ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – அகீதா, நாள் 02)பாடம் - 02
2.1. அகீதாவின் முக்கியத்துவம்.
இஸ்லாமிய கொள்கை கோட்பாட்டிற்கு (அகீதாவிற்கு) பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன. அவற்றுள் சில:
1. அனைத்து நபிமார்களும், ரஸூல்மார்களும் அல்லாஹ்வை இறைவனாக ஏற்று, அவனை மாத்திரமே வணங்க வேண்டுமென்ற இஸ்லாமிய கொள்கையின் பக்கமே மக்களை அழைத்துள்ளனர். அல்லாஹ் கூறுகிறான், 'என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள்!' என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை.” (அல்குர்ஆன் 21:25)
2. இறைமைக் கோட்பாடு அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரியது என ஒருமைப்படுத்துவதும், வணக்க வழிபாடுகளை அவனுக்கு மாத்திரம் நிறைவேற்றுவதுமே மனிதர்களினதும், ஜின்களினதும் முதல் நோக்கமாகும். அல்லாஹ் கூறுகிறான், ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.” (அல்குர்ஆன் 51:56)
3. ஓர் அடியானிடமிருந்து நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஏகத்துவமே அளவுகோலாகத் திகழ்கின்றது. நற்செயல்களுக்கான கூலி பூரணமடைய ஏகத்துவம் பூரணமடைய வேண்டும். அதில் ஏதாவது குறைகளோ, ஏற்றத்தாழ்வுகளோ ஏற்பட்டால் நற்செயல்களுக்கான கூலி குறைந்து விடுவதோடு, நிலையை கருத்தில் கொண்டு முழுமையாக அழிந்து விடக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படக் கூடும்.
4. மறுமை நாளில் வெற்றிபெற்றிட, சீரான இஸ்லாமிய கொள்கையே அவசியமாகின்றது. அதன் முக்கியத்துவத்தை அறிந்து, சரியான அமைப்பில் அதைக் கற்றிட வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யார் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை எனக் கூறுகின்றாரோ அவரை அல்லாஹ் நரகிற்கு ஹராமாக்கி விடுகின்றான்” (அறிவிப்பவர்: இத்பான் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).
5. இது அல்லாஹ்வுக்கும், அடியானுக்குமிடையில் உள்ள தொடர்பை வரையறுக்கின்றது. அல்லாஹ் தன் அடியானுக்குத் தேவையான பாதுகாப்பு, அருட்கொடைகள் போன்றவற்றை வழங்கி வருகின்றான். இதற்காக அடியான் அல்லாஹ்வுக்குப் பயந்து, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, அவனின் கண்காணிப்பை உணர்ந்து, வணக்க வழிபாடுகளை அவனுக்கு மாத்திரமே செய்து வரவேண்டும்.
6. ஒரு மனிதனுக்கு உலகில் சந்தோசமும், மன அமைதியும் கிடைக்க மிக உன்னத காரணமாகத் திகழ்வது அவன் தன் இரட்சகனை அறிந்து கொள்வதுதான். எனவே மனிதன் தன் அனைத்துத் தேவைகளை விடவும் அல்லாஹ்வின் இறைமை, பரிபாலணம், அவனின் பெயர்கள், பண்புகள் போன்ற விடயங்களை அறிந்து கொள்ளும் விடயத்தைத் தான் முன்னிருத்திக்கொள்ள வேண்டும்.
7. இவ் இஸ்லாமியக் கொள்கை மனிதனின் சிந்தனையில் தோன்றும் அனைத்து விதமான வினாக்களுக்கும், சந்தேகங்களுக்கும் விடை தருகின்றது. படைப்பாளனின் தன்மைகள், படைப்பின் ஆரம்பம், அதன் முடிவு, அது படைக்கப்பட்டதன் நோக்கம், இப்பிரபஞ்சத்தில் இருக்கும் வேறு பல உலகங்கள், உயிரினங்கள், அவற்றுக்கும் எமக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள், கழா கத்ர் போன்ற மனித சிந்தையில் தோன்றும் அனைத்திற்கும் இது விடை தருகின்றது.
8. இக் கோட்பாட்டைப் புரிந்து கொள்ள முதலில் அல்குர்ஆனையும், ஸுன்னாவையும் கற்றுத் தேரல் வேண்டும். ஏனெனில் இவை இரண்டிலுமிருந்தே இஸ்லாமிய நம்பிக்கை சார் கோட்பாடு பெறப்பட்டிருக்கின்றது.
9. ஒரு மனிதனைச் சூழ இருக்கும் தீய சிந்தனைகள், சித்தாந்தங்கள், மோசமான கொள்கைகள், கோட்பாடுகள் போன்ற அனைத்திலிருந்தும் அவனை இஸ்லாமியக் கோட்பாடு பாதுகாக்கின்றது.
எனவே இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த சரியான இக்கொள்கை (அல் அகீதா அல் இஸ்லாமிய்யா) மார்க்கம் எழுச்சி பெருவதற்கு அடித்தளமாகவும், நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான உயரிய காரணியாகவும், இம்மை மறுமையில் வெற்றியைப் பெற்றுத் தர வல்லது என்பதையும், அனைத்து நபிமார்களும் இக்கொள்கையின் பால் தான் தம் மக்களை வழிநடாத்தி இருக்கிறார்கள் என்பதையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
அல்லாஹ் கூறுகிறான், நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் இழப்பை அடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது” (அல்குர்ஆன் 39:65)2.2. இஸ்லாமியக் கோட்பாட்டின் மூலாதாரங்கள்
இஸ்லாமியக் கோட்பாடு முக்கிய மூன்று ஆதாரங்களின் அடிப்படையில் பெறப்படுவதாக அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் அறிஞர்கள் ஏகோபித்த முடிவில் இருக்கின்றனர். அதற்கு பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை ஆதாரமாக முன்வைக்கின்றனர்.
அல்லாஹ் கூறுகிறான், நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்), உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்!” (அல்குர்ஆன் 4:59)
மேற்கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுமாறு வந்த ஏவல், அல்குர்ஆனையும், நபி r அவர்களுக்குக் கட்டுப்படுமாறு வந்த ஏவல், ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்பட்டையில் அமைந்த ஸுன்னாவையும், அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்படுமாறு வந்த ஏவல், இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவுகளையும் குறிக்கின்றது.
2.2.1. முதல் ஆதாரம்:
இதன் முதல் ஆதாரம் அல்குர்ஆன் ஆகும். இது பல சந்தர்ப்பங்களுக்கமைவாக 23 வருடங்களாக சிறு சிறு பகுதிகளாக ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம் நபி r அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதமாகும். இது சூரதுல் பாத்திஹாவைக் கொண்டு ஆரம்பித்து, சூரதுன் நாஸைக் கொண்டு முடிவடைகின்றது. இது எவ்விதக் குறைபாடுகளுமற்ற, மனிதக் கையூடல்கள் எதுவும் அடங்கிறாத, பல அற்புதங்களை தன்னகத்தே கொண்ட அல்லாஹ்வின் பேச்சாகும். இதுவே இஸ்லாமிய கொள்கை பெறப்படும் முதல் மூல நூலாகும்.
அல்லாஹ் கூறுகிறான், அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்து விட்டன. அவனது திருப்தியை நாடுவோருக்கு இதன் மூலம் அல்லாஹ் ஈடேற்றத்தின் வழிகளைக் காட்டுகிறான். தன் விருப்பப்படி அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு செல்கிறான். அவர்களுக்கு நேரான வழியைக் காட்டுகிறான்..” (அல்குர்ஆன் 05:15-16)
மேலும், நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும், தனது தூதர் மீது அவன் அருளிய வேதத்தையும், இதற்கு முன் அவன் அருளிய வேதத்தையும் நம்புங்கள்!” (அல்குர்ஆன் 04:136)
நபி r அவர்கள் கூறினார்கள், உங்களிடம் இரு விடயங்களை விட்டுச் செல்கிறேன். அவற்றை கடைபிட்டிக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறிட மாட்டீர்கள். அவை அல்லாஹ்வின் வேதமும், அல்லாஹ்வின் தூதருடைய வழிமுறையுமாகும்” (அறிவிப்பவர்: மாலிக் இப்னு அனஸ், ஆதாரம்: அத்தம்ஹீத் 24/331)
2.2.2. இரண்டாம் ஆதாரம்:
நபி r அவர்களிடமிருந்து உறுதியாக வந்த செய்திகள்.
இவை நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம், மற்றும் அவரின் பண்பு, தோற்றம் பற்றிய தன்மைகள் அனைத்தையும் குறிக்கின்றன.
நபியவர்களின் சொல்லுக்கான உதாரணம்: உங்கள் வணக்க வழிபாடுகளை என்னிடமிருந்தே பெற்றிடுங்கள் (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் t, ஆதாரம் : முஸ்லிம், அஹ்மத், நஸாயீ).
நபியவர்களின் செயலுக்கான உதாரணம்: ஆயிஷா ك  அறிவிக்கிறார்கள், நபி r அவர்கள் தமது இரு கால் பாதங்களும் வீங்கும் அளவிற்கு இரவில் நின்று வணங்குவார்கள்” (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).
நபியவர்களின் அங்கீகாரத்திற்கான உதாரணம்: நபி rஅவர்களின் சபையில் ஹாலித் பின் வலீத் t அவர்கள் உடும்பு சாப்பிட்டார்கள். நபியவர்கள் அதை பார்த்துவிட்டு மௌனித்து விட்டார்கள் (சிறுது சுருக்கத்துடன்)” (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் t, ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).
நபியவர்களின் தோற்ற அமைப்புக்கான உதாரணம்:நபி rஅவர்கள் அழகான முகம் உடையவர்களாகவும், நற்பண்பு மிக்கவராகவும் திகழ்ந்தார்கள். அவர்கள் இனி இல்லை என்னும் அளவிற்கு உயரமானவரோ, குட்டையானவரோ கிடையாது.” (அறிவிப்பவர்: பர்ராஃ இப்னு ஆஸிப் t, ஆதராம்: முஸ்லிம்)
நபியவர்களின் குணத்திற்கான உதாரணம்:மனிதர்களில் அதிகம் கொடை கொடுப்பவராய் நபி rஅவர்கள் இருந்தார்கள். ரமழான் மாதத்தில் அதை விடவும் கொடை கொடுப்பவராய் இருந்தார்கள்” (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் t, ஆதாரம்: முஸ்லிம்)
நபியவர்களின் வழிமுறைகளும் அல்குர்ஆனைப் போன்று வஹியுடன் சம்பந்தப்பட்டவையாகும். அல்குர்ஆன் கூறும் சுருக்கமான விடயங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், அல்குர்ஆனில் கூறப்படாத விடயங்களை தெளிவுபடுத்தக் கூடிய வகையிலும் ஸுன்னா (நபியவர்களின் வழிமுறை) இடம் பெறுகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான், ''நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று (நபியே நீர்) கூறுவீராக! (அல்குர்ஆன் 03:31)
மேலும், மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்” (அல்குர்ஆன் 16:44).
நபி rஅவர்கள் கூறினார்கள், என்னுடைய வழிமுறையை பின்பற்றுமாறு நான் உங்களை கட்டாயப்படுத்துகிறேன்” (அறிவிப்பவர்: அல் இர்பாழ் இப்னு ஸாரியா t, ஆதாரம்: அபூதாவுத்)
2.2.3. மூன்றாவது ஆதாரம்:
இஜ்மா (இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவுகள்). இது மூலாதாரமாக அல்லாமல் துனை மூலாதாரமாகவே கொள்ளப்படுகின்றது. நபியவர்களின் மரணத்தைத் தொடர்ந்தே இது தோற்றம் பெருகின்றது. இதிலிருந்து இஸ்லாமிய கொள்கை சார்ந்த அம்சங்களை பெற வேண்டுமென்றால் இதற்கென சில நிபந்தனைகள் இருக்கின்றன. அவை பூரணமாகினாலே ஹியிற்கு அடுத்தபடியாக இதனை ஆதாரமாகக் கொள்ளலாம். அவை:
1. இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் ஏகோபித்த முடிவு இருக்க வேண்டும். இதில் இஸ்லாமிய அறிஞர் என்ற வட்டத்தினுள் இடம்பெறாதோரின் முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
2. ஆதாரங்களை முன்வைப்பதில் அவர்கள் கருத்துவேறுபாடு இல்லாமல் இருக்க வேண்டும். தவறான ஆதாரங்களை முன்வைத்து, கருத்துவேறுபட்டால் அவரின் முடிவுகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
3. மார்க்க விடயத்தில் மாத்திரமே இவ் ஏகோபித்த முடிவுகள் இருக்க வேண்டும். அது அல்லாத கணிதம், புவியியல், வைத்தியம், அரசியல், மொழியியல் போன்றவைகள் இஜ்மா என்ற வட்டத்தினுள் இடம் பெறாது.
இஜ்மாவில் அல்குர்ஆன், ஸுன்னாவோடு தொடர்பான விடயங்கள் மாத்திரமே கருத்தில் கொள்ளப்படும். அது அல்லாத விடயங்களை அறிஞர்கள் ஆய்வு செய்து, அதன் வாயிலாக ஏகோபித்த முடிவுகளை, தமது சொந்த கருத்துக்களின் மூலம் கொண்டு வர விளையமாட்டார்கள். அவ்வாறு செய்வது அல்லாஹ்வின் வஹீக்கு மாற்றம் செய்த பாவத்தை அவர்களுக்கு ஈட்டிக் கொடுத்து விடும்.
அல்லாஹ் கூறுகிறான், நேர் வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது.” (அல்குர்ஆன் 04:115)
இஜ்மாவுக்கான சில உதாரணங்கள்: நபியவர்கள்தான் நபிமார்களில் சிறந்தவர்கள். அபூ பக்ர் (ரலி), உமர் (ரலி)அகியோரின் கிலாபத்தை அனைத்து முஸ்லிம் அறிஞர்களும் ஏற்றுள்ளணர். அபூ பக்ர் (ரலி) அவர்கள் அனைத்து ஸஹாபாக்கிளிலும் சிறந்தவர்கள். உஸ்மான் (ரலி)அவர்களைக் குறை கூறுபவன் வழிகேடன் என்பதில் அனைத்து முஸ்லிம் அறிஞர்களும் ஒருமித்த கருத்திலுள்ளனர்.
2.2.4. நான்காவது ஆதாரம்:
அல்குர்ஆனையும், ஹதீஸையும் அவை இறங்கும் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் விளங்கிய பிரகாரம் விளங்க முற்பட வேண்டும். அடிப்படைக் கொள்கை, வணக்க வழிபாடுகள், வழிகாட்டல்கள், நற்குணங்கள் அனைத்திலும் வஹீ இறங்கும் காலத்தில் வாழ்ந்து, அதனை நேரடியாகப் பார்த்த அந்நபித்தோழர்களின் விளக்கங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கேள்வி இல 02
இஸ்லாமிய கோட்பாட்டின் மூலாதாரங்களில் ஒன்றான இஜ்மாவிற்கான உதாரணம் ஒன்று தருக?
 

கருத்துரையிடுக...

அன்புள்ள சகோதரர்களே!

எமது சமூகவலைத்தளம் மூலமாக இஸ்லாமிய அடிப்படைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற நன் நோக்கில் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் இப் போட்டி நிகழ்வை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.

எனவே தயவு செய்து கேள்விகளுக்கான விடைகளை பின்னூட்டமாக பதிய வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இணைத்தள ஊடகப் பிரிவு

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget