தபாற் துறையில் பரிணாம வளர்ச்சி - ஓர் மறுபக்கம்

பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரை தொடர்பாடல் துறை மனித வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாக விளங்குகிறது. இது இன்றைய நவீன காலத்தில் பாரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.

ஆரம்ப காலத்தில் வாழ்ந்த மக்கள், மன்னர்கள் தனது நிர்வாக ரீதியான தகவல்களை ஏனைய பிராந்தியத்தில் கடமை புரியும் தனது நிர்வாகிகளுக்கு நேரடியாக தனது தூதுவர்கள் மூலம் அனுப்பி வைத்தார்கள், இவ்வாறு அனுப்பப்படும் தூதுவர் அதனை உரிய முறையில் உரிய நபரிடம் கொண்டுபோய் சேர்ப்பார்.

எனவே இவ்வாறு நடைமுறையில் இருந்த தொடர்பாடல் துறை உமையாக்களின் ஆட்சிக் காலத்தில் பாரிய வளர்ச்சியை அடைந்தது, அவர்களின் செயல்முறையை ஒத்ததாக இன்றைய தபாற் துறை காணப்படுகிறது. இத்துறை இரண்டாம் கலீபா உமர் ரலி அவர்களின் ஆட்சிக் காலத்தில் ( ஹிஜ்ரி 13 – 23 ) சிறந்து விளங்கியது அதன் பின் உமையாக்களின் ஆட்சியாளராகிய முஆவியா இப்னு அபீ சுப்யானின் காலத்தில் பெரிதும் சிறப்புற்று விளங்கியது.

அன்றைய முஸ்லீம்கள் கடிதப் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கு முதலில் ஒட்டகத்தை பயன்படுத்தினார்கள், அதன் பின் கழுதையையும் இறுதியாக இச்சேவை வேகமாக நடைபெற வேண்டும் என்பதற்காக குதிரையை பயன்படுத்தினார்கள். இரண்டு ஊர்களுக்கிடையில் பல தபாற் தரிப்பிடங்களை அமைத்தார்கள், அதிலே தொடர்ந்து தொழில்புரியக்கூடிய ஒரு உத்தியோகத்தரை கலீபாவே நியமிக்கும் வழமை காணப்பட்டது, இத்தகைய தொழில் அன்றய காலத்தில் மிக உயர்ந்த தொழிலாக காணப்பட்டது,

அப்பாசியர்களின் ஆட்சிப்பரப்பு நீண்டு காணப்பட்டமையினால் கிட்டத்தட்ட ஆயிரம் தபால் நிலையங்கள் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது, அதேபோன்று அனுப்பப்படும் கடிதங்களுக்கு அடையாளமிட்டு முத்திரையிடும் நடைமுறையும் அமுல்படுத்தப்பட்டது, இவ்வாறு அமைக்கப்பட்ட தபால் நிலையங்கள் தபால் சேவையோடு மாத்திரம் நின்று விடாமல் பிற ஊர்களில் இருந்து வரும் பிரயாணிகளை கவனிக்கும் இடமாகவும், அவர்களுக்கான பிரயாண உதவிகள், அப்பிரதேசங்களின் காலநிலை, அங்கு செல்வதற்கான வழிகளை எடுத்துக் கூறி அறிவுரை வழங்கும் இடமாகவும் மாறியது.

இன்று தகவல் தொடர்பாடல் துறை நன்கு வளர்ச்சியடைய அன்றைய நடைமுறை தெரிதும் உதவியது.
  • இன்றைய நடைமுறைக்கு ஏற்ப படிப்படியான வளர்ச்சி. ( ஹிஜ்ரி – 13ல் இருந்து )
  • ஒட்டகம், கழுதை, குதிரை போன்ற மிருகங்கள் பயன்படுத்தப்பட்டது.
  • தபால் நிலையங்களில் தகவல், காலநிலை, பிரயாணம் தொடர்பான அறிவுறுத்தல்கள்.
  • ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபாலகங்கள் அமைக்கப்பட்டது.
  • தபால் உத்தியகத்தர்கள் நியமனம்.
  • கடிதங்களுக்கு அடையாளம், முத்திரையிடல் நடவடிக்கை.




கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget