(பத்தி 02)
இன்று இலங்கையில் முஸ்லிம்களாக வாழும் நாம் உண்மையிலேயே இலங்கையின் பூர்வீகக் குடிகளா ? அல்லது நாம் அறபு நாட்டு இறக்குமதியா? அல்லது ஆபிரிக்க குடியேறிகளா? இந்நாட்டில் எமது வரலாறு வெறுமனே 700 – 1000 வருடங்களுக்குட்பட்ட குறுகிய வட்டத்துடையதா? போன்ற கேள்விகள் அண்மைக் காலமாக நிலவி வருவதைக் காணலாம்.
உண்மையான வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது கிறிஸ்துவத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்நாட்டில் வாழும் பூர்வீகக் குடிகளே நாம்.
சிலர் கருதுவதைப் போன்று 700 – 800 வருடங்களுக்கு முற்பட்ட அறேபியர்கள் இறக்குமதி தான் நாம் என்றால் உடலமைப்புக்கள் பழக்கவழக்கங்கள் பேச்சு மொழிகளில் அவர்களுக்கு ஒப்பானவர்களாகக் காணப்பட வேண்டும். அப்படி எந்தவொரு தொடர்பையூம் காண முடியவில்லை.
எனவே நாம் யார்? நாம் எங்கிருந்து வந்தவர்கள்? எமது பூர்வீகம் எது? போன்ற வினாக்களுக்கு இலங்கை நாட்டுப் பிரஜை என்ற வகையில் விடை தெரிந்திருப்பது கடமையாகும்.
பௌத்த மக்களால் “யோனக” “யொன்னு” “ஹம்பயா” “மரக்கல மினிசு” போன்ற பெயர்களாலும் தமிழர்களால் “சோனகர்” என்றும் அழைக்கப்பட்டு வந்த முஸ்லிம்கள் 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்களால் “மூர்ஸ்” என்றும் அழைக்கப்பட்டு இன்று பொதுவாகவே முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகின்றோம்.
இந்நாட்டில் நாம் மிகப் பழமையான வரலாற்றைக் கொண்ட ஒரு பூர்வீக சமூகமே! அதற்கான சில சான்றுகளை பின்வரும் செய்திகள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன.
1. எமது தந்தையாகவும் உலகின் முதல் மனிதனாகவும் நாம் நம்பி வரக் கூடிய ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் புனித சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு வந்த போது இலங்கையில் தான் இறங்கினார்கள். அதற்கு ஆதாரமாக இன்று வரை பாதுகாக்கப்பட்டு வரும் அவரது இடது கால் பாத அடையாளம் பாவாத மலையில் காணப்படுகிறது.
2. கி.மு. 4ஆம் நூற்றாண்டளவில் தென்மேற்காசியாவின் பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்த மன்னர் ஷுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ஆட்சிக் காலத்தில் பல்கீஸ் என்ற அரசியிற்கு இலங்கையின் பெறுமதி மிக்க இரத்தினக் கற்களும் முத்துக்களும் கிடைக்கப் பெற்றதாக சில வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
3. கி.மு .3ஆம் நூற்றாண்டில் இலங்கையில் ஆட்சி செய்த “பண்டுகாபயன்” என்ற மன்னனால் சோனகர்களுக்கு அநுராதபுரத்தில் பெரிய நிலப் பரப்புக்கள் வழங்கப்பட்டன.
4. கி.மு. 137ஆம் ஆண்டு சதாதிஸ்ஸ மன்னன் பாதுகாப்புக் கருதி தீகவாவி என்ற பிரதேசத்திற்கு வந்த போது அப்பிரதேசத்தைச் சுற்றி மலுக்கான்பிடி, விசாகமலை, ஏறுகாமம் போன்ற சோனகர் கிராமங்கள் காணப்பட்டன.
5. கி.மு. 326ஆம் ஆண்டளவில் கிரேக்க மாலுமி ஒனோஸ் கிரிட்டோஸால் வரையப்பட்ட உலக வரைப் படத்தில் புத்தளம் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் சோனகக் குடியிருப்புக்கள் இருந்ததாகவூம் கி.பி. முதலாம் நூற்றாண்டளவில் தொலமியினால் வரையப்பட்ட உலக வரைப் படத்தில் இலங்கையில் உள்ள பிரதான நதிகளில் ஒன்றாக சோனக நதியைக் குறிப்பிட்டு விட்டு அதற்கருகில் சோனகர்கள் வாழ்ந்ததாகவூம் குறிப்பிட்டுள்ளார்.
6. இலங்கையின் தென்மாகாணத்தின் காலி மாவட்டத்திலுள்ள கச்சுவத்தை என்ற ஊர் பண்டைய காலத்தில் ஹஜ்;ஜுவத்தை என்று அழை;கப்பட்டது. இன்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு முன் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் மக்கள் இங்கிருந்து தான் செல்வார்கள்.
7. முஸ்லிம்களின் பூர்வீகக் குடிகளில் ஒன்றான பேருவளையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அப்ரார் 1300 வருடங்கள் பழமையனது.
8. கொழும்பு முஸ்லிம் மையவாடி ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கூபி வடிவிலான எழுத்துள்ள நினைவூக் கல் கி.பி. 377ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டதாக வரலாறு சான்று பகருகிறது.
9. இலங்கையின் வரலாற்றைக் குறிப்பிடும் மகாவம்சம் இலங்கையில் இயக்கர், நாகர் என்ற இரு பிரிவினர் இருந்ததாகக் கூறுகிள்றது. இதில் நாகர் என்பவர்கள் சோனகர்களே.
10. இலங்கையின் முதலாவது பிரதமராகிய டி . எஸ் . சேனாநாயக “இலங்கையில் பௌத்தர்கள் வாழும் கால அளவிற்கு முஸ்லிம்களின் வரலாறும் காணப்ப்டுகிறது” என்று கூறிய ஒரு செய்தி 1998ஆம் ஆண்டு Sunday times பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற ஏராளமான வரலாற்றுச் செய்திகளை நாம் புரட்டிப் பார்க்கும் போது இலங்கையில் முஸ்லிம்களின் பூர்வீகம் என்பது கி. முன் பல்லாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்ததே என்று நமக்குத் தௌpவாக விளங்குகிறது.

கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.