ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 11)
பாடம் 02
2.1      தஜ்வீத் கலையை பற்றிய சில தகவல்:
2.1.1 தஜ்வீதுடைய வரைவிலக்கணம்
தஜ்வீத் என்றால் பரிபாஷையில் அழகுபடுத்துதல்.
புழக்கப்பாஷையில்: “குர்ஆனிலுள்ள ஒவ்வொரு எழுத்துக்களையும் அது வெளியாகும் இடத்திலிருந்து வெளியாக்கி அதற்குரிய சட்டங்களைக் கொடுத்து ஓதுதல் ஆகும்”
2.1.2     தஜ்வீதைப் படிப்பதன் சட்டம்:
தஜ்வீதைப் படிப்பது பர்ளு கிபாயாவாகும்அதைக்கற்ற பின் அதன்படி ஓதுவது பர்ளு ஐன் ஆகும்.
2.1.3     தஜ்வீத் கலையை உருவாக்கியவர்கள்:
அல்குர்ஆனில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களால் இது உருவாக்கப்பட்டது. அதாவது இஸ்லாமிய எல்லை விரிவடைந்து கொண்டிருந்த காலப்பகுதியில் அதிகமான அஜமிகள் (அரபி அல்லாதவர்கள்)  இஸ்லாத்தில் நுழைந்தனர். இதனால் அரபுப்பாஷையில் சிலமாற்றங்கள் ஏற்படத்துவங்கின. இது அல்குர்ஆனிலும் பிரதி பலித்தது . எனவே தஜ்வீத் கலையை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்றப்பட்டது தஜ்வீதை கற்பதன்  பயன்:
 அல்குர் ஆனை ஓதும் போது ஏற்படக்கூடிய தவறுகளில் இருந்து நாவைப் பாதுகாக்கிறது.
2.2.1       தஜ்வீத் பற்றி அல்குர்ஆன் அல்ஹதீஸ்
மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக”. (சூரா: முஸ்ஸம்மில் வசனம்: 4).
இதனை படிப்படியாக நாம் இறக்கினோம்.” (சூரா:அல்புர்கான் வசனம்: 32).

ஆயிஷா (ரலி) அவர்கள், “குர்ஆனை மிகச்சரியாக ஓதுபவருடன் உயர்வான, கீழ்ப்படிதலுள்ள     வானவர்கள் இருப்பார்கள், வசனங்களைத் திக்கித் திணறி சிரமத்துடன் ஓதுபவருக்கு இரு மடங்கு நன்மை உள்ளதுஎன அறிவிக்கிறார்கள்.[புகாரி, முஸ்லிம்].

2.3 “அஊதுசொல்வதன் ஒழுங்கு முறைகள்.
 அல்குர்ஆன் ஓதஆரம்பிக்கும் போது அஊது சொல்வது விரும்பத்தக்கதாகும். வாஜிப் என்பதாகவும் கூறப்பட்டுள்ளது.அஊது என்பது  “அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்“ (சூரா அந்நஹ்ல் வசனம் 98ல் வந்திருப்பது போன்று) கூறுவதாகும்.
விழாக்களிலும் பாடவகுப்புக்களின் ஆரம்பத்திலும் “அஊது” சொல்வது விரும்பத்தக்கதாகும். தொழுகையிலும் தனியாக குர்ஆன் ஓதும் போதும் மனதுக்குள் கூறிக்கொள்ளலாம்.
அல்குர்ஆனை ஓத ஆரம்பிக்கும் போது “அஊது” சொல்வதன் முறைகள் நான்கு :
1.          அனைத்தையும்(அஊது, பிஸ்மி, சூராவின் ஆரம்பம்) தனித் தனியாக ஓதுதல்.
2.          அனைத்தையும் (அஊது, பிஸ்மி, சூராவின் ஆரம்பம்) சேர்த்து ஓதுதல்.
3.          அஊதை மாத்திரம் தனியாகவும் பிஸ்மி மற்றும் சூரா ஆரம்பத்தை சேர்த்தும் ஓதுதல்.
4.          அஊது, பிஸ்மியை சேர்த்து ஓதிவிட்டு சூராவின் ஆரம்பத்தை தனியாக ஓதுதல்.

2.4 “பிஸ்மி” சொல்வதன் சட்டமும் அதன் முறைகளும்:
 சூராக்களின் ஆரம்பத்தில் “பிஸ்மி” சொல்வது வாஜிபாகும். எனினும் இதனை விடுவதால் பாவம் கிடைக்க மாட்டாது. சூரா தௌபாவைத்தவிர அதிலே கூறப்பட மட்டாது, சூராக்களின் இடையில் இருந்து ஆரம்பிக்கும் போது “பிஸ்மி” சொல்வது ஆகுமானதாகும். இரண்டு சூராக்களுக்கு இடையில் “பிஸ்மி” சொல்வதற்கு மூன்று முறைகள் இருக்கின்றன.
v அனைத்தையும் (சூராவின் இறுதி, பிஸ்மி, மற்ற சூராவின் ஆரம்பம்) சேர்த்து ஓதுதல்.
v அனைத்தையும் (சூராவின் இறுதி, பிஸ்மி, மற்ற சூராவின் ஆரம்பம்) பிரித்து தனித்தனியாக ஓதுதல்.
v சூராவின் இறுதியை தனித்தும் பிஸ்மிலுடன் இரண்டாவது சூராவை சேர்த்தும் ஓதுதல்.

குறிப்பு:-
சூரத்துல் “அன்பாலுக்கும்” “தௌபாவுக்கும்” இடையில் பிஸ்மில் சொல்லப்பட மாட்டாது.

கேள்வி இல 11
அஊது பில்லாஹி மினஸ் செய்தானிர் ரஜீம் என்ற வசனம் எந்த சூறாவில் இடம் பெற்றுள்ளது? அதன் வசன இலக்கம் என்ன?

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget