ரவ்ழதுல் இல்ம் - 2023 (பாடம் : அகீதா, நாள் : 05)

 



பித்அத் (நூதன அனுஷ்டானங்கள்)

                     பித்அத் என்பது, மார்க்கம் (அல்குர்ஆனும், ஸூன்னாவும்) காட்டித்தராத நம்பிக்கை, சொல், செயற்பாடுகளை மார்க்கம் என்று எண்ணி செய்வதனை குறிக்கின்றது.

 

          எனவே இஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்ட பின்னரும் அதில் மார்க்கத்தின் அடிப்படையில் தோற்றம் பெறும் மேலதிகமானவைகள் அனைத்தும் நூதனமாகப் பார்க்கப்படும். இதில் பல வகைகள் காணப்படுகின்றன. அவை ஆளுக்கு ஆள், கூட்டத்திற்கு கூட்டம், நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். இவற்றை அறிவிலும் பேணுதலிலும் படித்தரம் குறைந்த சில  அறிஞர்கள் பரப்பி வந்துள்ளனர். தற்போதும் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். மக்களும் அவர்கள் மீது கொண்டுள்ள மரியாதையின் காரணமாக அவற்றின் விபரீதமறியாது கண்மூடித்தனமாக அவர்களைப் பின்பற்றுகின்றனர். ஆரம்பத்தில் நலவைக் கருதி இவை ஆரம்பிக்கப்பட்டாலும் அவை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவைகளாகும்.

 

இஸ்லாத்தில் பித்அத்தின் தோற்றம்

1. பித்அத் தோற்றம் பெற்ற காலம்

          ஷைகுல் இஸ்லாம் இப்னு  தைமிய்யா  அவர்கள் கூறுகிறார்கள் : இஸ்லாமிய அறிவியலிலும், வணக்கங்களிலும் ஏற்பட்ட பொதுப்படையான பித்அத்கள் நேர்வழி பெற்ற கலீபாக்களான குலபாஉர் ராஷிதீன்களின் ஆட்சிக்காலத்தின் இறுதிப் பகுதியில் தோற்றம் பெற்றது. இதனை பற்றி நபியவர்கள் எச்சரிக்கையும் விடுத்திருந்தார்கள். 'எனக்குப் பின்னர் உங்களில் யாரெல்லாம் உயிர்வாழ்கிறாரோ அவர்கள் அதிகமான பிளவுகளைக் காண்பார்கள். அந்நேரத்தில் என்னையும் என்னைத் தொடர்ந்து வரும் நான்கு கலீபாக்களின் வழிமுறைகளையும் அவசியம் கடைபிடியுங்கள்'. (ஆதாரம் -அபூதாவுத் : 4607, திர்மிதி : 2626, இப்னுமாஜா : 42)

 

          ஸஹாபாக்களில் சிலர் உயிருடன் இருக்கும் போதே கவாரிஜ்கள்,  கத்ரிய்யாக்கள், முர்ஜியாக்கள், ஷீயாக்கள் போன்ற பித்அத்வாதிகள் தோற்றம் பெற்றனர். இவர்களுக்கெதிராக ஸஹாபாக்கள் போர்கொடி தூக்கினார்கள். இதன் பின் முஃதஸிலாக்கள் என்போர் தோற்றம் பெற்று முஸ்லிம்களுக்கு மத்தியில் பாரிய குழப்பங்களை விளைவித்தார்கள். இவர்களால் இஸ்லாமிய மார்க்கத்தில் மிதமிஞ்சிய பகுத்தறிவுவாதமும், தன் விருப்பப்படி செயற்படும் போக்கும்                                     தலைதூக்கி தாண்டவமாடியது. பின்னர் சிறந்த நூற்றாண்டுகளுக்குப் பின் சூபித்துவமும், கப்றுகளை கட்டும் முறையும் தோற்றம் பெற்றது. இவ்வாறே காலம் செல்லச் செல்ல புதிய பித்அத்கள் தோன்ற ஆரம்பித்தன.

 

 

2. பித்அத்கள் தோற்றம் பெற்ற பிரதேசங்கள்

          பித்அத்கள் வௌ;வேறு இஸ்லாமிய பிரதேசங்களில் தோற்றம் பெற்றன.        ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் இது பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள் :

 

          நபித்தோழர்கள் வாழ்ந்து, அறிவையும், இறைவிசுவாசத்தையும் நட்டிவிட்டுச் சென்ற முக்கியமான பிரதேசங்கள் மக்கா, மதீனா, கூபா, பஸரா (ஈராக்), ஷாம்     (ஸிரியா) முதலியவைகளாகும். இவற்றிலிருந்தே அல்குர்ஆன், ஸூன்னா இஸ்லாமிய சட்டம், வணக்கத்தோடு தொடர்புபட்ட ஏனைய இஸ்லாமிய கலைகள் தோற்றம் பெற்றன.

 

          இதே பிரதேசங்களிலிருந்துதான் இஸ்லாமிய அடிப்படை விடயங்களில் புதிதான விடயங்களை உட்புகுத்தும் பிரிவுகளும் தோன்றின. ஷீயாக்களும், முர்ஜியாக்களும் கூபா பிரதேசத்திலும், கத்ரிய்யாக்கள், முஃதஸிலாக்கள் போன்றோர் பஸரா,            ஷாம் ஆகிய பிரதேசங்களிலிருந்தும், ஜஹ்மிய்யாக்கள் ஹுராஸான் (ஆப்கானிஸ்தான் பகுதிகள்) பிரதேசத்திலிருந்தும் தோன்றி உலகின் பல்வேறு பிரதேசங்களில் தமது பித்அத்களை அறிமுகம் செய்து அவை விரிவடைய வழிசெய்தார்கள். உஸ்மான் ன அவர்கள் கொலை செய்யப்பட்ட பின் கவாரிஜ்கள் தோற்றம் பெற்றனர். சிறந்த முதல் மூன்று சமூகங்களிலும் இப்பிரதேசங்கள் இஸ்லாமிய அடிப்படையில் கைவைத்து சீர்கெட்டுக்கொண்டிருந்த வேளை மதீனா பிரதேசம் மாத்திரம் மேற்குறிப்பிட்டவாறான எவ்வித பித்அத்களும் தோன்றாமல் சீரான நிலையிலேயே இருந்தது.

 

பித்அத்கள் தோற்றம் பெறுவதற்கான காரணங்கள்

          பித்அத்கள், வழிகேடுகள் போன்றவற்றில் விழுந்திடாமல் இருக்க நாம் அல்குர்ஆன், ஸஹீஹான நபிமொழிகள் பக்கம் சார்ந்திருக்க வேண்டும்.

 

இப்னு மஸ்ஊத் ன  அவர்கள் கூறினார்கள் : நபி ள அவர்கள் ஓர் கோட்டை வரைந்து இது அல்லாஹ்வுடைய பாதை என்றார்கள். பின்னர் இடப் பக்கமும், வலப்பக்கமும் பல கோடுகளை வரைந்து, இவை வேறு பாதைகள். இதன் ஒவ்வொரு பாதைக்கும் மக்களை அழைப்பதற்காக ஷைத்தான் இருக்கிறான் எனக் கூறி விட்டு பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை ஓதிக்காண்பித்தார்கள். 'இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்'. (அல்குர்ஆன் - 06 : 153). (ஆதாரம் - முஸ்னத் அஹ்மத் :  4142, ஸுனன் அத்தாரமீ : 204)

           

 

இவற்றுள் பின்வரும் காரணங்களை சுருக்கமாக நோக்கலாம்.

1.     மார்க்க சட்டங்களை அறியாதிருத்தல்.

2.     மனோ இச்சையைப் பின்பற்றல்.

3.     தனிமனிதர்களையும், அவர்களது சிந்தனைகளையும் பின்பற்றுவதில் பிடிவாதமாய் இருத்தல்.

4.     இறை நிராகரிப்பாளர்களுக்கு ஒப்பாக தமது மார்க்க விடயங்களை ஆக்கிக்கொள்ளல்.

 

          பெரும்பான்மையான முஸ்லிம்கள் பிற மதக் கலாச்சாரமான பிறந்த தினக் கொண்டாட்டம், முக்கியத் தினக் கொண்டாட்டம், விளக்கேற்றல், கப்ரில் அடக்கம் செய்யப்பட்டோரிடம் பிரார்த்தனை புரிதல், உலமாக்களை அளவு கடந்து நேசம் கொள்ளல் போன்றவற்றை செய்வதனால் அவர்களை அறியாமலே பித்அத் எனும் வழிகேட்டில் வீழ்கின்றனர்.

 

பித்அத்தின் வகைகள்

          இஸ்லாத்தில் பித்அத்கள் எனப்படுவது முக்கிய இரு வகைகளுக்குள் உள்ளடங்குகின்றன. அவை வருமாறு :

 

1.     நம்பிக்கை மற்றும் சொல் சார்ந்த பித்அத்கள். இவை நாம் முன்னர் பார்த்த ஜஹ்மிய்யாக்கள், முஃதஸிலாக்கள், ஷீயாக்கள் போன்ற வழிகெட்ட பிரிவினரின் கொள்கைகளைக் குறிக்கிறது.

2.     வணக்கம் சார்ந்த பித்அத்கள். இது அல்லாஹ் கடமையாக்காதவைகள் மூலம் அவனை வணங்க முற்படுவதைக் குறிக்கிறது. அவை வருமாறு :

 

1அடிப்படையற்ற வணக்கம் : இஸ்லாம் கூறாத ஓர் வணக்க வழிபாட்டை மேற்கொள்ளல். உதாரணம் : இஸ்லாம் காட்டித் தராத தொழுகையைத் தொழல்  (உதாரணம் : தஸ்பீஹ் தொழுகை), இஸ்லாம் காட்டித் தராத நோன்பை நோற்றல் (உதாரணம் : பராஅத் நோன்பு), இஸ்லாம் காட்டித் தராத தினங்களைக் கொண்டாடுதல் (உதாரணம் : மீலாத் விழாக் கொண்டாட்டம்)

2மேலதிகமாக சேர்க்கப்பட்ட வணக்கம் : இஸ்லாம் கடமையாக்கிய வணக்கத்தில் மேலதிகமாக ஒன்றைச் சேர்த்தல். (உதாரணம் : லுஹர், அஸர் போன்ற 4 ரக்அத் தொழுகையை 5 ஆக தொழல்).

3.       ஒழுங்குமுறை தவறிய வணக்கம் : இஸ்லாம் காட்டித் தந்த முறையில் ஓர் வணக்கத்தை செய்யாமல் வேறுவிதமாக அவற்றை செய்ய முனைதல்.     (உதாரணம் : இஸ்லாம் சொல்லித் தந்த துஆக்களை கூட்டாக சப்தமிட்டு ஓதுதல், ஐவேளை தொழுகைக்குப் பின்னும், சபை கலையும் போதும் ஸலவாத் ஓதுதல், தன்னை வருத்திக்கொண்டு வணக்கங்களில் ஈடுபடல்).

 

 

 

4.       நேரத்தை குறிப்பாக்கிய வணக்கம் : இஸ்லாம் குறிப்பிடாத நேரங்களிலும், காலங்களிலும் செய்யப்படும் வணக்கங்கள். (உதாரணம் : ஷஃபான் மாத  15ம் இரவை நின்று வணங்குவதிலும், அன்றைய தினம் நோன்பு நோற்பதிலும் குறிப்பாக்குதல்).

 

 

நல்ல பித்அத்கள், கெட்ட பித்அத்கள் பற்றிய விளக்கம்

நபி ள அவர்கள் கூறினார்கள், நிச்சயமாக ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும் (ஆதாரம் - முஸ்லிம் : 867)

 

          மேற்கூறப்பட்ட நபிமொழிக்கிணங்க பித்அத்தை நல்லது, கெட்டது என வகை பிரிப்பது இஸ்லாத்திற்கு முரணான அம்சமாகும். ஏனெனில் ஒட்டுமொத்த பித்அத்களும் வழிகேடுகள் என ஹதீஸில் தெளிவாக கூறப்பட்ட பின்னர் அதில் விதிவிலக்கைத் தேடுவது முற்றிலும் முரணான அம்சமாகும்.

 

          இமாம் இப்னு ரஜப் ; அவர்கள் கூறுகிறார்கள் : ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும் என்ற நபியவர்களின் கூற்று ஜவாமிஉல் கலிம் (குறைந்த சொற்களில் நிறைய கருத்துக்களைப் பொதிந்த பொது விதி) எனும் வகையைச் சார்ந்தது. இதிலிருந்து எந்த ஒன்றையும் எமக்கு பிரித்து நோக்க முடியாது. ஏனெனில் இது நபியவர்களின் மற்றோர் கூற்றான, 'மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக யார் உருவாக்குகிறாரோ அது இரத்துச் செய்யப்படும்' (ஆதாரம் - புஹாரி : 2697, முஸ்லிம் : 1718) எனும் நபிமொழியின் விரிவான கருத்திற்கு ஒத்திருக்கிறது. நம்பிக்கை சார்ந்த விடயங்களிலோ, அல்லது வெளிப்படையான, உள்ரங்கமான சொல் செயல் சார்ந்தவைகளிலோ புதிதாக ஒன்றை உருவாக்கி, அதனை இஸ்லாத்தோடு இணைப்பது வழிகேடாகும். இஸ்லாம் இதை விட்டும் தூரமானது. (நூல் - ஜாமிஉல் உலூமி வல் ஹிகம் : 2-128)

 

பித்அத்தை இவ்வாறு வகைப்படுத்துபவர்கள் பின்வருவனவற்றை நல்ல பித்அத்களுக்கு ஆதாரங்களாக முன்வைக்கின்றனர்.

தராவீஹ் தொழுகை விடயத்தில் உமர் ன அவர்களின் கூற்றான, 'நிஃமதில் பித்ஆ' (ஆதாரம் - புஹாரி : 2010) எனும் அரபு வாசகம்.

அல்குர்ஆன் நூல் வடிவில் ஓன்று சேர்க்கப்பட்டமை.

ஹதீஸ்களை எழுதி, அவற்றை பாதுகாத்தமை. இவற்றை அவர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட விடயங்கள் என எண்ணுவதே அதற்கான காரணமாகும்.

 

          தராவீஹ் விடயத்தில் 'நிஃமதில் பித்ஆ' என்ற உமர் ன அவர்களின் கூற்று இதுவே சிறந்த புதிய வழிமுறை எனும் பொருளைத் தருகிறது. இது மொழி ரீதியானதே தவிர மார்க்க ரீதியாக அவர்கள் புதிய வழிமுறை ஒன்றை உருவாக்கவில்லை. இது உமர் ன அவர்களின் ஸுன்னத்தும் கிடையாது. மாறாக இதை நபியவர்கள் செய்து வந்துள்ளார்கள். தமக்குப் பின்னால் அதிகமானவர்கள் தொழ ஆரம்பித்ததும் அவர்களுக்கு இது கடமையாக்கப்பட்டு விடுமோ எனப் பயந்து கூட்டாக தொழுவதைத் தவிர்த்தார்கள். (ஆதாரம் - புஹாரி : 1129)

 

          நபியவர்களின் மரணத்திற்குப் பின்னர் கடமையாகும் எனும் அச்சம் நீங்கிவிட்டதால் உமர் ன பழையபடி இருந்ததை திரும்பவும் செய்யலானார்கள். எனவே இதை நல்ல பித்அத் எனும் வகைக்கு எவ்விதத்திலும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

 

          நபி ள அவர்கள் காலத்திலே அல்குர்ஆனை எழுதுவதற்காக சில நபித்தோழர்களை நியமித்திருந்தார்கள். அவர்களுக்கு தன் நாவிலிருந்து வரும் அல்குர்ஆன் வார்த்தைகளை மாத்திரம் எழுதுமாறும், அல்குர்ஆனுடன் வேறு எதுவும் கலந்திடக் கூடாது எனும் அச்சத்தில் அது தவிர்த்த வேறு எதையும் எழுதக் கூடாது எனவும் கட்டளையிட்டார்கள். நபியவர்களின் மரணத்தின் பின்னர் இப்பயமும் நீங்கிவிட்டது.

 

          ஏனெனில் அனைத்து நபித்தோழர்கள் உள்ளங்களிலும் அல்குர்ஆன் பிரித்தறிய முடியுமான அளவுக்கு முழுமையாக பதியப்பட்டு இருந்தது. எனவே அல்குர்ஆன் ஹதீஸுடன் கலந்திடும் எனும் பயத்திற்கு இடமிருக்கவில்லை. எனவே எழுத்து வடிவில் தனித்தனியாக எழுதப்பட்டிருந்த அல்குர்ஆனை ஒரே நூலிலும், ஹதீஸ்களை தனித்தனியான நூல்களிலும் தொகுத்தார்கள். இதையும் நல்ல பித்அத்திற்கு எவ்வகையிலும் ஆதாரமாகக் கொள்ளமுடியாது. இவை அல்குர்ஆன், மற்றும் ஹதீஸ்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட சமூகத் தேவையாகவே பார்க்கப்படுகின்றது.

 

          இவ்வாறு எந்த ஆதாரத்தைக் காட்டிய போதிலும் அவற்றின் மூலம் நல்ல பித்அத்கள், கெட்ட பித்அத்கள் என்பவற்றிற்கான எவ்வித சான்றையும் பெற்றிட முடியாது. ஏனெனில் நாம் மேலே பார்த்த ஹதீஸ் இவை அனைத்தையும் இல்லாமல் செய்வதற்கான ஒரே ஆதாரமாக இருக்கிறது.

 

இஸ்லாத்தில் பித்அத்தின் சட்டமும், இதனைப் புரிபவர்களுடனான அஹ்லுஸ்ஸூன்னா வல்ஜமாஅத்தினரின் நிலைப்பாடும்

          'புதிதாக உருவாக்கப்படும் விடயங்களை விட்டு நான் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு காரியமும் நூதன அனுஷ்டானங்கள். ஒவ்வொரு நூதன அனுஷ்டானமும் வழிகேடு' (ஆதாரம் - அபூதாவுத் : 4067) எனும் நபி ள அவர்களின் கூற்றிற்கிணங்க இஸ்லாத்தில் புதிதாக உருவாக்கப்படும் நம்பிக்கை சார்ந்த, வணக்கம் சார்ந்த அனைத்தும் தடுக்கப்பட்ட வழிகேடாகும். பித்அத்தின் வகைக்கேற்ப அது வித்தியாசப்படுகின்றது. அவை :

 

இறை நிராகரிப்பு (குப்ர்) : கப்ரில் இருப்பவரிடம் நெருங்க வேண்டும் எனும் நோக்கில் அவரின் கப்ரை வலம் வருதல், அவற்றுக்கு நேர்ச்சைப் பிராணிகளை அறுத்துப் பலியிடல், கப்ரில் உள்ளவரிடம் பிரார்த்தனை புரிதல்.

இணைவைப்பிற்கு இட்டுச் செல்பவை : கப்ருகளைக் கட்டுதல், அதில் தொழுது பிரார்த்தனை புரிதல்.





இத்தோடு ரவ்ழதுல் இல்ம் -2023 இன் அகீதா பாடங்கள் முடிவடைகின்றன. நாளை முதல் பிக்ஹ் பாடங்கள் பதிவேற்றம் செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்

 

 


கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget