ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 10)


பாடம் 01
1.1 அல்குர்ஆனின் சிறப்புகள்
அல்குர்ஆன் அல்லாஹ்வினால் இறக்கப்பட்ட வேதங்களில் இறுதியான வேதமாகும். அதை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்  மீது அல்லாஹ் அருளினான். அல்லாஹ் அதிலே எழுத்து, ஒலி மூலமாக பேசியுள்ளான், என்று ஈமான் கொள்வதும் அதை ஓதி அதிலுள்ள விடயங்களை சிந்தித்து வாழ்க்கையில் எடுத்து நடப்பதும் அவசியமாகும். அல்குர்ஆனைப் போன்ற ஒன்றை உருவாக்குவதில் முன் சென்ற சமூகங்களில் யாரும் வெற்றி பெறவில்லை. அல்குர்ஆன் அல்லாஹ்வின் பண்புகளில் “அல்கலாம் “ எனப்படும் ஒரு பண்பாகும். அல்குர்ஆன் படைக்கப்பட்டதொன்றல்ல. ஓதுதல், ஆராய்ச்சி செய்தல், அமுல்படுத்தல், கற்றல், கற்றுக் கொடுத்தல் போன்றவற்றின் மூலம் அதில் அதிக ஈடுபாடு காட்டுவது ஏனைய எல்லா அமல்களை விடவும் சிறந்ததாகும்.
·  அல்லாஹ் கூறுகிறான் “ யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதிட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்; அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்; யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே! (அல்பகரா:121)

·  மேலும் “மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக”     (முஸ்ஸம்மில் :4)

·  நபி ஸல் அவர்கள் கூறினார்கள் “ நிச்சயமாக அல்லாஹுத்தஆலா இந்த அல் குர்ஆனின் மூலமாக சிலரை உயர்வடையச்செய்கின்றான் இன்னும் சிலரை தாழ்வடையச்செய்கின்றான்.” (அறிவிப்பவர் உமர் (ரழி) , ஆதாரம்: முஸ்லிம்.)

·  மேலும் கூறினார்கள்” அல்குர்ஆனை சிறந்த முறையில் ஓதுபவர் கண்ணியமிக்க மலக்குமார்களுடன் இருப்பார், மேலும் கஷ்டப்பட்டு திக்கித்திக்கி ஓதுபவருக்கு இரண்டு கூலிகள் கிடைக்கின்றன.(ஒன்று ஓதுவதற்கும் மற்றது திக்கும் போது ஏற்படும் கஷ்டத்துக்கும்)  (அறிவிப்பவர் ஆய்ஷா (ரழி) , ஆதாரம்: புகாரி)

·  மேலும் கூறினார்கள் “ உங்களில் சிறந்தவர் குர்ஆனைக் கற்று அதை பிறருக்கும் கற்றுக்கொடுப்பவராவார்” (அறிவிப்பவர் உஸ்மான் (ரழி), ஆதாரம்: புகாரி)
·  மேலும் கூறினார்கள் : நீங்கள் அல்குர்ஆனை (மறந்து விடாமல்) பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், ஏனெனில் கயிற்றால் கட்டிவைக்கப்பட்ட ஒட்டகத்தை விட வேகமாக (அல்குர்ஆன்) நினைவிலிருந்து தப்பக்கூடியது. (அறிவிப்பவர் அபூ மூஸா(ரழி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)இந்நபிமொழி அல்குர்ஆனை மன்னம் செய்வதிலும், அதனைப் பாதுகாப்பதிலும் உள்ள முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.
1.2 அல்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு :
1.2.1 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது உள்ளத்தில் பதிவு செய்து கொள்வார்கள்.
இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கு அவர்கள் ஆரம்பக் கட்டத்தில் மிகுந்த சிரத்தை எடுக்கலானார்கள். அது தேவையில்லை என்று திருக்குர்ஆன் மூலமாகவே அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
"திரும்பத் திரும்ப ஓதி மனனம் செய்வதற்காக நீர் முயற்சிக்காதீர். அதை உமது உள்ளத்திலே ஒன்று சேர்ப்பது நமது பொறுப்பு'' என்று திருக்குர்ஆன் கூறியது. (திருக்குர்ஆன் 75:16-19, 20:114)
இன்னொரு வசனத்தில் "உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம்; நீர் மறக்க மாட்டீர்'' (87:6) எனவும் அல்லாஹ் உத்தரவாதம் அளித்தான்.
எனவே ஜிப்ரீல் என்ற வானவர் அதிகமான வசனங்களைக் கூறினாலும், ஒலிநாடாவில் பதிவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் அப்படியே அவை பதிவாகி விடும்.
இறைவன் தனது தூதராக அவர்களை நியமித்ததால் அவர்களுக்கு இந்தச் சிறப்பான தகுதியை வழங்கியிருந்தான். எனவே இறைவனிடமிருந்து வந்த செய்திகளில் எந்த ஒன்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறதியாக விட்டிருப்பார்கள் என்று கருதவே முடியாது.
திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இவ்வாறு பாதுகாக்கப்பட்டது.
1.2.2 நபித்தோழர்களின் உள்ளங்களில்...

  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் எந்தச் சமுதாயத்தைச் சந்தித்தார்களோ அந்தச் சமுதாயம் எழுத்தறிவில்லாத சமுதாயமாகவும், அதே நேரத்தில் மிகுந்த நினைவாற்றலுடைய சமுதாயமாகவும் இருந்தது.
    எழுதவும், படிக்கவும் தெரியாத அந்தச் சமுதாய மக்களில் தம்மை ஏற்றுக் கொண்டவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அவ்வப்போது அருளப்பட்ட வசனங்களைக் கூறுவார்கள். கூறிய உடனேயே அம்மக்கள் மனனம் செய்து கொள்வார்கள்.
1.2.3 எழுத்து வடிவிலும்...
ஸஹாபாக்கள் உள்ளங்களில் குர்ஆனைப் பாதுகாக்க ஏற்பாடு செய்ததுடன் நின்று விடாமல் அந்தச் சமுதாயத்தில் எழுதத் தெரிந்திருந்தவர்களை அழைத்து தமக்கு அவ்வப்போது வருகின்ற இறைச் செய்தியை உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிவு செய்வார்கள்.
இவ்வாறு பதிவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலீத் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸாபித் பின் கைஸ் (ரலி) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்த எழுத்தாளர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லச் சொல்ல பேரீச்சை மரப்பட்டைகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும், பதனிடப்பட்ட தோல்களிலும், கால்நடைகளின் அகலமான எலும்புகளிலும் எழுதிக் கொள்வார்கள். அன்றைய சமுதாயம், இவற்றைத்தான் எழுதப்படும் பொருட்களாகப் பயன்படுத்தி வந்தது.
இவ்வாறு எழுதப்பட்டவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இது தவிர திருக்குர்ஆனை மனனம் செய்தவர்கள் தாமாகவும் எழுதி வைத்துக் கொண்டார்கள்.
இப்படித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அருளப்பட்ட முழுக்குர்ஆனும் நபித்தோழர்களுடைய உள்ளங்களிலும், எழுதப்பட்ட ஏடுகளிலும் பாதுகாக்கப்பட்டது. இவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள்.

1.2.4 அபூபக்ர் (ரலி) அவர்களின் காலம்  (அல் குர்ஆன் தொகுக்கப்படல்).

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 12ஆம் ஆண்டு 'யமாமா' என்ற ஒரு போர் நடைபெற்றது.
முஸைலமா என்பவன் தானும் ஒரு இறைத்தூதன் என்று பிரகடனம் செய்து தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி இருந்தான். அவனுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடந்த இப்போரில் குர்ஆனை மனனம் செய்த சுமார் 70 நபித்தோழர்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து குர்ஆனை எழுத்து வடிவமாக ஒழுங்குபடுத்துமாறு வலியுறுத்தினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினார்கள்.
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத ஒரு பணியை நாம் ஏன் செய்ய வேண்டும்'' என்பதே அவர்களின் தயக்கத்திற்குக் காரணமாகும். உமர் (ரலி) அவர்கள் தம் தரப்பில் உள்ள நியாயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்து இது செய்ய வேண்டிய பணிதான் என்று விளக்கிய பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் அதற்கு ஒப்புக் கொண்டார்கள். அப்போது குர்ஆனை மனனம் செய்தவர்களிலும், எழுதியவர்களிலும் தலைசிறந்தவராகவும், இளைஞராகவும் இருந்த ஸைத் பின் ஸாபித் அவர்களை அழைத்து வரச் செய்து இந்தப் பொறுப்பை அவரிடத்திலே அபூபக்ர் (ரலி) ஒப்படைத்தார்கள்.
அவரும் அந்தப் பொறுப்பை ஏற்று குர்ஆனை ஒழுங்குபடுத்துகின்ற பணியை மேற்கொண்டார். (நூல்: புகாரி 4988, 4989)
அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு இந்த ஆவணம் உமர் (ரலி) அவர்களிடம் இருந்தது. உமர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அவர்களின் மகளும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியுமான ஹப்ஸா (ரலி) இடத்தில் இருந்தது.
1.2.5 உஸ்மான் (ரலி) அவர்களின் காலம்  (அல் குர்ஆன் பிரதியிடப்படல்):

அல்லாஹ்வின் உதவியுடன் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு அல் குர்ஆனை ஏழு எழுத்துக்களில் ஓதிக்காட்டினார்களோ அவ்வாறே நபித்தோழர்களும் ஓதினார்கள். என்றாலும் உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் இவ்வாறான ஓதும் முறை அல் குர்ஆனை ஓதக்கூடியவார்களுக்கு மத்தியில் பிளவுகள் ஏற்படுவதட்கு காரணமாக அமைந்தது .

மேலும் இஸ்லாம் மார்க்கம் விரிவடைந்ததினால் அதிகமான மக்கள் இஸ்லாத்தின் பக்கம் நுழைந்தார்கள் . அந்த நேரத்தில் ஒவ்வொருவரும் ஏழு விதங்களில் அல் குர்ஆனை ஓதும் போது ஒருவர் மற்றவரை நீர் ஓதுவது பிழை என்று கூறியதன் காரணமாக மக்களுக்கு மத்தியில் பிளவுகள் ஏற்பட ஆரம்பித்தது . இதனை கண்ணுற்ற ஹுதைபதுப்னுல் யமானீ (ரலி) அவர்கள் கலீபா உஸ்மான் (ரலி) அவர்களிடம் விடயத்தை எடுத்துச்சொல்ல கலீபா அவர்கள் மக்காவாசி களையும் மதினாவாசிகளையும் ஒன்று சேர்த்து - அல் குர்ஆனை ஒரு எழுத்தில் ஒன்று சேர்க்க வேண்டும் , மக்களை ஒற்றுமையாக்க வேண்டும் – என்ற ஆலோசனையை முன்வைதார்கள் . இந்த ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள் .
அதன் பின் ஹப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்த அடிப்படை பிரதியை எடுத்து அதனை ஜைத் பின் ஸாபித் (ரலி), மேலும் குறைஷி கோத்திரத்தைச் சேர்ந்த மூன்று நபித்தோழர்களுக்கும் பிரதியிடுமாறு பொறுப்புக்கொடுத்தார்கள். பின்னர் அந்தப்பிரதிகளை எடுத்து முக்கிய இடங்களுக்கு அனுப்பி வைத்தார்கள் . இதைத்தவிர அனைத்து அல் குர்ஆன் பிரதிகளையும் எரிக்குமாரும் கட்டளையிட்டார்கள்.

கேள்வி இல 10

உஸ்மான் ரழி அவர்களிடம் குர்ஆனை தொகுக்க ஆலோசனை வழங்கிய ஸஹாபி யார்?
கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget