ரவ்ழதுல் இல்ம் - 2023 (பாடம் : அகீதா, நாள் : 03)

 



குப்ர் (இறை நிராகரிப்பு)

          இறை நிராகரிப்பு (குப்ர்) என்பது அல்லாஹ் ஈமான் கொள்ள வேண்டுமென பணித்துள்ள விடயங்களை மறுத்தலாகும். அவற்றில் ஈமானின் 6 விடயங்களை மறுப்பது முதன்மையானதாகும். சந்தேகம், பொறாமை, பெருமை, மனோ இச்சைக்குக் கட்டுப்படல் போன்றன ஈமான் கொள்வதற்குத் தடையாக இருக்கின்றன.

 

இறை நிராகரிப்பின் வகைகள்

இது இருவகைப்படும்.

01. குப்ர் அக்பர்  (பெரிய இறை நிராகரிப்பு)

02. குப்ர் அஸ்கர் (சிறிய இறை நிராகரிப்பு)

 

01. குப்ர் அக்பர்  (பெரிய இறை நிராகரிப்பு)

பெரிய இறை நிராகரிப்பு நிகழ்வதற்கான சில சந்தர்ப்பங்கள்

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் ஏசுதல்.

நம்பிக்கை, சொல், செயல், சந்தேகம் போன்றவற்றின் மூலம் இறைநிராகரிப்பில் ஈடுபடல்.

நபிமார்கள் மீது பொய்களை இட்டுக்கட்டுதல், தனக்கு நபித்துவம் கிடைக்கப்பெற்றதாக வாதிடுதல், அல்லது நபித்துவத்தை வாதாடும் ஒருவரை உண்மைப்படுத்தல், அவருக்கு ஆதரவாக இருத்தல்.

அல்லாஹ்வையும், அவனது அத்தாட்சிகள், வசனங்கள், தூதுவர்கள் என அனைத்தையும் பரிகசித்தல்.

ஈமான் கொள்ள வேண்டிய ஆறு அம்சங்கள் மற்றும் ஜம்பெரும் கடமைகள் போன்றவற்றில் ஒன்றையோ, அல்லது அனைத்தையும் மறுத்தல்.

இஸ்லாம் தடுத்துள்ள விபச்சாரம், மது, வட்டி போன்றவற்றை தனக்கு ஆகுமானது எனக் கருதி, அவற்றை நடைமுறைப்படுத்தல்.

 

குப்ர் அக்பர் (பெரிய இறை நிராகரிப்பு) பற்றி இஸ்லாமிய நிலைப்பாடு

1. இதனைச் செய்பவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார்.

2. இவரது ஈமான் செல்லுபடியற்றதாகி விடும்.

3. யாருடைய பரிந்துரையும் இவருக்குப் பலிக்காது.

4. நரகில் நிரந்தரமாகத் தங்கி விடுவார்.

 

 

 

 

02. குப்ர் அஸ்கர் (சிறிய இறை நிராகரிப்பு)

          இது அல்குர்ஆன், ஸுன்னாவில் 'குப்ர்' என்று கூறப்பட்டு பெரிய குப்ரின் நிலையை அடையாத பாவங்களைக் குறிக்கும். இது செயல் சார்ந்த இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றாத செயற்பாடுகள். மறுமையில் இதனைப் புரிபவருக்கு பரிந்துரைகள் இருப்பின் அவற்றை பெற முடியும். இதற்கு உதாரணமாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

 

அல்லாஹ்வின் அருட்கொடைகளை மறுத்தல்.

கணவனையும், அவர் செய்யும் நற்கருமங்களையும் மறுத்தல்.

ஓர் முஸ்லிமைக் கொலை செய்தல்.

பரம்பரையைக் குறைகூறல், மரணித்தவருக்காக கன்னத்தில் அடித்து, ஆடையை கிழித்து ஒப்பாரி வைத்தல்.

 

சிறிய இறை நிராகரிப்பு பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு

          இது இஸ்லாமிய நம்பிக்கைசார் அம்சங்களை முறித்துவிடாமல் அதனை பலவீனப்படுத்துகிற, ஒருவரை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றாத, செயல் ரீதியான இறை நிராகரிப்பாகும். இதனைப் புரிபவரது இஸ்லாமிய பண்புகள் அவரை விட்டும் அகன்றுவிடும். பாவமன்னிப்பு கேட்காத வரை அவர் அல்லாஹ்வின் கோபத்தை அடையும் பாரிய அபாயத்தில் இருப்பார்.

 

பெரிய இறை நிராகரிப்பிற்கும் சிறிய இறை நிராகரிப்பிற்கும்; இடையில் உள்ள வேறுபாடுகள்

                                     

பெரிய இறை நிராகரிப்பு

சிறிய இறை நிராகரிப்பு உயிர் உடமைக்கு உத்தரவாத உண்டு

இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார்

இஸ்லாத்தை விட்டும் வெளியேற மாட்டார்

நற்செயல் அனைத்தும் அழிந்துவிடும்

நற்செயல் அழிந்து விடாது ஆனால் அவரது குற்றத்திற்கு அமைய நட்செயல்களில் மாற்றம் நிகழும்

நரகில் நிரந்தரமாக தங்கி விடுவார்

நரகில் நிரந்தரமாக தங்க மாட்டார்

முஸ்லிம்கள் அவருடன் நேசம் வைக்க கூடாது

நல்ல விடயங்களில் சேர்ந்தும் தீய விடயங்களில் விலகியும் வாழ வேண்டும்

உயிர் உடமைக்கு உத்தரவாதம் இல்லை

உயிர் உடமைக்கு உத்தரவாத உண்டு

 

 

 

நிபாக் (நயவஞ்சகம்)

          நயவஞ்சகம் என்பது இறைநிராகரிப்பை மறைத்து, இஸ்லாத்தை வெளிப்படுத்தல் எனும் பொருளை குறித்து நிற்கின்றது.

 

நயவஞ்சகத்தின் வகைகள்

          இது இணைவைப்பு, இறைநிராகரிப்பு போன்று பெரியது, சிறியது எனும் படித்தரங்களைக் கொண்டுள்ளது.

01. நிபாக் அக்பர்  (பெரிய நயவஞ்சகம்)

02. நிபாக் அஸ்கர் (சிறிய நயவஞ்சகம்)

 

01. நிபாக் அக்பர்  (பெரிய நயவஞ்சகம்)

          இது மார்க்கத்தின் நம்பிக்கை சார்ந்த அம்சங்களில் ஏற்படும் நயவஞ்சகமாகும். இது இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி, நரகின் அடித்தளத்தில் நிரந்தரமாகத் தங்கவைக்கக் கூடியது. உள்ளத்தில் இறைநிராகரிப்பை மறைத்து, வெளிரங்கத்தில் சொல், செயற்களில் இஸ்லாத்தை வெளிக்காட்டிக் கொள்வதுதான் பெரிய நயவஞ்சகத்தின் யதார்த்த நிலையாகும்.

 

          இறை நிராகரிப்பாளர்களில் மிகவும் தீயவர்கள் நயவஞ்சகர்களே. ஏனெனில் அவர்கள் இறைநிராகரிப்புடன் சேர்த்து மேலதிகமாக பொய், ஏமாற்று, முஸ்லிம்களுக்குத் துரோகம் இழைத்தல் போன்றவற்றையும் செய்கின்றனர். அதனால்தான் முஃமின்கள் இவர்களது வலையில் வீழ்ந்திடாமல் இருக்க, அல்லாஹ் தனது திருமறையில் அனைத்து வித தீய பண்புகளுக்கும் சொந்தக்காரர்கள் என இவர்களைப் பற்றி விரிவாக எச்சரித்துள்ளான். (பார்க்க : அல்குர்ஆன் 02 : 08 - 20) அவர்களுடைய பண்புகளில் சில பின்வருமாறு :

 

நபி ள அவர்களையும், அவர்கள் கொண்டுவந்தவற்றையும் பொய்ப்பித்தல்.

நபி ள அவர்களுடனும், அவர்கள் கொண்டுவந்தவற்றின் மீதும் கோபம் கொள்ளல்.

இஸ்லாம் மார்க்கம் வீழ்வதைக் கண்டு சந்தோசம் கொள்ளல், அல்லது அது வெற்றியடைவதைக் கண்டு கோபம் கொள்ளல்.

நபி ள அவர்களை நோவினைப்படுத்தல், அல்லது அவர்களைக் குறைகூறல்.

முஸ்லிம்களுக்கெதிராக இறை நிராகரிப்பாளர்களுக்கு உதவியாய் இருத்தல்.

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விசுவாசம் கொண்டு, அவர்கள் கூறியபடி வணக்க வழிபாடுகளை செய்யும் இறைவிசுவாசிகளை கேலிசெய்தல்.

 

 

 

 

பெரிய நயவஞ்சகம் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு

இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார்.

நிரந்தரமாக நரகில் தங்கிவிடுவதுடன், அதன் அடித்தளத்தில் இருப்பார்.

வெளித்தோற்றத்தில் முஸ்லிம்கள் போல் நடித்து, அவர்களுடன் ஒன்றாகக் கலந்திருப்பதால் ஏனைய பெரிய இணைவைப்பு, பெரிய இறை நிராகரிப்பு செய்தவர்களுக்கு இவ்வுலகில் நடவடிக்கை எடுப்பது போல் இவர்களுக்கு எடுக்க முடியாது.

 

02. நிபாக் அஸ்கர் (சிறிய நயவஞ்சகம்)

சிறிய நயவஞ்சகத்தின் சில தோற்றப்பாடுகள், பண்புகள்

பொய் பேசுதல்.

வாக்களித்தால் மாறு செய்தல்.

நம்பிக்கைத் துரோகம் செய்தல்.

விவாதத்தில் நேர்மை தவறிப் பேசுதல்.

உடன்படிக்கைகளை முறித்தல்.

உள்ளத்தில் வெறுப்பை வைத்துக்கொண்டு நல்லது செய்வது போல் வெளியில் காட்டுதல்.

 

நபி ள அவர்கள் கூறினார்கள் :  'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் முனாபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்;, பேசினால் பொய்யே பேசுவான், ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான், விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' (ஆதாரம் - புஹாரி - 34, முஸ்லிம் - 58)

 

          அல்குர்ஆன், ஸூன்னாவில் நயவஞ்சகர்களின் பண்புகள் அதிகமாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றில்   ஒரு சில பண்புகள் மாத்திரமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

 

சிறிய நயவஞ்சம் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு

          இது இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிடாத, செயல்கள் சார்ந்தவற்றில் ஏற்படும் நயவஞ்சகமாகும். இவற்றைப் புரிவதன் மூலம் ஒருவரது அன்றாட கடமைகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டு, நயவஞ்சகத் தன்மையோடு உலாவர வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்படுவார். ஈமானின் ஒரு பகுதி உள்ளத்தில் எப்போதும் இவரிடம் இருப்பதால் இவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறமாட்டார். அவரிடமிருந்து ஈமானும், முஸ்லிம் என்ற பெயரும் முழுவதுமாக பறிபோய்விடாது.

 

 

 

 

பெரிய நயவஞ்சகத்திற்கும் சிறிய நய வஞ்சகத்திற்கும் இடையிலான வேறுபாடுகள்

 

பெரிய நயவஞ்சகம்

சிறிய நயவஞ்சகம்

இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவார்

இஸ்லாத்தை விட்டு வெளியேற மாட்டார்

நம்பிக்கை சார்ந்த விடயங்களில் உள்ளும் புறமும் வேறுபடுதல்

சொல் செயல் சார்ந்த விடயங்களில் உள்ளும் புறமும் வேறுபடுதல்

முஃமினிடம் ஒரு போதும் இருக்க மாட்டாது

சில வேலை முஃமீன்களிடமும் வெளிப்படும்

 

 

மாதிரி வினாக்கள்

1-இறை மறுப்புடன் சேர்த்து பொய் ஏமாற்று முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்தல் போன்றவற்றை செய்பவர்கள் நயவஞ்சகர்கள் என அழைக்கப்படுவார். இக்கூற்று?

 1-சரி

2-பிழை

 

2-உடன்படிக்கைளை (வாக்குறுதி) ஒருவர் முறிப்பதன் மூலம் நம்பிக்கை சார்ந்த விடயங்களில் உள்ளும் புறமும் வேறுபட்டுக் காணப்படுகிறது. இக்கூற்று?

1-சரி

2-பிழை

 

 

3-பெரிய நிபாக்கோடு தொடரபுடையோர் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு.?

1-நரகில் சில காலம் இருப்பார்.

2-நாடு கடத்தப்படுவார்

 

3-இஸ்லாத்தை விட்டு முழுமையாக வெளியேறமாட்டார்

 

4 நரகில் நிரந்தரமாக இருப்பார்

 

5- கருத்து முரன்பாடு உள்ளது.

              6- 3 ,4 சரியான விடைகள்


கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget