ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 25

நீரின் வகைகள், நஜீஸை நீக்குதல்

நீர் இரண்டு வகைப்படும்

1. சுத்தமான நீர்

2. அசுத்தமான நீர்.1. சுத்தமான நீர்

அல்லாஹ் கூறுகிறான் : நாங்கள் வானத்தில் இருந்து சுத்தமான நீரை இறக்கிவைத்தோம். (அல்குர்ஆன் - 25 : 48)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ சயீத் அல்குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (நிச்சயமாக நீர் சுத்தமானது. அதனை எந்த ஒன்றும் அசுத்தமாக்காது (நூல் : அபூதாவூத் : 66)

சுத்தமான நீரில் ஏதாவது ஒரு சுத்தமான பொருள் கலப்பதன் மூலம் அதன் பெயர் மாற்றம் அடையுமாயின் அந்நீரை கொண்டு வுழுச் செய்ய முடியாது. மேலும் அதற்கு நீர் என்று சொல்லவும் முடியாது. (உதாரணம் : குளிர்பானம், தேனீர்)

உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மகள் மரணித்த சந்தர்ப்பத்தில் அவர்களை குளிப்பாட்டிய சம்பவம் இதற்கு ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது. அவர்கள் கூறுகிறார்கள் : நாங்கள் நபி (ஸல்) அவர்களின் மகளை குளிப்பாட்டிக்கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் வந்து 'நீங்கள் கருதினால் அவர்களை நீர்;, இலந்தை இலைகளின் மூலமும், மூன்று அல்லது ஐந்து அல்லது அதனை விட அதிகமான முறைகளில் குளிப்பாட்டுங்கள், இறுதியில் கற்பூரத்தை சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். (நூல் : புஹாரி 1253) இது சுத்தமான ஒரு பொருள் கலந்த நீராகும், என்றாலும் அக்கலவை நீர் என்ற பெயரை மாற்றவில்லை.

சுத்தமான நீர் என்பது, இயல்பு நிலையில் இருக்கக்கூடிய, அல்லது சுத்தமான ஒரு பொருள் கலப்பதன் மூலம் நீர்; என்ற பெயர் மாற்றம் பெறாத நீரை குறிக்கின்றது. இதன் மூலம் சுத்தம் (வுழூ) செய்ய முடியும்.2. அசுத்தமான நீர்

அசுத்தமான நீர் என்பது அதனுடைய பண்புகளான நிறம்,மணம்,சுவை ஏதாவது ஒன்று அசுத்தமான பொருளின் மூலம் மாற்றம் அடைவதை குறிக்கும்.

அசுத்தமான நீரைக் கொண்டு அசுத்தத்தை நீக்குவதற்கோ அல்லது தொடக்கை அகற்றுவதற்கோ உபயோகிப்பது கூடாது.நஜீஸை நீக்குதல்

நஜீஸை நீக்க வேண்டும் என்பதற்கான ஆதாரம் : அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் 'உம் ஆடைகளை தூய்மையாக வைத்துக் கொள்வீராக' (அல்குர்ஆன் - 74 : 04).

நஜீஸை நீக்கக்கூடிய அடிப்படையான பொருள் நீராகும். அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் : 'இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காக அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.' (அல்குர்ஆன் - 08 : 11)நஜீஸ்கள் மூன்று வகைப்படும்

1. கடினமான நஜீஸ். உதாரணம் : நாயின் வீணி

2. இலகுவான நஜீஸ். உதாரணம் : இரண்டு வயதிற்குட்பட்ட, பாலை மட்டும் உணவாக உட்கொள்கின்ற ஆண் பிள்ளையின் சிறுநீர்.

3. இது இரண்டிற்கும் இடைப்பட்டவை. உதாரணம் : பெண் பிள்ளையின் சிறுநீர்.கழுவி சுத்தம் செய்யப்படக்கூடியவைகள் மூன்று வகைப்படும்

1. பிழிந்து கழுவிக்கொள்ள முடியுமானவை - உதாரணம் : உடை இதனைக் கட்டாயமாக பிழிந்து கழுவ வேண்டும்.

2. பிழிந்து கழுவிக்கொள்ள முடியாதவை - உதாரணம் : தோல் இதன் இரு பக்கங்களையும் புரட்டி காய வைப்பதன் மூலம் சுத்தமாகி விடும்.

3. பிழிந்தோ, புரட்டியோ சுத்தம் செய்ய அல்லது காய வைக்க முடியாதவை - இதன் மீது பாரமான ஓரு பொருளை ஏற்றி, அதிலிருக்கும் நீரை அகற்றிட வேண்டும். உதாரணம் - மெத்தை.

நஜீஸ் பூமியில் அல்லது சுவர், கல், பாறை போன்றவற்றில் இருந்தால் அதை நீர் ஊற்றி கழுவுவதன் மூலம் சுத்தமாக்கலாம். இதற்கு சான்றாக ஒரு நாட்டுபுற அரபி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்ததற்காக அந்த இடத்தில் நீரை ஊற்றி சுத்தம் செய்ததாகக் கூறப்படும் நபிமொழியை எடுத்துக்கொள்ளலாம். (புஹாரி : 219 முஸ்லிம் : 285) இதேபோன்று மழைநீர், வெள்ளம் போன்றவற்றால் அந்த நஜீஸ் கழுவப்பட்டாலும் அந்த இடம், பொருள் சுத்தமாகி விடும்.

பாலை மட்டும் உணவாக உட்கொள்ளக்கூடிய ஆண் பிள்ளை சிறுநீர் கழித்தால் அந்த இடத்தில் நீரை தெளிப்பதன் மூலம் அந்த இடம், பொருள் என்பன சுத்தமாகி விடும். (அபூதாவூத் : 374)

உணவை உட்கொள்ளக்கூடிய சிறு பிள்ளை அல்லது பாலை மட்டும் உணவாக உட்கொள்ளக்கூடிய பெண் பிள்ளையின் சிறுநீர் பெரியவர்களின் சிறுநீரை போன்றதாகும். இதனை ஏனைய நஜீஸை சுத்தம் செய்வது போன்று கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

நஜீஸ் நாயின் வீணியின் மூலம் ஏற்பட்டதாக இருந்தால் அதனை ஏழு முறை நீரால் கழுவுவதன் மூலம் சுத்தமாகி விடும். அதிலே ஒரு தடவை மண்ணையும் சேர்த்து கழுவ வேண்டும். (முஸ்லிம் : 279)

நாயின் மூலம் ஏற்பட்ட நஜீஸ் அல்லாத வேறு வகையான சிறுநீர், மலம் போன்ற நஜீஸாக இருந்தால், அதனுடைய நிறம் அல்லது அதன் தன்மை நீங்கும் வரை தேய்த்து, பிழிந்து சுரண்டி கழுவுவதன் மூலம் அது சுத்தமாகி விடும்.

சிறுநீர், மலம் போன்றவற்றில் சுத்தமானவை எவை நஐPஸானவை எவை என்பதை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். எந்த மிருகம் சாப்பிடுவதற்கு ஹலாலோ அந்த மிருகத்தின் மலம், சிறுநீர் என்பன சுத்தமாகும். உதாரணம் : ஆடு, மாடு, ஒட்டகம்.

எந்த மிருகம் சாப்பிடுவதற்கு ஹலாலோ அந்த மிருகத்தின் வாயில் இருந்து வெளியாகும் வீணியும் சுத்தமாகும். அதேபோன்றுதான் பூனையின் வீணியும் சுத்தமாகும். (அபூதாவூத் : 75)

பூனையின் வீணி சுத்தம் என்பது போல் பறவைகளின் வீணியும் சுத்தமாகும். பூனையும், பறவையும் அல்லாமல் வேறு எந்த மிருகத்தின் இறைச்சி சாப்பிட முடியாதோ அந்த மிருகத்தின் விட்டை, சிறுநீர், வீணி என்பன நஜீஸாகும்.வினா இல 25
 
உணவை உட்கொள்ளும் சிறுபிள்ளை சிறுநீர் கழித்தால் எப்படி சுத்தம் செய்ய வேண்டும் ?கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget