ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 03

இஸ்லாமிய கொள்கையில் நெறிபிறழ்வுகள் ஏற்பட்டமைக்கான காரணங்கள்

தூய இஸ்லாமிய கொள்கையில் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிற்பட்ட காலங்களில் பல நெறிபிறழ்வுகள் ஏற்பட்டு, இக்கொள்கை விஷமிகளின் நச்சுக் கருத்துக்களால் நிரம்பி வழிந்தது. அவற்றில் சில முக்கியமான விடயங்கள்:

1. இஸ்லாமிய கொள்கையை கற்றல், கற்பித்தல் விடயத்தில் பொடுபோக்கைக் கையாண்டதால் பின்னால் ஓர் சமூகம் அதைப் பற்றிய சிறு அறிவு கூட இல்லாமல் வளர்ச்சியுற வழிகோலியது.

2. தமது மூதாதையர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுதல். அல்லாஹ் கூறுகிறான், 'அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!' என்று அவர்களிடம் கூறப்பட்டால் 'எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?' (அல்குர்ஆன் - 02 : 170)

3. சரி, தவறு எதுவென்பதை உணராமல், எவ்வித ஆதாரங்களும் இன்றி, மக்கள் கூறும் அனைத்துக் கருத்துக்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதும் நெறிபிறழ்விற்கே இட்டுச் செல்கின்றது.

4. நல்லடியார்கள் விடயத்தில் எல்லை மீறிச் செயற்பட்டமையும் இதில் அடங்குகின்றது.

நல்லடியார்களை அவர்களது தகுதிகளை விடவும் உயர்த்திப் பார்த்தல், அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டிய கடமைகளை நல்லடியார்களிடத்தில் செய்தல், தீமைகளைத் தடுத்தல், நன்மையை நாடுதல் போன்றவற்றை இவர்களும் செய்வார்கள் என நம்பிக்கை வைத்தல் என்பன இவற்றுள் அங்கம் வகிக்கின்றன.

நூஹ் நபியின் சமூதாயத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான், 'உங்கள் கடவுள்களை விட்டு விடாதீர்கள்! மேலும் வத்து, ஸுவாவு, யஹூஸ், யஊக், நஸ்ர் ஆகியவற்றை (தெய்வங்களை) விட்டு விடாதீர்கள்! என்று அவர்கள் கூறுகின்றனர்'. (அல்குர்ஆன் - 71 : 23)

5. வீட்டில் வளரும் குழந்தைகளுக்கும், பிள்ளைகளுக்கும் வழங்கப்படும் தூய்மையான வழிகாட்டல் போதாமையும் நெறிபிறழ்வு ஏற்படுவதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளும் சுபாவத்தில் தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்களே அவர்களை யஹூதிகளாகவும், நஸாராக்களாகவும், நெருப்பு வணங்கிகளாகவும் மாற்றிவிடுகின்றனர்' (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி : 1359, முஸ்லிம் : 2658).

இவைகள் அனைத்தும் அப்பாவி பாமர மக்களையும், தெளிவில்லாமல் கற்றுக்கொண்ட கல்விமான்களையும், வளர்ந்து வரும் சமுதாயத்தினரையும் தூய இஸ்லாமிய கோட்பாட்டை விட்டும் நெறிபிறழ வைக்கின்றன.நெறிபிறழ்வுகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் முறைகள்.

1. அல்குர்ஆன், ஸூன்னாவின் பக்கம் மீள வேண்டும்.

2.பாடசாலை மாணவர்களின் தகமைகளையும் அறிவுத் திறன்களையும் புடம்போட்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கற்பிக்க வேண்டும்.

3. இதற்கென ஓர் பாடத்திட்டத்தைத் தயாரிக்கும் போது, அதற்குத் தேவையான குறிப்புக்களையும், தகவல்களையும் சரியான இஸ்லாமிய கொள்கைகளிலிருந்து எழுதப்பட்ட நூற்களிலிருந்தே பெற வேண்டும்.

4. மக்களுக்கு மத்தியில் காணப்படும் தீய, கொள்கைகளை சீர்திருத்தி, அவர்களை சரியான இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் அமைக்க சிறந்த இஸ்லாமிய அழைப்பாளர்களை உருவாக்க வேண்டும்.

5. நவீன உலகை ஆட்டிப் படைக்கும் அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம், ஒலி, ஒளி தொலைத்தொடர்பு சாதனங்கள் போன்றவற்றை இஸ்லாமிய மயப்படுத்தல் வேண்டும்.வினா இல - 03
 
இஸ்லாமிய கொள்கையில் நெறிபிறழ்வுகள் ஏற்பட்டமைக்கான காரணங்கள் இரண்டு குறிப்பிடுக?

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget