துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள்

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்து லில்லாஹ்... சாந்தியும் சமாதானமும் நபியவர்கள் மீதும் அவர்களுடைய உம்மத்தின் மீதும் உண்டாவதாக... 

இறைவனின் கணக்கின் பிரகாரம் இருக்கின்றன 12 மதங்களில் சிறந்த மாதமும் யுத்தம் புரிவதற்கு தடை செய்யப்பட்ட மாதமும் ஆகிய துல்ஹஜ் மாதத்தை அடைந்திருக்கிறோம். அதன் முதல் பத்து நாட்களும் ஏனைய நாட்களை விட சிறந்த நாட்களாக இருக்கின்றன. அல்லாஹ்வின் அருளால் அந்த முதல் பத்து நாட்களை இவ்வருடமும் அடைந்து இருக்கிறோம் அல்ஹம்து லில்லாஹ்... 

இறைவன் மனிதனுடைய ஆயுளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுப்படுத்தி இருந்தாலும் அவன் வாழ்கின்ற போது குறிப்பிட்ட சில காலத்தில் குறிப்பிட்ட சில வணக்கங்களை மேற்கொள்கின்ற போது அவன் இவ்வுலகில் பல வருடங்கள் வாழ்ந்தது நன்மை செய்தவனை போல் ஆகிவிடுகின்றான். 

அந்த வகையில் தான் இந்த முதல் பத்து நாட்களும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாக இருக்கின்றன. 

இந்த பத்து நாட்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள்: “ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது தோழர்களே! இந்த துல்ஹஜ் மாதத்தில் முதல் பத்து நாட்களில் செய்யும் அமல்களை நேசிப்பது போல் அல்லாஹ் வேறு எந்த அமல்களையும் நேசிப்பது கிடையாது என்று கூறியவுடன் அங்கிருந்த தோழர்கள், யா ரஸூல்லல்லாஹ்! ஜிஹாத் செய்வதை விடவும் அதை அல்லாஹ் நேசிக்கின்றானா? என்று கேட்டபோது, ஆம், என்று கூறி விட்டு என்றாலும் ஜிஹாதில் தனது உயிரையும், தனது பொருளையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தவர்களைத் தவிர என்று கூறினார்கள். (புஹாரி-969, திர்மிதி-688) 

எனவே நாம் நாளாந்தம் செய்கின்ற அமல்களை சற்று சிரமம் பாராது மிகுந்த அக்கறையோடு மேற்கொள்கின்ற போது அது அல்லாஹ்விடத்திலே மிகுந்தத நேசத்துக்குரிய அமலாக மாறுகின்றது. 

v      ஐவேளை தொழுகைகளை ஜமாத்தோடு நிறைவேற்றல். 

v இரவுத் தொழுகை, முன் பின் சுன்னத், லுஹா போன்ற தொழுகைகளை நிறைவேற்றல். 

v திங்கள், வியாழன் போன்ற நாட்களில் சுன்னத்தான நோன்பு நோற்றல். 

v காலை மாலை, சந்தர்ப்ப துஆக்களை தினம்தோறும் ஓதிவரல் . 

v அதிகம் அதிகமாக இறைவனிம் பிரார்த்தித்தல், இஸ்திஹ்பார் செய்தல். 

v பெற்றோருக்கு நல்ல முறையில் உபகாரம் செய்தல், குடும்ப உறவுகளை பேணி நடத்தல். 

v ஏழை எளியோருக்கு உதவுதல், அதிகமாக தான தர்மங்கள் செய்தல். 

v அநியாயம், களவு, பொய், புறம் பேசுதல், பாவமான காரியங்களை விட்டும் ஒதுங்கிக்கொள்லுதல். 

v அதிகம் அதிகமாக குர்ஆனை ஓதுதல், நன்மையை ஏவி தீமையை தடுத்தல். 


இவ்வாறான நல்லமல்களை இந்த நாட்களில் செய்கின்ற போது அது ஏனைய நாட்களில் செய்கின்ற அமல்களை விட பெருமதியானதகும். 


எனவே இந்த நற்காரியங்களை நாமும் செய்து நமது இஸ்லாமிய உறவுகளுக்கும் ஏற்றி வைத்து அல்லாஹ்விடத்திலே நற்கூலி பெற்ற மக்களாக வாழ்வதற்கு அல்லலாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவனாக...

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget