எமது பல்கலைக்கழத்தில் குர்ஆன்,ஹதீஸ் ஆகியவற்றை மனனம் செய்து திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவித்து சான்றிதழ்,பரிசில்கள் வழங்கும் நிகழ்வு எமது பல்கலைக்கழக வளாகத்தில் 2017.01.06 வெள்ளி அன்று இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பல்கலைக்கழத்தின் வேந்தரும் ஸஊதி அரேபியாவின் மூத்த உலமாக்கள் சபையின் உறுப்பினருமான ஸுலைமான் பின் அப்துல்லாஹ் அபல் ஹைல் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அதே நேரம் அன்றய ஜும்ஆ உரையும் பல்கலைக் கழக ஜும்ஆப் பள்ளியில் நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து மாணவர்களுடனான திறந்த சந்திப்பு ஒன்று இடம் பெற்றது. இச் சந்திப்பில் வேந்தரோடு மாணவர்களோடு சம்பந்தப்பட்ட முக்கிய பிரிவுகளின் பீடாதிபதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது மாணவ்களின் கருத்துகள், ஆலோசனைகள், பௌதீக பிரச்சினைகள் தொர்பாக ஆராயப்பட்டது. இவ்வாறான நிகழ்வுகள் வருடத்தில் ஓரிரு தடவைகள் மாத்திரமே நடை பெறும். இதில் சிறப்பம்சமாக எமது பல்கலைக்கழக மாணவர்களான ஏ. நயிமுல்லாஹ், எம். ஸாஜுதீன், எம்.எஸ்.எம். அவ்ன் ஆகியோர் குர்ஆன் ஹதீஸ் ஆகியவற்றை மனனம் செய்து திறமைகளை வெளிக்காட்டியமைக்காக சான்றுதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.