ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 08

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார் என்று சாட்சி கூறுதல்

முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாக சாட்சியம் கூறுவதில் உள்ளடங்குபவை :

1. அவர் ஏவியவைகளை எடுத்து நடத்தல்.

2. விலக்கியவைகளை விட்டும் தவிர்ந்து நடத்தல்.

3. அவர் அறிவித்தவற்றை உண்மைப்படுத்தல்

4. அவர் காட்டித்தந்த விதத்தில் அல்லாஹ்வை வணங்குதல்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் அடியார், அவர்கள் மனித சமூகத்திற்கு அனுப்பப்பட்ட தூதர் என்று உள்ளும், புறமும் ஏற்றுக்கொள்வதும், அதற்கமைவாக செயற்படுதலுமே இதன் பொருளாகும்.

இவர் குறைஷிக் குலத்தை சேர்ந்த முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப் ஆவார்கள். இவர்கள் இப்றாஹிம் (அலை), இஸ்மாயில் (அலை) ஆகியோரின் பரம்பரையில் வந்த அரபினத்தைச் சேர்ந்தவர்களாவர்.

(ரஸூலுல்லாஹ்) என்பதற்கு, அல்லாஹ்வின் தூதர் என்று பொருளாகும். இவர் மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் நன்மாராயம் கூறி எச்சரிக்கை செய்பவராக அல்லாஹ்வால் அனுப்பப்பட்டார்கள். அல்லாஹ் கூறுகிறான், 'இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயம் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை'. (அல்குர்ஆன் - 34 : 28)

மேலும் இறுதி நபியாகவும் அல்லாஹ் அவரை அனுப்பி வைத்தான். 'முஹம்மது (ஸல்) அவர்கள்- உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை எனினும் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை) யாகவும் இருக்கின்றார்'. (அல்குர்ஆன் - 33 : 40)

முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகையோடு முன்னர் அருளப்பட்ட அனைத்து வேதங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. எனவே இவர் கொண்டு வந்த மார்க்கத்தைத் தவிர வேறெதனையும் பின்பற்ற முடியாது. இவர் கூறியதைத் தவிர வேறெதையும் செய்து சுவனம் செல்லவும் முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக, எனது சமூகத்தில் யஹூதியோ, நஸ்ரானியோ நான் சொல்வதைக் கேட்காமலும், நான் அனுப்பப்பட்ட நோக்கத்தை விசுவாசம் கொள்ளாமலும் மரணித்தால் அவர் நரகவாசியைத் தவிர வேறெவருமில்லை'. (அறிவிப்பவர் - அபூஹூரைரா (ரலி), ஆதாரம் - முஸ்லிம் : 153)வினா இல - 08
 
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் எந்த நபியின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் ?கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget