ரவ்ழது ரமழான் வினா – விடை போட்டி (பாடம்- அகீதா, நாள் 01)



பாடம் - 01
1.1 அகீதா என்பதன் பொருள்.
அகீதா என்ற அரபு வார்த்தைக்கு மொழி ரீதியாகவும், பயன்பாட்டு வழக்கு அடிப்படையிலும் என இரு விதமான பொருள்கள் உள்ளன.
இது ஓர் அரபு மொழிச் சொல் எனும் அடிப்படையில் பொருள் கொண்டால், இதன் மூலச்சொல் அக்த் மற்றும் இக்த் என்பதாகும். இவற்றுக்கு முடிச்சு போடுதல், ஒன்றை இன்னொன்றோடு இணைத்தல், பற்றிப்பிடித்தல் போன்ற அர்த்தங்கள் கூறப்படுகின்றன.
பயன்பாட்டு வழக்கில், அல்லாஹ்வின் இறைமைக் கோட்பாடு (உலூஹிய்யா), பரிபாலணக் கோட்பாடு (ருபூபிய்யா), அல்லாஹ்வின் பெயர் மற்றும் பண்புக் கோட்பாடு (அஸ்மாஉ வஸ்ஸிபாத்) போன்ற அனைத்தையும் உறுதியாக நம்பிக்கை கொள்வதோடு, மலக்குமார்கள், வேதங்கள், நபிமார்கள், மறுமை நாள், கழா கத்ர், மறைவான விடயங்கள் போன்ற அனைத்தையும் இஸ்லாமிய வரையறைக்குட்பட்டவாறு நம்பிக்கை கொள்வதை இவ் அகீதா என்ற சொல் குறித்து நிற்கின்றது.
இதை சுருக்கமாகக் கூறுவதானால் இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த அம்சங்களை எவ்வித சந்தேகங்களும் இன்றி, அல்லாஹ்வும், அவனது தூதரும் எமக்கு அறிவித்துத் தந்ததன் அடிப்படையில் உண்மைப்படுத்தி, உறுதியாய் நம்பிக்கை கொள்வதாகும்.
1.2. நபித்துவத்திற்கு முன் அரேபிய மக்களின் நிலை.
இஸ்லாத்தின் வருகைக்கு முன் அரேபிய தீபகற்பம் அறியாமையிலும் இணைவைப்பிலும் இருந்து வந்துள்ளது. இஸ்லாமிய வருகையைத் தொடர்ந்து அங்கு வாழ்ந்தவர்கள் கண்ணியமிக்கவர்களாகவும், சமூகத்தின் சிறந்த தலைவர்களாகவும், இஸ்லாம் போதிக்கும் நற்குணங்களை தமது வாழ்க்கை நெறியாக எடுத்து நடந்தவர்களாகவும் மாறி, அரேபிய தீபகற்பத்தை சிறந்த நிலைக்குக் கொண்டுவந்தனர்.
அரேபிய தீபகற்பம் இஸ்லாமிய வருகைக்கு முன்பு தன்னகத்தே கொண்டிருந்த சில தீய விடயங்கள்:
1. அரேபியர்கள் அல்லாஹ்வை விசுவாசம் கொண்டிருந்த போதிலும் அவர்களுக்கும், அல்லாஹ்வுக்கும் மத்தியில் இடைத்தரகர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அல்லாஹ் கூறுகிறான், அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை'  (என்று கூறுகின்றனர்).” (அல்குர்ஆன் 39:03).
காலப்போக்கில் இவ் இடைத்தரகர்களை சக்திவாய்ந்த கடவுள்கள் என எண்ணத் துவங்கிவிட்டனர். இவர்களுக்கு தீமையைத் தடுக்கவும், நன்மையை ஏற்படுத்தித் தரவும் முடியும் என நம்பிக்கை கொண்டுவிட்டனர். அவர்களை கடவுள்களாக ஏற்றுக்கொண்டு தமது வழிபாடுகளை அவர்களுக்காக செய்ய ஆரம்பித்தனர்.
ஒவ்வொரு ஊருக்கும் ஓர் கடவுள் என ஏற்படுத்திக் கொண்டனர். அதில் மக்கா நகரத்திற்கு ஹுபல் என்ற சிலையும், தாயிப் நகரத்திற்கு லாத் என்ற சிலையும் மிகவும் பிரபல்யமான கடவுள்களாகக் காணப்பட்டன.
அவ்வாறே ஒவ்வொரு வீட்டிற்கும் கடவுள்கள் வர ஆரம்பித்தன. இதன் காரணமாக சிலை வியாபாரம் அக்காலத்தில் பிரசித்து பெற்று விங்கியது. புனித கஃபா ஆலயம் அக்காலத்தில் ஊர், கோத்திரம் என பலதரப்பட்ட, பலவகையில் அமைந்த 360 சிலைகளைக் கொண்டு நிரம்பி வழிந்தது.
2. சகுணம் பார்த்தலும் , அவநம்பிக்கை வைத்தலும் : திருமணம் முடித்தல், பிரயாணம் செல்லுதல், வியாபாரம் செய்தல் போன்ற அனைத்துக் காரியங்களுக்கும் சகுணம் பார்ப்பவர்களாக இருந்து வந்தனர். இதற்காக ஓர் பறவையை எடுத்து, அதை வானில் பறக்க விடுவார்கள். அது வலது திசையை நோக்கிப் பறந்தால் இதில் நன்மைகளும், பிரயோசனங்களும் அதிகம் இருப்பதாக நினைத்து, அக்காரியத்தைத் தொடர்வார்கள். அப்பறவை இடது பக்கம் பறந்தால் அதில் ஏதோ தீமை ஏற்பட இருக்கிறது என நினைத்து அக்காரியத்தை கைவிட்டு விடுவார்கள். அதே போன்று ஆந்தையின் சப்தத்தை கேட்டாலோ, காகத்தைக் கண்டாலோ அன்றைய தினம் தமக்கு ஏதோ ஓர் தீங்கு நடைபெறப்போகிறது என எண்ணி, வருத்தப்படுவார்கள். அவ்வாறே தமக்கு எவ்வித வெற்றியும் கிட்டாது என எண்ணி ஷவ்வால் மாதத்தை அபசகுணம் நிறைந்த மாதமாகவே கருதி வந்துள்ளனர். இம்மாதத்தில் அவர்கள் எவ்வித நல்ல காரியங்களையும் செய்திட மாட்டார்கள்.
இப்படிப்பட்டவர்கள் தான் புனித இஸ்லாம் இப் பூமிக்கு வந்ததன் பின்னர் தலை சிறந்த அறிஞர்களாகவும், இஸ்லாத்துக்காக தமது உயிர்களைக் கூட துச்சமாக மதித்து செயற்பட்டவர்களாகவும், இஸ்லாத்துக்காக பிரச்சாரப் பணியில் தம்மை மும்முரமாக செயற்படுத்தியவர்களாகவும் திகழ்ந்தார்கள். அவ்வாறே நாளை சுவர்க்கத்திற்குச் செல்லவும் எம்மை முந்தி சென்றுவிடுவார்கள். இவ்வாறு இவர்களுக்குள் சிறந்த ளுமையை வித்திட்டு, அவர்களை சிறந்தவர்களாய் மாற்றிய பெருமை இஸ்லாம் ஒன்றிற்கே சொந்தமானது.

கேள்வி இல 01
மக்கத்து குறைஷிகள் வணங்கிய சிலையின் பெயர் என்ன?

கருத்துரையிடுக...

This comment has been removed by a blog administrator.

அன்புள்ள சகோதரர்களே!

எமது சமூகவலைத்தளம் மூலமாக இஸ்லாமிய அடிப்படைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற நன் நோக்கில் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் இப் போட்டி நிகழ்வை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.

எனவே தயவு செய்து கேள்விகளுக்கான விடைகளை பின்னூட்டமாக பதிய வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இணைத்தள ஊடகப் பிரிவு

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget