ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 14)பாடம் 05
5.1 "சுகூன்” செய்யப்பட்ட “நூன்” ,”தன்வீனின்” சட்டங்கள்

 சுகூன் செய்யப்பட்ட “நூன்” அல்லது “தன்வீனுக்கு” பின்னால் வரக்கூடிய அரபு எழுத்துகளை கவனிக்கும் போது நான்கு சட்டங்கள் உருவாகும் .

1. الإظهار இல்ஹார் ( வெளியாக்குதல் )

2. الإدغام இத்காம் ( நுழைத்தல்)

3. الإقلاب இக்லாப் (பிரட்டுதல் ) ( மாற்றுதல் )

4. الإخفاء இக்பா ( மறைத்தல் )

5.2 இல்ஹார் ( வெளியாக்குதல் ):

சுகூன் செய்யப்பட்ட “நூன்” அல்லது “தன்வீனுக்கு” பின்னால் “ இல்ஹாருடைய ஆறு எழுத்துக்களில் ஏதேனும் ஓர் எழுத்து வந்தால் சுகூன் செய்யப்பட்ட “நூன்” அல்லது “தன்வீனை” வெளிபடுத்தி ஓத வேண்டும்.

.இல்ஹாருடைய ஆறு எழுத்துக்கலும் ) ء، ه، ع،ح،غ،خ)விளக்கம் : உதாரணம் 1 ஐ கவனிக்க.
مِنْ أَهْلِ الْكِتَابِ கோடிடப்பட்ட இடத்தில் சுகூன் செய்யப்பட்ட “நூன்” க்கு பிறகு இல்ஹாருடைய எழுத்து (ء ) வந்துள்ளது . இல்ஹாருடைய சட்டத்தின்படி சுகூன் செய்யப்பட்ட “நூன்” ஐ “ مِنْ أَهْلِ الْكِتَابِ “ என்று கூட்டாமலும் குறைக்காமலும் உள்ளபடியே உச்சரிக்க வேண்டும் . இதை போன்றே மற்ற உதாரணங்களையும் விளங்கிக் கொள்ளலாம்.

கேள்வி இல 14

இழ்ஹாருடைய எழுத்துக்கள் யாவை? அவற்றில் இரண்டிற்கு உதாரணம் தருக?

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget