புனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-06-19) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்விஇன்றைய குத்பா - (2020/06/19) இடம்: மக்கா (மஸ்ஜிதுல் ஹராம்) 

குத்பா நிகழ்த்தியவர்: அஷ்ஷைக் கலாநிதி ஸுஊத் இப்னு இப்ராஹிம் அஷ்ஷுரைம் இன்றைய குத்பாவிலிருந்து... 

ஆரம்பமாக முஸ்லீம்கள் அனைவரையும் அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறும் நல்லமல்கள் செய்து அவனை வழிப்படுமாறும் அவன் தடுத்தவற்றை விட்டும் முற்றாக விலகி இருக்குமாறு உபேதசம் செய்தார். 

நிச்சயமாக மனிதன் தனது வாழ்க்கையில் நலவு கெடுதி, சந்தோசம், துன்பம், வெற்றி, தோல்வி, கஷ்டம், இலகு, ஆகியவற்றுக்கு மத்தியில் புரள்பவனாக இருக்கிறான். இவ்வாறுதான் உலக வாழ்வின் நாட்களும் புரண்டு செல்கிறது. ஒரே நிலைமையில் தொடராக இருப்பதில்லை. நிச்சயமாக சந்தோசம் ஒரு சந்தர்ப்பத்தில் வருகிறது என்றால் துன்பம் பல கோணங்களில் வருகிறது. இவ்வாறுதான் உலகில் வாழ்பவர் துன்பங்களில் இருந்து ஒரு போதும் தவிர்ந்து கொள்ளமுடியாது. இதிலிருந்து தவிர்ந்து கொள்பவர்கள் குறைவானவர்கள். 

மனிதன் நேற்றைய நாளை அவதானிக்கிறான். அது கடந்து விட்டது. அதனை மீட்டிப்பெற முடியாது. கடந்து சென்ற இன்பத்தை மீண்டும் உணரமுடியாது. அனுபவித்த வேதனையை மறந்து விடுகிறான். நாளைய நாளை பார்க்கிறான். அது அவனுக்கு என்னவென்று தெரியாமல் இருக்கிறது. அது பற்றி உறுதியில்லாமல் இருக்கிறான். அல்லாஹ் அவனுக்கு எதை விதித்து இருக்கிறான் என்று அறியாதவனாக இருக்கிறான். தனக்கு முன்னால் அவன் மூச்சுவிடும் கண்ணால் பார்த்து, காதால் கேட்கும் நாளை மாத்திரம் பார்த்துக்கொண்டிருக்கிறான். அதனால் தான் நேற்றைய தினம் கடந்து விட்டது. இன்றைய நாள் அமலுக்குரியது. எதிர்காலம் ஆசைக்குரியதாக இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில்தான் நபியவர்களின் உபதேசத்தை தனது உள்ளத்தில் கொண்டுவருவதற்குரிய தேவை இருக்கிறது. 

நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக நீர் உலகத்தில் பற்றற்றவனாக அல்லது வழிப்போக்கனாக இருந்து கொள். (புஹாரி: 6416) 

நிச்சயமாக உலகம் கடந்து செல்லும் பாதையாகும். நிரந்தரமான பாதையன்று. அதிலே மனிதர்கள் இரண்டு பிரிவினராக இருக்கிறார்கள். சிலர் தன்னையே விற்று அழிவில் ஆழ்த்திக்கொள்வார். யார் வசதி வாய்ப்புகளோடு வாழ்கிறாரோ அவர் சோதிக்கப்படுவார். யார் வசதியற்று வாழ்கிறாரோ அவர் கவலையடைவார். நிச்சயமாக அறிவாளிகள் உலகில் சோதிக்கப்பட்டால் அதன் யதார்த்தத்தை அறிந்து கொள்வார்கள். இதுதான் வாழ்வின் யதார்த்தமாகும். உலகம் மாறுதல், நீங்குதல் போன்றவற்றை கொண்டதாகும். அதில் நிரந்தரம் கிடையாது. எந்த மனிதனுக்கும் அல்லாஹ் நிரந்தரமாக ஒன்றை ஆக்கவில்லை. நிச்சயமாக இதுதான் உலக நியதி என்று இருப்பதால் மனிதன் நிரந்தரமான காரியங்களில் ஈடுபடமாட்டான். உலக வாழ்வின் இன்பங்களை நோக்கி தனது கண்ணை உயர்த்தமாட்டான். 

மனிதர்கள் இவ்வுலகில் பரந்து திரிந்து அவனின் வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்வதற்காக வேண்டி அல்லாஹ் உலகத்தை அவர்களுக்கு கீழ்ப்படிந்ததாக ஆக்கி வைத்திருக்கிறான். அதிலே வீண்விரயம் செய்ய வேண்டாம். அதனை தமது உயர்ந்த நோக்கமாக ஆக்க வேண்டாம். போரிட்டு, போட்டி போட்டு தனது அறிவுக்கு எட்டாததை செய்ய வேண்டாம். 

அபூ உபைதா (ரழி) அவர்கள் மதீனாவுக்கு வரிப்பணத்தை எடுத்துக்கொண்டு வருவதை அன்சாரிகள் அறிந்தார்கள். அல்லாஹ்வின் தூதருடன் சுபஹ் தொழுகையை நிறைவேற்றுகிறார்கள். தொழுது முடிந்து செல்லும் போது அபூ உபைதா (ரழி) அவர்களை சந்திக்க நேரிடுகிறது. அவ்வேளையில் அல்லாஹ்வின் தூதரவர்கள் அவர்களை கண்டவுடன் புன்முறுவல் பூக்கிறார்கள். அபூ உபைதா (ரழி) அவர்கள் எதோ கொண்டு வருகிறார் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் என்று நபியவர்கள் கூறினார்கள். அதற்கு அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதரே ஆம் என்று பதிலளிக்கிறார்கள். அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: நன்மாராயம் கூறுங்கள். உங்களுக்கு சந்தோசம் ஏற்படுவதைக்கொண்டு ஆசை வையுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கு வறுமை ஏற்படுவதை நான் பயப்படவில்லை. என்றாலும் உங்களுக்கு முன்னாள் இருந்தவர்களுக்கு உலகம் விரிக்கப்பட்டது போன்று உங்களுக்கும் விரிக்கப்படுவதை நான் பயப்படுகிறேன். அவர்கள் போட்டி போட்டது போன்று நீங்களும் போட்டி போடுகிறீர்கள். அவர்களை அழித்தது போன்று உங்களையும் அது அழித்து விடும். (புஹாரி: 6425) 

நிச்சயமாக இஸ்லாம் நடுநிலையான மார்க்கமாகும். கடும் போக்கு கிடையாது, தரக்குறைவும் கிடையாது. அதனை முற்று முழுதாக விட்டு விடுவது கடும் நெருக்கடி ஆகும். அதிலே முற்று முழுதாக மூழ்கி விடுவது ஏமாறுவதாகும். எத்தனையோ நபர்கள் கடமையானவற்றை விட்டுவிட்டு உலகத்திற்காக போட்டி போடுவதில் மூழ்கி இருக்கிறார்கள். மறுமைக்காக நற்காரியங்களை செய்வதை விட்டுவிட்டு பராமுகமாக இருக்கிறார்கள். எவர் தன்னை படைத்த இறைவனின் திருப்பொருத்தத்தின் பிரகாரம் வாழ்கிறாரோ அல்லாஹ் அவருக்கு இரு நலவுகளையும் ஒன்று சேர்ப்பான். 

நிச்சயமாக யார் உலகத்தை நன்கு புரிந்து வைத்திருக்கிறானோ அது அவனுக்கு வெற்றியான இடமாகும். அதிலே யார் தன்னை தயார்படுத்துகிறாரோ அது அவருக்கு போதுமானதாகும். உலகம் இறைவனின் வஹி இறங்கிய இடம். மலக்குமார்கள் தொழும் இடம். நபிமார்களின் பள்ளிவாசல். அல்லாஹ்வுடைய இறைநேசர்களின் வெற்றியான இடம். அதிலே அவர்கள் அருளை இலாபமாக பெற்று சுவர்க்கத்தை அடைந்து கொண்டார்கள்.  

முற்றும்...

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget