ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 20

காலுறைகளின் மீது மஸ்ஹூ செய்தல்

عن المُغِيرَةِ بنُ شُعبَةَ رضي الله عنه قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَوَضَّأَ، فَأَهْوَيْتُ لِأَنْزِعَ خُفَّيْهِ، فَقَالَ: «دَعْهُمَا، فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ». فَمَسَحَ عَلَيْهِمَا. ( أخرجه البخاري 206 ، مسلم 274 )ஹதீஸின் பொருள்
நபி (ஸல்) அவர்களுடன் நானிருந்த போது, அவர்கள் வுழூ செய்தார்கள். அப்போது நான் அவர்களது காலுறைகளைக் கழற்ற முயன்றேன். (அதற்கு) அவை இரண்டையும் விட்டுவிடு. ஏனெனில், தூய்மையான நிலையில் தான் அவை இரண்டையும் நான் அணிந்துள்ளேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அவற்றின் மீது மஸ்ஹூ செய்தார்கள் என முகீரா இப்னு ஷூஃபா (ரலி) அறிவிக்கிறார்கள்.

ஆதாரம் - புஹாரி : 206, முஸ்லிம் : 274.ஹதீஸ் அறிவிப்பாளர்

முகீரா இப்னு ஷூஃபா இப்னு அபீ ஆமிர் அஸ்ஸகபீ (ரலி) என்ற இந்நபித்தோழர் அகழிப்போர் நடைபெற்ற ஆண்டில் இஸ்லாத்தில் இணைந்தார்கள். அதே ஆண்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த இவர் அங்கேயே போரிலும் கலந்து கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வுழூச் செய்ய அதிக நேரங்களில் உதவக் கூடியவராக இருந்தார்கள்.

அரபு சமூகத்தில் புத்திக்கூர்மையானவர்களில் ஒருவராகத் திகழ்ந்த இவர் பஸராவில் உமர் (ரலி) அவர்களது காலத்தில் ஒரு தடவை கவர்ணராக இருந்தார்கள். கூபாவில் முஆவியா (ரலி) அவர்களது காலத்தில் இரு தடவைகள் கவர்ணராக இருந்துள்ளார்கள். தனது இறுதிக் காலத்தை கூபாவிலே கழித்த இவர்கள் ஹி50ம் ஆண்டு மரணித்தார்கள்.ஹதீஸின் சாராம்சம்

முகீரா (ரலி) அவர்கள் நபியவர்களுடன் ஒரு பயணத்திலே இருந்தார்கள். நபியவர்கள் வுழூ செய்ய ஆரம்பித்து, முகம், கைகளைக் கழுவி, தலையை மஸ்ஹூ செய்து கால்களை மஸ்ஹூ செய்ய எத்தனித்த போது முகீரா (ரலி) நபியவர்களின் பாதணிகளைக் கழற்ற முற்பட்டு குனிந்தார்கள். அப்போது நபியவர்கள் : 'அவ்விரண்டையும் விட்டுவிடுங்கள். கழற்றாதீர்கள். ஏனெனில் நான் அவ்விரண்டையும் வுழுவுடனேயே அணிந்துள்ளேன்'. எனக் கூறிவிட்டு, கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக, தங்கள் பாதணிகளின் மீது நீரால் தடவினார்கள்.ஹதீஸின் படிப்பினைகள்

1. காலுறையின் மீது நீரால் தடவுவது அஹ்லுஸ்ஸூன்னா வல்ஜமாஅத்தினர் அனைவரும் ஏகோபித்து ஏற்றுக்கொண்ட ஒரு விடயமாகும். இதை ஷீஆக்கள் மறுக்கின்றனர்.

2. வுழூவில் கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக பாதணிகளின் மீது மஸ்ஹூ செய்யலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாகும்.

3. பாதணிகளை அணிந்துள்ளவருக்கு அதைக் கழற்றி, கழுவுவதை விட மஸ்ஹூ செய்வது ஏற்றமாகும். ஆனாலும், அதை அணிய முன்னர் அவர் வுழூ செய்திருக்கவேண்டும்.

4. ஒரு தடவை மாத்திரமே மஸ்ஹூ செய்ய வேண்டும். அதுவும் பாதணியின் மேற்புறம் மாத்திரமே செய்ய வேண்டும். முழுமையாக செய்வது கூடாது.

5. பிரயாணிக்கு மஸ்ஹூ செய்வதற்கான கால எல்லை மூன்று நாட்களாகும். ஊரில் இருப்பவருக்கு ஒரு நாளாகும்.

6. வுழூ முறிந்த பின் அவர் செய்யும் முதலாவது மஸ்ஹிலிருந்து அவரது காலவரையறை ஆரம்பிக்கின்றது.வினா இல - 20
 
பிரயாணிக்கு காலுறையின் மீது மஸ்ஹு செய்வதற்கான கால எல்லை எத்தனை நாட்கள் ?


கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget