October 2018

தொகுப்பு : Muhammad Abu Khalidh

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"#சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக் கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்று தான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்று தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்று தான் யுக முடிவு நிகழும்".
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள். நூல் : முஸ்லிம் 1548

வெள்ளிக்கிழமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக ஜும்ஆ நடக்கும் நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது என்ற தடையை அல்லாஹ் தஆலா பின்வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் எச்சரிக்கிறான்.

"இறை நம்பிக்கை கொண்டவர்களே! வெள்ளிக்கிழமையன்று தொழுகைக்காக அழைக்கப்படும்போது அல்லாஹ்வை நினைவு கூர்வதன் பக்கம் விரைந்து செல்லுங்கள். கொடுக்கல் வாங்கலை விட்டுவிடுங்கள். இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்! " 
(அல்-குரான் 62:09)

வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) நேர காலத்துடன் செல்வதன் சிறப்பு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடைபெறும்) பள்ளி வாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் நின்று கொண்டு, முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால், வானவர்கள் அந்த (பெயர் பதிவு) ஏடுகளைச் சுருட்டிவைத்துவிட்டு வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகின்றனர். (ஜுமுஆவுக்காக) நேரத்தோடு வருபவரது நிலையானது, ஓர் #ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு #மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஓர் #ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஒரு #கோழியையும், அதற்கடுத்து வருபவர் ஒரு #முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றவர்கள் ஆவர்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 1554

வெள்ளிக்கிழமை உரையை மௌனமாகச் செவியேற்பவரின் சிறப்பு.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(வெள்ளிக்கிழமை) யார் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதை செம்மையாகவும் செய்து ஜுமுஆவுக்கு வந்து (இமாமின் உரையை) செவிதாழ்த்தி மௌனமாகக் கேட்கிறாரோ அவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரைக்கும் மேற்கொண்டு மூன்று நாட்களுக்கும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (யாவும்) #மன்னிக்கப்படுகின்றன. யார் (இமாம் உரை நிகழ்த்தும்போது தரையில் கிடக்கும்) சிறு கற்களைத் தொட்டு (விளை யாடி)க் கொண்டிருக்கிறாரோ அவர் வீணான செயலில் ஈடுபட்டுவிட்டார்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 1557

இமாம் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கையில் "#தஹிய்யத்துல்_மஸ்ஜித்" தொழுகை தொழுவது :

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இன்ன மனிதரே, தொழுதுவிட்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை" என்றார். "எழுந்து, தொழுவீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. 
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),  நூல் : முஸ்லிம் 1584

துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்

"நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில் "அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.

- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அது மிகக் குறைந்த நேரம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது". 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 1543

ஜுமுஆத் தொழுகையைக் கைவிடுவதற்கு வந்துள்ள கண்டனம். 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) மற்றும் அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் படிகள் மீது நின்றபடி "மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும்! அல்லது அவர்களின் இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்; பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்" என்று கூறியதை நாங்கள் கேட்டோம். நூல் : முஸ்லிம் 1571

சமூக ஊடகங்கள் மூலம் இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்துவதற்கான ஓர் முயற்சி…

கேள்வி வாரம் 14 : (இவ்வாரம் இரு கேள்விகள்)

#01-யூதர்களால் கொலை செய்யப்பட்ட நபிமார்களில் ஒருவரின் பெயரை கூறுக.

#02-மதீனாவில் வசித்த யூதக் கோத்திரங்களில்லிருந்து ஒரு யூதக் கோத்திரத்தின் பெயரை குறிப்பிடுக.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் போம் (google form) ஊடாக சென்று விடையளிக்கவும் 
விடைக்கான இணைப்புகள் : 
இணைப்பு 01 : யூதர்களின் பண்புகள் பகுதி 01
http://www.alimamslsf.com/2018/10/01-by-assheikh-m-ahmedh-abbasi-riyadhi.html  By: Assheikh M Ahmedh (Abbasi, Riyadhi) MA Reading

இணைப்பு 02 :யூதர்களின் பண்புகள் பகுதி 02
http://www.alimamslsf.com/2018/10/02-by-assheikh-m-ahmedh-abbasi-riyadhi.html  By: Assheikh M Ahmedh (Abbasi, Riyadhi) MA Reading

விடை கீழ் வரும் இணைப்பின் ஊடாக சென்று அனுப்பவும் :
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe66UTLrdj_1Wsfm3kNWpV48dAlp_EZGLr9zJjYFrkdHkSr2A/viewform?usp=sf_link

போட்டியின் விபரம் மற்றும் நிபந்னைகள் :

01- இப்போட்டியானது www.alimamslsf.com என்ற இணையத்தளத்தில் குறிப்பிட்ட வாரத்தில் பதியப்படும் வீடியோ, ஆடியோ பயான்கள், கட்டுரைகள், போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

02- குறித்த கேள்விக்கான விடையினை மேழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் போம் (google form) இல் உங்கள் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், கேள்விற்கான விடை என்பவற்றை உரிய பெட்டியினுள் நிரப்பி (Submit) என்ற பட்டினை அழுத்தினால் மாத்திரம் போதுமானது.

03- ஒருவர் கேள்விக்குரிய விடையை ஒரு முறை மாத்திரமே அளிக்க வேண்டும்.

04- பரிசில்களாக வெற்றியீட்டும் இருவருக்கு தலா 200 ரூபாய் வீதம் 400 ரூபாய் ரீலோட் வழங்கப்படும்.

05- இப் போட்டியில் கலந்து வெற்றி பெறுவோறுக்கான பரிசு ரீலோட் இலங்கை ரூபாய் படியே அனுப்பப்படும். ஆதலால் வெளிநாடுகளில் இருந்து கலந்து கொள்பவர்கள் பரிசு ரீலோட்டை பெறும் இடத்து அவர் இலங்கை இலக்கம் ஒன்றையே குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

06- போட்டியில் பலர் வெற்றி பெறுமிடத்து, குலுக்கல் முறையில் 02 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

குர்ஆன், சுன்னாவை மக்கள் மயப்படுத்தும் இம் முயற்சியில் நீங்களும் எம்மோடு கை கோருங்கள். உங்களது குடும்பம், நண்பர்கள், என அனைவருக்கும் வாட்ஸ்அப் மூலம் எத்தி வையுங்கள். உங்கள் முகநூற் பக்கங்களில் எமது இம் முயற்சியை மக்கள் மயப்படுத்துங்கள்.

- Muhammad Abu Khalidh -
2018/10/20 திகதி சனிக்கிழமை சவூதிக்கான இலங்கைத் தூதுவர் கௌரவ அஸ்மி தாஸிம் அவர்களுக்கும், அல்-இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர்களுக்குமிடையிலான ஓர் சினேக பூர்வ சந்திப்பு இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ். 

இச்சந்திப்பில் அல் - இமாம் பல்கழலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்திற்கும் சவூதிற்கான இலங்கை தூதரகத்திற்கும் இடையிலான தொடர்புகள் பற்றி அலசியதுடன் எதிர் காலத்தில் எவ்வாறு தம்மாலான சமூக சேவைகளை மேற்கொள்ளலாம் எனவும் கலந்துரையாடப்பட்டு சில முடிவுகளும் எடுக்கப்பட்டன.
தொடர்ந்து மூன்று மணித்தியால கலந்துரையாடலின் பின்னர் தூதுவர் கௌரவ அஸ்மி தாஸிம் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பகல் உணவுடன் இச்சந்திப்பு இனிதே முடிவுற்றது.

இச்சந்திப்பை ஏற்பாடு செய்த சவூதிக்கான இலங்கைத் தூதுவர் கௌரவ அஸ்மி தாஸிம் அவர்களுக்கும் மற்றும் அவர்களுடன் சேர்ந்து அல் இமாம் -பல்கலைக்கழகத்தில் கலைமானி பட்டப்படிப்பை பூர்த்தி செய்து தற்போது சவூதிக்கான இலங்கைத் தூதுவரலாயத்தில் பணி புரியும் கௌரவ மௌலவி ஷாஹுல் ஹமீத் (கபூரி, ரியாதி) அவர்களுக்கும் அல்-இமாம் பல்கழலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.



அல்-இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் சார்பில்; ஒன்றியத்தின் ஊடகப்பிரிவினரால் நடாத்தப்படும் வாராந்த இஸ்லாமிய வினா விடைப் போட்டியின் 13ம் வார வெற்றியார்கள் மற்றும் பாராட்டு பெறுவோர் :
குழுக்கள் முறையில் தெரிவு செய்யப்பட்ட இரு வெற்றியாளர்களும் :

    #01 MSF SHIFANA || ILLAWATHURA, GAMPOLA, SRILANKA.

#02 RIZVIYA JABEER || OYAPAHALA, MATALE, SRILANKA.

இரு அதிஷ்டசாலிகளுக்குமான 200/= ரூபா பெறுமதியான ரீலோட் பரிசு விரைவில் அனுப்பிவைக்கப்படும் இன்ஷா அல்லாஹ் ...

alimamslsf's weekly quiz போட்டியில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் ALIMAMSLSF இன் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மீண்டும் அடுத்த வார வினாவுடன் சந்திப்போம். இன்ஷா அல்லாஹ்...

கலாநிதி அமீன் அப்துல்லாஹ் அஷ்ஷகாவீ
தமிழில் : எம். அஹ்மத் (அப்பாஸி)
07. கோழைத்தனம் : யூதர்கள் முஸ்லிம்களை நேரடியாகக் களத்தில் சந்திப்பதில் கடும் கோழைகளாகவே இருப்பர். "அரண் அமைக்கப்பட்ட ஊர்களிலிருந்தோ, சுவர்களுக்குப் பின்னாலிருந்தோ தவிர அவர்கள் ஒன்று சேர்ந்து உங்களிடம் போரிடமாட்டார்கள். அவர்களுக்கிடையே பகைமை கடுமையானது. அவர்கள் ஒன்று திரண்டுள்ளதாக நீர் கருதுவீர். அவர்களின் உள்ளங்களோ சிதறிக் கிடக்கின்றன. அவர்கள் விளங்காத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்" (ஹஷ்ர் : 14) என்று இறைவன் கூறுகின்றான். மற்றுமொரு வசனத்தில் "தொந்தரவு தருவதைத் தவிர அவர்கள் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யவே முடியாது. உங்களுடன் போருக்கு வந்தால் புறமுதுகு காட்டி ஓடுவார்கள். பின்னர் உதவி செய்யப்படமாட்டார்கள்" (ஆல இம்ரான் : 111) என்று கூறுகின்றான். இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : "இவ்வாறே நிகழ்ந்தது, அவர்களை அல்லாஹ் கைபர் போரின் போது இழிவடையச் செய்தான், அதற்கு முன்னர் மதீனாவில் வசித்த பனூ கைனுகாஃ, பனூ நழீர், பனூ குரைழா போன்ற யூதக் கோத்திரத்தினரை அல்லாஹ் இழிவடையச் செய்தான்" (தப்ஸீர் இப்னு கஸீர் : 3/ 159). சமகாலத்தில் இவர்கள் கோழைகள் என்பதற்கான மிகப்பெரிய சான்று என்னவெனில், வெறும் கற்களுடன் பலஸ்தீனச் சிறுவன் ஆயுதம் தரித்த யூத இராணுவனை விரட்டிச் செல்லும் போது, தனது உயிருக்குப் பயந்து அப்படைவீரன் ஓட்டம் பிடிப்பதை கண்கூடாகக் காண்கிறோம். 

08. அசிங்கங்களை அரங்கேற்றுவார்கள் : பூமியில் போதைப்பொருள், விபச்சாரம் மற்றும் பல ஒழுக்க சீர்கேடுகளைப் பரப்புவதில் யூதர்களின் பங்களிப்பு அளப்பரியது. அவர்கள் தான் அசிங்கத்தின் முகவர்கள், சீர்கேடுகளின் தரகர்கள். ஒழுக்கக் கேடான படங்களைத் திரையிடும் பல சேனல்களை இவர்கள்தான் ஆக்கிரமித்துள்ளார்கள். அத்துடன் இறைமறுப்பையும், நாத்திகத்தையும் பரப்பி, முஸ்லிம் களின் அடிப்படைக் கொள்கைகளில் சந்தேகங்களைத் தோற்றிவித்து, தங்களால் முடிந்த அனைத்து வழிகளையும் பயன் படுத்தி பூமியில் குழப்பங்களை விளைவிக்கவே முற்படுகின்றனர். "அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர், குழப்பம் விளைவிப் போரை அல்லாஹ் விரும்புவதில்லை" (மாஇதா : 64) என்று அல்லாஹ் யதார்த்தமாகவே கூறியுள்ளான்.

09. உயிர் வாழப் பேராசை பிடித்தவர்கள் : அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : "அல்லாஹ்விடம் உள்ள மறுமை வாழ்க்கை ஏனைய மக்களுக்கு இல்லாமல் உங்களுக்கு மட்டும் சொந்தமானது என்பதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் மரணிப்பதற்கு ஆசைப்படுங்கள்!'' என்று கூறுவீராக!. அவர்கள் செய்த வினை காரணமாக ஒருபோதும் அதற்கு ஆசைப்பட மாட்டார்கள். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன். மற்ற மனிதர்களை விட, (குறிப்பாக) இணை கற்பித்தோரை விட வாழ்வதற்கு அதிகமாக ஆசைப்படுவோராக அவர்களைக் காண்பீர்! அவர்களில் ஒருவர் ஆயிரம் வருடங்கள் வாழ்நாளாக அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அவ்வாறு வாழ்நாள் அளிக்கப்படுவது வேதனையிலி ருந்து அவரைத் தடுப்பதாக இல்லை. அவர்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்". (பகரா : 94 - 96).

இவ்வசனத்தின் விளக்கம் என்னவெனில் : யூதர்களே! ஏனைய மனிதர்களை விடுத்து நீங்கள்தான் உண்மையிலே அல்லாஹ்வின் நேசர்களாக இருந்தால், அவனுடைய பிள்ளைகளாகவும், தோழர்களாகவும் இருந்தால், நீங்கள் மாத்திரம்தான் சுவனவாதிகள், ஏனையோர் நரகவாதிகள் என்றால் இவ்விடயங்களில் அழிவுச் சத்தியம் செய்ய வாருங்கள், உங்களில் பொய்யர்களுக்கு எதிராக பிரார்த்தியுங்கள், அழிவுச் சத்தியம் பொய்யர்களை கூண்டோடு அழித்து விடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவது முதல், தமது பிள்ளைகளை அறிந்து வைத்திருப்பது போன்று அறிந்து வைத்திருந்த நபி (ஸல்) அவர்களின் பண்புகள் உட்பட சத்தியத்தை மறைப்பது வரை அனைத்திலும் இவர்கள்தான் பொய்யர்கள் என்பதை உறுதியதாக நம்பியிருந்ததால் அவர்களே அழிவுச் சத்தியத்திலிருந்து பின்வாங்கி விட்டார்கள். இந்த அழிவுச் சத்தியத்தை ஆசையென மேற்கண்ட வசனத்தில் வர்ணித்திருப்பதற்கு காரணம், சத்தியத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தம்முடன் விவாதிக்கும் எதிரியை அல்லாஹ் அழிக்க வேண்டுமென்றே ஆசை வைக்கின்றார்கள். மரணத்திற்குப் பின் தமக்கு என்ன அழிவுகள் உள்ளன என்பதை யூதர்கள் அறிந்து வைத்திருப்பதால்தான் அவர்கள் மரணத்தை வெறுத்து இவ்வுலகில் நீடூழி காலம் வாழப் பேராசை கொண்டார்கள். அதனை முறியடிக்கும் விதத்தில்தான் அதே மரணத்தை வைத்து அழிவுச் சத்தியம் செய்யும்படி பணித்துள்ளான். 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : "யூதர்கள் மரணத்தை ஆசை வைத்தால் உமிழ்நீர் தொண்டையில் சிக்கியதைப் போன்று தத்தளித்திருப்பார்கள்". மேலும் கூறினார்கள் : "அவர்கள் மரணத்தை ஆசை வைத்திருந்தால் மரணித்திருப்பார்கள்". (தப்ஸீர் இப்னு கஸீர் : 1/ 494 இதன் அறிவிப்பாளர் வரிசை வலுவானதெனக் கூறியுள்ளார்கள்.)

10. கஞ்சத்தனம் : யூதர்கள் அல்லாஹ்வைக் கஞ்சனென வர்ணித்தார்கள். "அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன்மடங்காக (இறைவன்) பெருக்குவான்" (பகரா : 245) என்ற வசனம் இறங்கிய போது "முஹம்மதே! உமது இறைவன் வறியவனாகி விட்டான் போலும், தனது அடியார்களிடம் கடன் கேட்கிறான்?" என்று கிண்டலடித்தார்கள். அல்லாஹ் அவர்களைக் கண்டித்து அதே கஞ்சத்தனத்தின் மூலம் அவர்களை சோதித்தான். "அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடிய வாறு வழங்குவான்" (மாஇதா : 64) என்று கூறுகின்றான். இதனால் இன்று உலகில் அதிக கஞ்சத்தனமுள்ளவர்களாகவும், மிகக் குறைவாக செலவு செய்யக்கூடியவர்களாகவும் இந்த யூதர்களே காணப்படுகின்றனர். 

11. இழிவானவர்கள் : அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர அவர்கள் எங்கிருந்தபோதும் அவர்களுக்கு இழிவு விதிக்கப்பட்டு விட்டது" (ஆல இம்ரான் : 112). இமாம் இப்னு ஜரீர் அத்தபரீ (ரஹ்) கூறுகின்றார்கள் : "முஹம்மத் (ஸல்) அவர்களைப் பொய்ப்பித்த யூதர்கள் பூமியில் எப்பகுதியில் இருந்தாலும், முஸ்லிம் பிரதேசத் திலோ, இணைவைப்பாளர்களின் பிரதேசத்திலோ எங்கு வசித்தாலும் அவர்களுக்கு இழிவு விதியாக்கப்பட்டுள்ளது. "அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர". இங்கு மனிதர்களின் உடன்படிக்கை என்பது இஸ்லாமிய நிலப்பரப்பில் அவர்கள் குடியேற முன் விசுவாசிகளிடமிருந்து தமது உயிர், குடும்பம், உடமைகளுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் எடுத்துக் கொள்வதற்கான உடன்படிக்கையாகும்" (தப்ஸீர் தபரீ : 3/ 394).

தற்போது இவர்கள் அமெரிக்க கிறிஸ்தவர்களின் பாதுகாப்பில் உள்ளனர். எவ்வளவு தான் அவர்கள் தம்மிடம் அனு ஆயுதங்களை வைத்திருந்தாலும், முன்னேற்றகரமான போர் விமானங்கள், யுத்த தாங்கிகளை வைத்திருந்தாலும், படைப்பலத்தில் முஸ்லிம்களை விட மேலோங்கியிருந்தாலும் இன்னொரு சமூகத்தின் தயவில் காலம் கடத்தும் இழிவான கோழைகளே யூதர்கள். "அல்லாஹ் தன் காரியத்தில் வெல்பவன்; எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்" (யூஸுப் : 21). 

புகழனைத்தும் அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே. ஸலவாத்தும், ஸலாமும் எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்களுக்கும் உண்டாகட்டுமாக!.

முற்றும்.

கலாநிதி அமீன் அப்துல்லாஹ் அஷ்ஷகாவீ
தமிழில் : எம். அஹ்மத் (அப்பாஸி)

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள் அனைவருக்கும் உண்டாவதாக!. இணையில்லாத் தனித்தவனாகிய அல்லாஹ் மாத்திரமே உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும், தோழருமெனவும் நான் சாட்சி பகர்கின்றேன்.

அல்லாஹ் கூறுகின்றான் : "விசுவாசங் கொண்டோருக்கு மிகவும் பகைவர்களாக மனிதர்களில் யூதர்களையும், இணைவைப்பாளர் களையும் கண்டுகொள்வீர்" (மாஇதா : 82). மனிதர்களிலே முஸ்லிம்களுக்குப் பரம எதிரிகளாகத் திகழ்வது யூதர்கள் தான் என இறைவன் இவ்வசனத்தில் தெளிவுபடுத்தியுள்ளான். மேலும், முஸ்லிம்களுக்கெதிராகப் பல பிரச்சினைகளையும் யுத்தங்களையும் மூட்டி விடுவது இவர்களது பணியென மற்றுமோர் வசனத்தில் கூறுகின்றான் : "மறுமை வரை அவர்களுக்கு மத்தியில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி விட்டோம். அவர்கள் போர் எனும் தீயை மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதனை அணைத்து விடுகின்றான், அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர், குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் விரும்புவதில்லை" (மாஇதா : 64). 

யூதர்களின் சூழ்ச்சிகளிலிருந்து யாருமே தப்பவில்லை. அல்லாஹ்வின் மீது அபாண்டம் சுமத்துமளவு துணிந்து விட்டார்கள். அவனுக்குப் பிள்ளையிருப்பதாக இட்டுக்கட்டினார்கள் : "உஸைர் அல்லாஹ்வின் மகன்'' என்று யூதர்கள் கூறுகின்றனர். "மஸீஹ் அல்லாஹ்வின் மகன்'' என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏகஇறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? (தௌபா : 30).

"அல்லாஹ் பரம ஏழை, நாங்கள் தான் செல்வந்தர்கள்" என்ற கூற்றும் யூதர்கள் அல்லாஹ் மீது சுமத்திய மற்றுமோர் அபாண்டமாகும். "அல்லாஹ் தேவையுள்ள பரம ஏழை, நாங்கள் தான் தேவைகளற்ற செல்வந்தர்கள்" என்று கூறுவோரின் கூற்றை அல்லாஹ் செவியேற்று விட்டான். அவர்கள் கூறியதையும், நபிமார்களை உரிமையின்றிக் கொன்றதையும் நாம் எழுதி வைப்போம். "சுட்டெரிக்கும் வேதனையை சுவையுங்கள் என்றும் கூறுவோம்". (ஆல இம்ரான் : 181).

இது போன்ற குப்ரிய்யத்தான, படுமோசமான வார்த்தைகளாலும், அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல், அவனது மார்க்கத்திற்குத் தடையாக இருத்தல் போன்ற பல காரணங்களாலும் யூதர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கும், சாபத்திற்கும் உள்ளானார்கள். அவர்களைத் தண்டிப்பதற்காக அவர்களில் சிலரையே குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றினான். அதுபற்றி பின் வரும் இரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன : "அல்லாஹ்விடம் இதைவிட கெட்ட கூலி பெறுபவனைப் பற்றி உங்களுக்கு நான் கூறட்டுமா?'' என்று கேட்பீராக! அல்லாஹ் எவர்களைச் சபித்து, கோபம் கொண்டானோ, எவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றினானோ அவர்களே (தீய இடத்திற் குரியவர்கள்). (மாஇதா : 60), "மறுமை வரை அவர்களுக்குக் கொடிய வேதனை அளிப்போரையே அவர்களுக்கு எதிராக நியமிப்பதாக உமது இறைவன் பிரகடனம் செய்ததை நினைவூட்டுவீராக!" (அஃராப் : 167).

யூதர்கள் பல தீய பண்புகளால் பிரசித்தி பெற்றவர்கள். அவற்றை அல்லாஹ் தனது வேதத்தில் கூறியுள்ளான். மறுமை வரை இப்பண்புகள் அவர்களிடம் வேரூன்றியே இருக்கும், முஸ்லிம்களாகிய நாம் தான் அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவற்றில் சில முக்கிய பண்புகளை இங்கு பார்ப்போம் :

01.துரோகம், காட்டிக் கொடுப்பு, உடன்படிக்கை, வாக்குறுதிகளை முறித்தல் : "அவர்கள் தமது ஒப்பந்தத்தை முறித்ததால் அவர்களைச் சபித்தோம், அவர்களின் உள்ளங்களை இறுகச் செய்தோம். வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் அவர்கள் மாற்றுகின்றனர்" (மாஇதா : 13) என்று இறைவன் கூறுகின்றான். வரலாறும் இதற்கு சான்று பகர்கின்றது. நபி (ஸல்) அவர்களுடன் பல முறை ஒப்பந்தங்களை முறித்துள்ளனர், கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக ஆட்டிறைச்சியில் விஷத்தைக் கலந்து, அன்பளிப்பாக வழங்கினார்கள். நபியவர்களும் அதனை உண்டு, பல வருடங்கள் இதனால் சிரமப்பட்டார்கள். (புஹாரி 5777). 

பலஸ்தீன் நாட்டில் எமது உடன்பிறப்புக்களுக்கு நடக்கும் அநீதிகளே அவர்களுடைய துரோகத்திற்கு மிகப்பெரும் சான்றாகும். அவர்களுக்கு ஒப்பந்தம், உடன்படிக்கை பயனளிக்காது. கடுமையும், பலமும் தான் அவர்களுக்குப் பொருத்தமான தீர்வு. அதனால்தான் யூதர்கள் அகழ்ப்போரின் போது ஒப்பந்தமீறலில் ஈடுபட்ட போது நபி (ஸல்) அவர்கள் இவர்களை முற்றுகையிட்டு, ஸஃத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் தீர்வுக்கு இணங்கினார்கள். ஸஃத் (ரலி) அவர்கள் : "இவர்களில் போராளிகள் கொல்லப்பட வேண்டும், பெண்கள் சிறை பிடிக்கப்பட வேண்டும், உடமைகள் பங்கு வைக்கப்படல் வேண்டும்" என தீர்ப்பளித்தார்கள். அப்போது நபியவர்கள் "இவர்கள் விடயத்தில் அல்லாஹ்வின் தீர்ப்பைத்தான் வழங்கியுள்ளீர்கள்" என்றார்கள். (புஹாரி 38, முஸ்லிம் 1768).

02.தமக்கு வழிகாட்ட வந்த நபிமார்களையே கொன்றவர்கள் : ஸகரிய்யா (அலை), யஹ்யா (அலை) மற்றும் பல நபிமார்களை இவர்கள் கொலை செய்துள்ளார்கள். "அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர அவர்கள் எங்கிருந்தபோதும் அவர்களுக்கு இழிவு விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். அவர்களுக்கு வறுமை விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் ஏற்க மறுத்ததும், நபிமார்களை அநியாயமாகக் கொலை செய்ததுமே இதற்குக் காரணம். மேலும் அவர்கள் பாவம் செய்ததும், வரம்பு மீறியதும் இதற்குக் காரணம்" (ஆல இம்ரான் : 112). மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "மறுமையில் கடுமையான வேதனைக் குள்ளாகுபவர் யாரெனில் நபியால் கொல்லப்பட்ட, அல்லது நபியை கொலை செய்த மனிதராகும்". (அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி), ஆதாரம் : அஹ்மத் 3868).

03.அல்லாஹ்வுக்கு மாறு செய்வதும், படைப்புக்களிடம் அத்துமீறுவதும், தமக்கு மத்தியில் தீமையைத் தடுகாமலிருப்பதும் யூதர்களுடைய தீய பண்புகளிலுள்ளதாகும். அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : "தாவூத், மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் வாயால் (ஏகஇறைவனை) மறுத்த இஸ்ராயீலின் மக்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் மாறு செய்ததும், வரம்பு மீறியோராக இருந்ததுமே இதற்குக் காரணம், அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர். அவர்கள் செய்தது மிகவும் கெட்டது. (மாஇதா : 78, 79). 

04.மனிதர்களின் பணத்தை சுரண்டுதல் : "அவர்களில் அதிகமானோர் பாவத்திற்கும், வரம்பு மீறலுக்கும், தடுக்கப்பட்டதை உண்பதற்கும் விரைந்து செல்வதை நீர் காண்பீர்! அவர்கள் செய்வது மிகவும் கெட்டது, அவர்களின் பாவமான கூற்றை விட்டும், தடுக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும், வணக்கசாலிகளும், மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செய்வது மிகவும் கெட்டது" என்று இறைவன் கூறுகின்றான். (மாஇதா : 62, 63). அதனால் தான் யூதர்கள் மாற்று சமூகங்களின் தலைவிதிகளை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வற்காக வங்கிகளையும், உலக பொருளாதாரத்தையும் ஆக்கிரமிக்க ஆர்வங்கொள்கின்றனர். 

05.சத்தியத்தை மறைத்தல் : அதாவது அல்லாஹ் மக்களுக்குத் தெளிவுபடுத்தும்படி அவர்களுக்கு ஏவிய மார்க்க அறிவை தமக்குப் பாதகமாக இருந்தால் மறைத்து விடுவார்கள். "வேதம் கொடுக்கப் பட்டோரிடம் "அதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதிமொழி எடுத்தபோது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். (அதற்குப் பகரமாக) அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது" (ஆல இம்ரான் : 187). அழிந்து போகும் இவ்வுலக அற்ப நோக்கங்களுக்காக சத்தியத்தை அவர்கள் மறைப்பதாக அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகின்றான். 

06.பொறாமை : அல்லாஹ் கூறுகிறான் : "நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை)மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில் பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம்" (பகரா : 109).

மிகுதி அடுத்த பகுதியில் எதிர் பாருங்கள் இன்ஷா அல்லாஹ் ...!

சமூக ஊடகங்கள் மூலம் இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்துவதற்கான ஓர் முயற்சி…

கேள்வி வாரம் 13 : ஒருவர் ஒரு நாளில் எத்துணை ரகாஅத் ஸுன்னத் தொழுகை தொழுதால் சுவனத்தில் அவருக்கு வீடு காட்டப்படும் ?
விடைக்கான இணைப்புகள் : 

இணைப்பு 01 : உபரியான வணக்கங்களின் சிறப்புக்கள் - பகுதி 01 | A.M. Ilham (Gafoori, Riyadhi) MA Reading

இணைப்பு 02 : உபரியான வணக்கங்களின் வகைகள் பகுதி 02 || AM. Ilham Gafoori, (M.A Reading)

கேள்விக்கான விடையை கீழ் வரும் இணைப்பின் ஊடாக சென்று அனுப்பவும் 

போட்டியின் விபரம் மற்றும் நிபந்னைகள் :

இப்போட்டியானது www.alimamslsf.com என்ற இணையத்தளத்தில் குறிப்பிட்ட வாரத்தில் பதியப்படும் வீடியோ, ஆடியோ பயான்கள், கட்டுரைகள், போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

குறித்த கேள்விக்கான விடையினை கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் போம் (google form) இல் உங்கள் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், கேள்விற்கான விடை என்பவற்றை உரிய பெட்டியினுள் நிரப்பி (Submit) என்ற பட்டினை அழுத்தினால் மாத்திரம் போதுமானது.

ஒருவர் கேள்விக்குரிய விடையை ஒரு முறை மாத்திரமே அளிக்க வேண்டும்.

விடைக்கான பரிசில்களாக வெற்றியீட்டும் இருவருக்கு தலா 200 ரூபாய் வீதம் 400 ரூபாய் வாரா வாரம் வழங்கப்படும்.

இப் போட்டியில் கலந்து வெற்றி பெறுவோறுக்கான பரிசு ரீலோட் இலங்கை ரூபாய் படியே அனுப்பப்படும். ஆதலால் வெளிநாடுகளில் இருந்து கலந்து கொள்பவர்கள் பரிசு ரீலோட்டை பெறும் இடத்து அவர் இலங்கை இலக்கம் ஒன்றையே குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

போட்டியில் பலர் வெற்றி பெறுமிடத்து, குலுக்கல் முறையில் 02 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

குர்ஆன், சுன்னாவை மக்கள் மயப்படுத்தும் இம் முயற்சியில் நீங்களும் எம்மோடு கை கோருங்கள். உங்களது குடும்ப, நண்பர்கள், என அனைவருக்கும் வாட்ஸ்அப் மூலம் எத்தி வையுங்கள். உங்கள் முகநூற் பக்கங்களில் எமது இம் முயற்சியை மக்கள் மயப்படுத்துங்கள்.

அல்-இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் சார்பில்; ஒன்றியத்தின் ஊடகப்பிரிவினரால் நடாத்தப்படும் வாராந்த இஸ்லாமிய வினா விடைப் போட்டியின் 12ம் வார வெற்றியார்கள் மற்றும் பாராட்டு பெறுவோர் :

குழுக்கள் முறையில் தெரிவு செய்யப்பட்ட இரு வெற்றியாளர்களும் :
#01 RIZAN || PANADURA, SRILANKA.

#02 MUSKY AHAMED || POLANNARUWA, SRILANKA.

இரு அதிஷ்டசாலிகளுக்குமான 200/= ரூபா பெறுமதியான ரீலோட் பரிசு விரைவில் அனுப்பிவைக்கப்படும் இன்ஷா அல்லாஹ் ...

alimamslsf's weekly quiz போட்டியில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் ALIMAMSLSF இன் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மீண்டும் அடுத்த வார வினாவுடன் சந்திப்போம். 
இன்ஷா அல்லாஹ்...

தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள். இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.

...جزاكم الله خيرا

சமூக ஊடகங்கள் மூலம் இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்துவதற்கான ஓர் முயற்சி…
கேள்வி வாரம் 12 : உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி கலண்டரை உருவாக்க காரணியாக அமைந்த ஸஹாபி யார் ?

விடைக்கான இணைப்புகள் :
இணைப்பு 01 : மலிந்து கிடக்கும் பாவங்களும் அழைப்பு பணியின் அவசியமும் || MHM. Waseem Dip in Arabic (B.A Reading)

இணைப்பு 02 : மறைக்கப்பட்ட இஸ்லாமிய அடையாளம்! |AM. Rasif Riyadhi (B.A)
கேள்விக்கான விடையை கீழ் வரும் இணைப்பின் ஊடாக சென்று அனுப்பவும் 
போட்டியின் விபரம் மற்றும் நிபந்னைகள் :

இப்போட்டியானது www.alimamslsf.com என்ற இணையத்தளத்தில் குறிப்பிட்ட வாரத்தில் பதியப்படும் வீடியோ, ஆடியோ பயான்கள், கட்டுரைகள், போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

குறித்த கேள்விக்கான விடையினை கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் போம் (google form) இல் உங்கள் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், கேள்விற்கான விடை என்பவற்றை உரிய பெட்டியினுள் நிரப்பி (Submit) என்ற பட்டினை அழுத்தினால் மாத்திரம் போதுமானது.

ஒருவர் கேள்விக்குரிய விடையை ஒரு முறை மாத்திரமே அளிக்க வேண்டும்.

விடைக்கான பரிசில்களாக வெற்றியீட்டும் இருவருக்கு தலா 200 ரூபாய் வீதம் 400 ரூபாய் வாரா வாரம் வழங்கப்படும்.

இப் போட்டியில் கலந்து வெற்றி பெறுவோறுக்கான பரிசு ரீலோட் இலங்கை ரூபாய் படியே அனுப்பப்படும். ஆதலால் வெளிநாடுகளில் இருந்து கலந்து கொள்பவர்கள் பரிசு ரீலோட்டை பெறும் இடத்து அவர் இலங்கை இலக்கம் ஒன்றையே குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

போட்டியில் பலர் வெற்றி பெறுமிடத்து, குலுக்கல் முறையில் 02 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

குர்ஆன், சுன்னாவை மக்கள் மயப்படுத்தும் இம் முயற்சியில் நீங்களும் எம்மோடு கை கோருங்கள். உங்களது குடும்ப, நண்பர்கள், என அனைவருக்கும் வாட்ஸ்அப் மூலம் எத்தி வையுங்கள். உங்கள் முகநூற் பக்கங்களில் எமது இம் முயற்சியை மக்கள் மயப்படுத்துங்கள்.

அல்-இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் சார்பில்; ஒன்றியத்தின் ஊடகப்பிரிவினரால் நடாத்தப்படும் வாராந்த இஸ்லாமிய வினா விடைப் போட்டியின் 11ம் வார வெற்றியார்கள் மற்றும் பாராட்டு பெறுவோர் : 

குழுக்கள் முறையில் தெரிவு செய்யப்பட்ட இரு வெற்றியாளர்களும் :
#01 FATHIMA NASRIYA || NAWALAPITIYA, SRILANKA.

#02 RAAFEA RIFAI || WARAKAPOLA, SRILANKA.

இரு அதிஷ்டசாலிகளுக்குமான 200/= ரூபா பெறுமதியான ரீலோட் பரிசு விரைவில் அனுப்பிவைக்கப்படும் இன்ஷா அல்லாஹ் ...

போட்டியில் கலந்து பாராட்டு பெறுவோர் :
alimamslsf's weekly quiz போட்டியில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் ALIMAMSLSF இன் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மீண்டும் அடுத்த வார வினாவுடன் சந்திப்போம். 
இன்ஷா அல்லாஹ்...

தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள். இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.

...جزاكم الله خيرا

சமூக ஊடகங்கள் மூலம் இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்துவதற்கான ஓர் முயற்சி…


கேள்வி வாரம் 11 : கொடுத்த தர்மத்தை  திருப்பி கேட்பவனை எந்த மிருகத்துக்கு நபி (ஸல்) அவர்கள் ஒப்பாக்கினார்கள் ?

விடைக்கான இணைப்புகள் :
இணைப்பு 01 : சுவனவாசிகள் ஓர் அல்குர்ஆனிய அலசல்! MIM. Rizwan Hami riyadhi (M.A Reading)

இணைப்பு 02 : அன்பளிப்புக்களால் சிக்கித் தவிக்கும் உறவுகள் - வஸீம் ஹூஸைன் -

கேள்விக்கான விடையை கீழ் வரும் இணைப்பின் ஊடாக சென்று அனுப்பவும்
போட்டியின் விபரம் மற்றும் நிபந்னைகள் :
இப்போட்டியானது www.alimamslsf.com என்ற இணையத்தளத்தில் குறிப்பிட்ட வாரத்தில் பதியப்படும் வீடியோ, ஆடியோ பயான்கள், கட்டுரைகள், போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

குறித்த கேள்விக்கான விடையினை கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் போம் (google form) இல் உங்கள் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், கேள்விற்கான விடை என்பவற்றை உரிய பெட்டியினுள் நிரப்பி (Submit) என்ற பட்டினை அழுத்தினால் மாத்திரம் போதுமானது.

ஒருவர் கேள்விக்குரிய விடையை ஒரு முறை மாத்திரமே அளிக்க வேண்டும்.

விடைக்கான பரிசில்களாக வெற்றியீட்டும் இருவருக்கு தலா 200 ரூபாய் வீதம் 400 ரூபாய் வாரா வாரம் வழங்கப்படும்.

இப் போட்டியில் கலந்து வெற்றி பெறுவோறுக்கான பரிசு ரீலோட் இலங்கை ரூபாய் படியே அனுப்பப்படும். ஆதலால் வெளிநாடுகளில் இருந்து கலந்து கொள்பவர்கள் பரிசு ரீலோட்டை பெறும் இடத்து அவர் இலங்கை இலக்கம் ஒன்றையே குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

போட்டியில் பலர் வெற்றி பெறுமிடத்து, குலுக்கல் முறையில் 02 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.


எனவே குர்ஆன், சுன்னாவை மக்கள் மயப்படுத்தும் இம் முயற்சியில் நீங்களும் எம்மோடு கை கோருங்கள். உங்களது குடும்ப, நண்பர்கள், என அனைவருக்கும் வாட்ஸ்அப் மூலம் எத்தி வையுங்கள். உங்கள் முகநூற் பக்கங்களில் எமது இம் முயற்சியை மக்கள் மயப்படுத்துங்கள்.



சவூதி அரேபிய ரியாத் மாநகரில் அமையபெற்றுள்ள சர்வதேச பல்கலைகழகமான அல் - இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் தமது உத்தியோக பூர்வ இணையத்தளம் மூலமாக இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்தி வருகின்றனர். அதன் தொடராக சென்ற வருடங்களில் (2017, 2018) ரமழான் மாதத்தில் தமிழ் பேசும் உலகில் “ரவ்ழது ரமழான்” எனும் தொனிப்பொருளில் தபால் மூலம் போட்டி நிகழ்ச்சி ஒன்றை சிறப்பாக நடாத்தியிருந்தது. 

அந்தவகையில் சென்ற ரமழானுக்கு முன் சுமார் 10 வாரங்களாக நடைப்பெற்று வந்த "alimamslsf இன் வாராந்த வினா விடைப் போட்டி" ரமழானுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. வாசகர்களின் வேண்டுதலுக்கும், இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் மீண்டும் வரும் சனிக்கிழமை முதல் தொடர்ந்து வாரா வாரம் போட்டி நிகழ்ச்சியை நடாத்த போட்டிக் குழு தீர்மானித்துள்ளது.

போட்டியின் விபரம் மற்றும் நிபந்னைகள் :

இப்போட்டியானது www.alimamslsf.com என்ற இணையத்தளத்தில் குறிப்பிட்ட வாரத்தில் பதியப்படும் வீடியோ, ஆடியோ பயான்கள், கட்டுரைகள், போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

குறித்த கேள்விக்கான விடையினை கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் போம் (google form) இல் உங்கள் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், கேள்விற்கான விடை என்பவற்றை உரிய பெட்டியினுள் நிரப்பி (Submit) என்ற பட்டினை அழுத்தினால் மாத்திரம் போதுமானது.

ஒருவர் கேள்விக்குரிய விடையை ஒரு முறை மாத்திரமே அளிக்க வேண்டும்.

விடைக்கான பரிசில்களாக வெற்றியீட்டும் இருவருக்கு தலா 200 ரூபாய் வீதம் 400 ரூபாய் வாரா வாரம் வழங்கப்படும்.

இப் போட்டியில் கலந்து வெற்றி பெறுவோறுக்கான பரிசு ரீலோட் இலங்கை ரூபாய் படியே அனுப்பப்படும். ஆதலால் வெளிநாடுகளில் இருந்து கலந்து கொள்பவர்கள் பரிசு ரீலோட்டை பெறும் இடத்து அவர் இலங்கை இலக்கம் ஒன்றையே குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

போட்டியில் பலர் வெற்றி பெறுமிடத்து, குலுக்கல் முறையில் 02 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எனவே குர்ஆன், சுன்னாவை மக்கள் மயப்படுத்தும் இம் முயற்சியில் நீங்களும் எம்மோடு கை கோருங்கள். உங்களது குடும்ப, நண்பர்கள், என அனைவருக்கும் வாட்ஸ்அப் மூலம் எத்தி வையுங்கள். உங்கள் முகநூற் பக்கங்களில் எமது இம் முயற்சியை மக்கள் மயப்படுத்துங்கள்.

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget