இமாம் பல்கலைக்கழக பழைய மாணவர் ஒன்று கூடல் - ஓர் குறும்பார்வை

 (முஹம்மது வஸீம் ஹுஸைன்)
ஸஊதி அரேபியா ரியாத் மாநகரில் அமைந்துள்ள அல் இமாம் முஹம்மத் இப்னு ஸுஊத் இஸ்லாமிய பல்கலைக் கழகத்தின் இலங்கை மாணவர்களது பழைய மாணவர் ஒன்று கூடல் கடந்த 15.08.2017 செவ்வாய்க் கிழமை கொழும்பில் அமைந்துள்ள ஜம்இய்யது ஷபாப் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இலங்கை மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மௌலவி நயிமுல்லாஹ் அலியார் (தப்லிஹி) தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பழைய மாணவர்கள் சார்பாக ஜம்இயது ஷபாபின் பணிப்பாளர் மௌலவி ரஷீத், ஐ.ஐ.ஆர்.ஓ அமைப்பின் பணிப்பாளர் மௌலவி இம்றான், உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத், ஓட்டமாவடி மர்கஸ் அந்நூர் மத்ரஸாவின் அதிபர் மௌலவி ஹபீப், பழைய மாணவர்களான ஷேகு முஹையித்தீன் , மௌலவி முஜீபர், மௌலவி இம்தியாஸ், மௌலவி இஹ்ஸான் போன்ற பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

ஆரம்பமாக தலைவரினால் எமது மாணவர் அமைப்பின் உருவாக்கம், அதன் செயற்பாடுகள், எதிர்கால முன்னெடுப்புக்கள் பற்றி தெளிவுபடுத்தப்பட்டு, இப்பழைய மாணவர் மூலமாக இலங்கை தீவு பூராகவும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளல், பழைய மாணவர் ஒன்றியத்தின் அவசியம் பற்றியும் விரிவுபடுத்தப்பட்டது.

பின்னர் பல்கலைக்கழகத்தில் நிர்வாகிகளாக இருக்கும் சபைக்கு கீழ் இயங்கக் கூடிய வகையில் இணைப்பாளர்களை இலங்கையில் நியமித்து அதன் ஊடாக எமது எதிர்கால நடவடிக்கைகளை மேற் கொள்ளுதல் என்ற அனைவரது ஏகோபித்த கருத்தின் பிரகாரம் இலங்கைக்கான இணைப்பாளர்களாக மௌலவி ரஷீத், மௌலவி இம்றான், மௌலவி முஜீபர் ஆகியோர் ஏகமானதாக தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் எமது எதிர்கால திட்டங்கள் தொடர்பான கருத்துக்கள் பேசப்பட்டு அதற்கான சில காத்திரமான தீர்வுகளும் எட்டப்பட்டன. ஈற்றில் இக் கூட்டம் ஒவ்வொரு வருடமும் கூட்டப்பட வேண்டும் என்ற உறுதி மொழியோடு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 
கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget