ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 26

மலசலம் கழிப்பதன் ஒழுங்கு முறைகள்

01. மலசலம் கழிக்கும் இடத்திற்கு நுழையும் முன் துஆ ஓத வேண்டும்.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ

அல்லாஹூம்ம இன்னி அஊதுபிக மினல் குப்தி வல் கபாஇதி

நபியவர்கள் கழிப்பிடம் செல்லும் போது, 'இறைவா அருவருக்கத்தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும் ஷைத்தானை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூறும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். (புஹாரி : 142)

02. மலசலம் கழிக்க உட்காரும் வரை ஆடையை உயர்த்தக் கூடாது. மனிதர்களின் பார்வையை விட்டும் தூரமான இடத்தில் மலசலம் கழிக்க வேண்டும்.

நபியவர்கள் மலசலம் கழிப்பதற்கு சென்றால் மனிதர்களை விட்டும் தூரமாகிச் சென்று கழிப்பார்கள். (நூல் : அபூதாவூத் 01)

நபியவர்கள் மலசலம் கழிப்பதற்கு சென்றால் கழிக்கும் இடத்தை நெருங்கும் வரை ஆடையை உயர்த்தமாட்டர்கள்'. (நூல் - திர்மிதி 14)

03. திறந்த வெளியில் மலசலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கவோ, பின்னோக்கவோ கூடாது.

உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்கக் கூடாது தம் முதுகுப் புறத்தால் (கிப்லாவை) பின்னோக்கவோ கூடாது. (எனவே) கிழக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளட்டும். (புஹாரி : 144)

குறிப்பு : மேற்குறிப்பிட்ட ஹதீஸ் கிப்லா தெற்கு வடக்காக அமைந்த மதீனா, யமன், சிரியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கே பொருந்தும்.

04. மலசலம் கழிக்கும் போது பாதையோரங்கள், நீர் தேங்கி நிற்கும் இடங்கள், மக்கள் நிழல் பெறும் இடங்கள் போன்றவற்றை விட்டும் தூரமாகிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சபிக்கப்பட்டவர்களை விட்டும் பயந்து கொள்ளுங்கள் அவர்கள் மனிதர்கள் நடந்து செல்லும் பாதைகளில் அல்லது மக்கள் நிழல் பெறும் இடங்களில் மலசலம் கழிப்பார்கள். (இப்படி செய்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள்). (முஸ்லிம் : 269)

05. தேங்கி நிற்கக்கூடிய நீரில் மலசலம் கழிப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.

ஓடாமல் தேங்கி நிற்கும் நீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்து விட்டு பின்னர் அதில் குளிக்க வேண்டாம்' என்று நபியவர்கள் கூறினார்கள். (புஹாரி : 239)

06. மலசலம் கழிக்கும் இடத்திற்கு நுழையும் போது இடது காலை முற்படுத்த வேண்டும். வெளியாகும் போது வலது காலை முற்படுத்த வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தனது வலது கையை சுத்தம் செய்வதற்கும், உணவு உட்கொள்வதற்கும் பயன்படுத்துவார்கள். தனது இடக் கையை மலசலம், அசுத்தங்களை நீக்குவதற்கு பயன்படுத்துவார்கள். (அறிவிப்பவர் - ஆஇஷா (ரலி), ஆதாரம் - அபூதாவுத் : 33)

7. நீர் கிடைக்காமல் இருக்கின்ற போது கல், நீரை உறுஞ்சும் பொருட்கள் (டிசு) போன்றவற்றைக் கொண்டு மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் எங்களை மூன்று தடவைக்கு குறைவாக சுத்தம் செய்வதைத் தடுத்தார்கள். (முஸ்லிம் : 262)

நீர் அல்லாத பொருட்கள் மூலமாக சுத்தம் செய்வதாயின் ஒற்றைப் படையாகவே செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'யார் வுழு செய்கிறாரோ, அவர் நாசிக்கு நீர் செலுத்தட்டும். யார் கல்லைக் கொண்டு மலசலம் கழித்த பின்னர் சுத்தம் செய்கிறாரோ, அவர் அதனை ஒற்றைப்படையாக ஆக்கிக் கொள்ளட்டும். (புஹாரி : 161)

08. எலும்பு, விட்டை, உணவுப் பொருட்கள் போன்றவற்றை கொண்டு சுத்தம் செய்யக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் எலும்பு அல்லது விட்டை, உணவுப் பொருட்கள் கொண்டு சுத்தம் செய்வதை விட்டும் எங்களைத் தடுத்தார்கள். (முஸ்லிம் : 262)

09. வலது கையால் சுத்தம் செய்யக் கூடாது.

'உங்களில் ஒருவர் சிறுநீர் கழித்தால் அவர் தன்னுடைய வலக்கரத்தால் அபத்தைத் தொடவேண்டாம் இன்னும் வலக் கரத்தால் சுத்தம் செய்யவும் வேண்டாம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி : 154 முஸ்லிம் : 267)

10. மலசல கூடத்திலிருந்து வெளியாகும் போது துஆ ஓத வேண்டும்.

நபியவர்கள் மலசல கூடத்திலிருந்து வெளியானால் 'ஹூப்ரானக' غُفْرَانَكَ என்ற துஆவை ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். (அபூதாவூத் - 30)வினா இல - 26
 
 மலசலம் கழித்த பின் சுத்தம் செய்ய நீர் கிடைக்காவிட்டால் எதனால் சுத்தம் செய்ய வேண்டும் .

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget