“லா இலாஹ இல்லல்லாஹ்” வின் பொருளை அறிந்துகொள்வோம்... பகுதி : 02 // Abul Hasan (Sahwi,Madeni)


வழிகெட்ட அல்லது வழி தவறிய சிந்தனையுடையவர்கள் இக்கலிமாவுக்குத் தரும் பொருள்.

தவறான பொருள் 1:
'' உண்டாகியிருக்கும் அனைத்தும் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை''.
(لا وجود إلا الله)
இப்பொருளுக்கும், நபிமார்கள் அனுப்பப்பட்ட நோக்கத்திற்கும் எவ்வித தொடர்பையும் காணமுடியாத, ஒட்டு மொத்த வழிகேட்டையும் உள்ளடக்கிய கொள்கைகொண்ட பொருள் இதுவாகும். இக்கொள்கையுடையவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்களாகக் கணிக்கப்படுவர். ஏனெனில், இஸ்லாத்தில் இல்லாத, புராணங்களை வழிபாடாகக் கொண்டது மட்டுமின்றி, மொத்தத்தில் இந்து கலாசாரமான அத்வைதக் கொள்கையாகவே இது காணப்படுகிறது.
(இக்கொள்கையை விட்டும் அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக!) 

 இஸ்லாம் என்பது, நபி (ஸல்) அவர்கள் போதித்தவைகளே. அவர்களின் வாழ்கையில், ''உண்டாகியிருக்கும் அனைத்தும் அல்லாஹ்வேயன்றி வேறில்லை'' என்பதை உணர்த்தும் எந்த செயலும் அறியப்படவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள் எந்த சமூகத்திலிருந்து தூதராக அனுப்பப்பட்டார்களோ, அச்சமூகத்தினர் கூட, இந்த முஹம்மத், ((ஸல்)), ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை"" என்றல்லவா சொல்கிறார் என உணர்ந்திருந்தார்கள்.
உதாரணமாக:
 நபி (ஸல்) அவர்களது பிரச்சாரமெல்லாம் ''லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறுங்கள் வெற்றி பெறுவீர்கள்" என்று தான் இருந்தது. அவ்வேளை குறைஷிகளால் பின்வருமாறு சொல்லப்படுகிறது.

أَجَعَلَ الْآلِهَةَ إِلَٰهًا وَاحِدًا ۖ إِنَّ هَٰذَا لَشَيْءٌ عُجَابٌ
''இவர், (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்). (ஸாத்:5)

 "உண்டாகியிருக்கும் அனைத்துமே அல்லாஹ்வன்றி வேறில்லை" எனும் பொருள்பட நபியவர்கள் இக்கலிமாவைக் போதித்திருந்தால், அச்சமுதாயத்திலிருந்து எவரும், இந்நபியவர்களை எதிர்த்திருக்க வாய்ப்பிருந்திருக்காது, இன்னும், தான் அதிகம் நேசிக்கும் ஊரான மக்கா நகரைவிட்டும் நபியவர்கள் வெளியேறியும் இருக்கமாட்டார்கள். அது தவிர, ''உனக்கு நாசம் உண்டாகட்டும்'' என்று நபியவர்களைப் பார்த்து மண்ணை அள்ளி வீசிய அபூ லஹபும் கூட அவ்வாறான ஒரு பாதகமான செயலைச் செய்திருக்கமாட்டான்.
எனவே, ''லாஇலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவுக்கு மேற்படி பொருள் கொடுப்பது உறுதியான வழிகேடு, இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் மிகப் பெரும் பாவகரமான செயல் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

அல்லாஹ் கூறுகிறான்:
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ
அவனைப் போன்று எதுவுமில்லை, அவன் கேட்பவன் பார்ப்பவன். (42:11)

தவறான பொருள் 2:
சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர வேறு எவருக்குமில்லை.

(لا حاكمية إلا لله , لا حكم إلا لله , لا حاكم إلا الله)
 வெற்றி, தோல்வி என அல்லாஹ் தீர்ப்புக் கொடுப்பதற்கு முன், சமாதானத்திற்கு வருவது அல்லாஹ்வின் தீர்ப்பல்ல எனக்கூறி, தீர்ப்பு வழங்கும் (சட்டமியற்றும்) அதிகாரம் அல்லாஹ்வுக்கேயன்றி வேறவருக்குமில்லை என முதலில் கூறியவர்கள் கவாரிஜ்களாகும். ஆனால் இன்று ஓர் இயக்கித்தினர் இதனை ஷஹாதாக் கலிமாவின் பொருளாகவே அர்த்தம் கொடுக்கின்றனர். என்றாலும், நமது நாட்டைப் பொறுத்தவரை, மக்களிடமிருந்து தங்களது கொள்கையைப் பாதுகாப்பதற்காக, "சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கன்றி வேறவருக்குமில்லை'' என்பதோடு, நாம் சிறு வயது முதல் அறிந்திருந்த ''வணக்கத்துக்குரியவன்'' என்பதையும் சேர்த்து ''வணக்கத்திற்குரியவன், சட்டமியற்றும் அதிகாரத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறவருமில்லை'' எனப் பொருள் கூறுவர். இது, மக்கள் விரண்டுவிடக் கூடாது எனக் கையாளும் ஒரு தந்திரமாகும். ஆனால், அவர்களின் உண்மையான கொள்கையும், கலிமாவுக்குக் கொடுக்கும் பொருளும்: ''சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே அன்றி வேறவருக்குமில்லை'' என்பதாகும்.

அவர்களின் கொள்கைக்கு ஆதாரமாக பின்வரும் வசனங்களைக் கூறுவர்:
إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ ۚ
அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. (யூஸுஃப்: 40)
وَاللَّهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهِ 
மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! (அர்ரஃது:41)

இது போன்று இன்னும் சில வசனங்களைப் பார்க்கலாம்.
என்றாலும், இவ்வனைத்து வசனங்களின் தொடர்களைக் கவனிக்கும் போது, இவைகள் ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' என்பதனுடைய பொருளுக்குரிய வசனங்களின்றி, அவைகள் அல்லாஹ்வின் செயல்களை சுட்டிக்காட்டும் வசனங்கள் என்பதை சந்தேகமின்றி அறிந்துகொள்ளலாம்.

அல்லாஹ், இம்மனித இனத்தைப் படைத்த நோக்கம், அவனை வணங்குவதற்கே அன்றி வேறில்லை.

"ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லை". (51:56)

இந்நோக்கத்தை மனித சமுதாயம் நிறைவேற்றிட கற்றுக் கொடுக்கவே அல்லாஹ், அவனது தூதர்களை அனுப்பினான்.

"மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், (1) அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; (2) ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்". அல் குர்ஆன்: 16:36

தனது செயற்பாடுகள், பெயர்கள் பண்புகளைப் பார்த்து தன்னை மட்டும் வழிபட வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் அடியார்களைப் படைத்திருக்கிறான்.

அல்லாஹ், அவனது செயற்பாடுகள் தொடர்பாக நபி (ஸல்) அவர்களை பார்த்து பின்வருமாறு கூறுகிறான்.

وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ ۚ
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்; ''அல்லாஹ் தான்'' என்று அவர்கள் நிச்யமாகக் கூறுவார்கள். 

அல்லாஹ்வின் செயல்கள் என்பது, படைத்தல், காத்தல், அழித்தல், நிர்வாகத்தன்மை, சட்டமியற்றுதல் போன்ற அனைத்தும் அல்லாஹ்விற்குரியது என்று பொருள்படும்.

படைப்பாளந்தான், தனது படைப்புகளை எவ்வாறு நிருவகிக்க வேண்டும் என்பதை அறிவான். நிருவாகத்தன்மையில் உள்ளதுதான் சட்டமியற்றும் அதிகாரம். இதனை அறிந்தோ அறியாமலோ அன்றும் சரி இன்றும் சரி அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆக, "சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது" என இக் ''கலிமா''வுக்கு பொருள் கொடுப்பது தவறான ஒரு சிந்தனைப்போக்காகும்.

அல்லாஹ்வின் தூதர்கள் அனைவரும் எதற்காக, எதனைப் போதிக்க அனுப்பப்பட்டார்கள் என்பதை அல்லாஹ் தெளிவாகவே அல்குர்ஆனில் கூறுகிறான் என்பதை மேலே பார்த்தோம்.

தூதர்கள் அனுப்பப்பட்ட நோக்கம், அல்லாஹ்வை மட்டும் வணங்கி, அல்லாஹ் அல்லாதவைகளை வணங்குவதை விட்டும் தவிர்ந்து கொள்ளச் செய்வதற்காகவே. மாறாக, சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கன்றி வேறவருக்குமில்லை எனப் போதிப்பதற்காக அல்ல.
தவறான நோக்கம்:
لا قدرة لشيئ إلا لله
"அல்லாஹ்வுக்கே அன்றி வேறு எதற்கும் எவ்வித சக்தியுமில்லை"

"லாஇலாக இல்லல்லாஹ்'' எனும் இந்தக் கலிமாவுக்கு பொருள் என்று ஒன்று இருப்பது போல் நோக்கமும் உண்டு. இவைகளை விரிவாக மேலே பார்த்தோம்.

என்றாலும், ஒரு கூட்டத்தினர், ''அல்லாஹ்வுக்கே அன்றி வேறு எதற்கும் எவ்வித சக்தியுமில்லை" என்பதை ''லாஇலாஹ இல்லல்லாஹ்" எனும் கலிமாவின் நோக்கமாக கூறுகின்றனர். அதேவேளை இதற்கு பொருளொன்று உண்டு என்பதையும் மக்களுக்கு எடுத்துச்சொல்வதுமில்லை.

இவர்கள் கூறும் நோக்கம் என்பது தவறு என்பதை அறிந்துகொள்வோம்:-

1- அல்லாஹ், மனித இனத்தைப் படைத் நோக்கம்; அவ்வல்லாஹ்வை வழிப்படவேயாகும்.
2- அல்லாஹ் மட்டும் வணங்கப்பட வேன்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றவே தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்.
3- சக்தியுள்ளவன் அல்லாஹ்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம் ஏனைய வஸ்துக்களுக்கு சக்தியில்லை என்று சொல்ல முடியுமா? அல்லாஹ்வால் படைக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் அதற்கென்று (அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட) ஒரு சக்தியுண்டு. உதாரணமாக நெருப்பு சுடும், பனிக்கட்டி குளிரும். இதனை இயற்கை என்றும் சொல்லப்படும். சில வேளை இதற்கு மாற்றமாக இயங்கும் போது அது அல்லாஹ்வின் அற்புதம் எனப்படும்.
4- அல்லாஹ்வே சக்தியுள்ளவன் என்பதை எல்லோருமே ஏற்றுக்கொண்டுள்ளனர். அந்த சக்தியுள்ளவனை வழிப்பட்டு அல்லாஹ்வின் நோக்கத்தை நிறைவேற்றவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.

ஆக, ஷஹாதாக் கலிமாவின் பொருளும் நோக்கமும் ஒன்றே, அது தான் இறைவன் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கப்பட வேண்டும் என்பது ஆகும். இதனை விட்டும் மக்களை திசைதிருப்புவது வழிகேட்டுக்கு இட்டுச் செல்லும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
முற்றும்

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget