக்கு வாக்களித்த புகழுக்குரிய அந்தஸ்தில் (இடத்தில்) அவர்களை எழுப்புவாயாக!

 

நபி ள அவர்கள் கூறினார்கள் : யார் அதான் முடிந்ததும் (மேல் குறிப்பிட்ட) துஆவை ஓதுகிறாறோ அவருக்கு எனது பரிந்துரை அவசியமாகி விட்டது. (ஆதாரம் - புஹாரி : 614)

 

          'அதானுக்கும் இகாமத்திற்கும் மத்தியில் கேட்கும் பிராத்தனை நிராகரிக்கப்படமாட்டாது' என நபி ள அவர்கள் கூறினார்கள்;. (ஆதாரம் - அபூதாவுத் : 521, திர்மிதி : 212)

 

          மேற்குறிப்பிடப்பட்ட அதானுடைய ஒழுங்கு முறைக்கு மாற்றமாக எதையும் அதிகரிக்கவோ, குறைக்கவோ கூடாது.

 

இகாமத் கூறும் முறை

அல்லாஹ் மிகப் பெரியவன்

 

و الله أكبر- الله أكبر

வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை

 

أشهد أن لا إله إلا الله

முஹம்மத் (ஸல் ) அல்லாஹ்வின் தூதர் என நான் சாட்சி கூறுகிறேன்

 

 

أشهد أن محمدا رسول الله

தொழுகையின் பக்கம் விரைந்து வாருங்கள்

 

 

حي على الصلاة

வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்

 

حي على الفلاح

தொழுகையை நிலை நாட்டப்ட்டு விட்டது

 

 

قد قامت الصلاة قد قامت الصلاة

அல்லாஹ் மிகப்பெரியவன்

الله أكبر- الله أكبر

வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை

 

لا إله إلا الله

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

          இகாமத் சொன்னதன் பின் தொழுகையை ஆரம்பிக்கும் வரை குறிப்பிட்ட எந்த துஆவும் மார்கத்தில் கிடையாது.

 

 

 

 

 


கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget