17- عَنْ أَنَسٍ يَقُوْلَ: كَانَ النَّبيُّ ச إِذَا دَخَلَ الْخَلاَءَ قَالَ: 'اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ'. صحيح البخاري رقم الحديث 142 وصحيح مسلم رقم الحديث 122- (375) واللفظ للبخاري
.
(17) 'கழிப்பிடத்திற்குச் செல்லும்போது, 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் குபுஸி வல் கபாஇஸி' என்று கூறும் வழக்கமுடையவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள்'.
'இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும்) ஆண், பெண் ஷைத்தான்களைவிட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்'
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி).
ஆதாரம் : புஹாரி : 142, முஸ்லிம் : 375 (இவ்வார்தை புஹாரியில் இருந்து)
(இந்நபிமொழியின் அறிவிப்பாளர் பற்றி 2ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.)
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்: - குறிப்பிட்ட இடங்கள் மற்றும் நேரங்களுக்கென்று (ஆதார அடிப்படையில்) வந்திருக்கும் பிரார்த்தனைகளை ஓதுவது மனிதனை அல்லாஹ்வின் உத்தரவின் பிரகாரம் அனைத்துக் கெடுதிகளிலிருந்தும் பாதுகாக்கும்.
- கட்டிடங்களிலும், வெட்டவெளியிலும் இந்த துஆவை ஓதுவதும், மறைக்கப்பட வேண்டிய பகுதிகளை மனித ஜின்களின் பார்வைகளை விட்டும் மறைப்பதும் மலசலம் கழிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களிலுள்ளதாகும்.
- நபிமொழியில் இடம்பெற்றுள்ள 'குபுஸ்' என்ற வார்த்தை 'கபீஸ்' என்பதன் பன்மையாகும். அதே போன்று 'கபாஇஸ்' என்ற வார்த்தை 'கபீஸத்' என்பதன் பன்மையாகும். இதன்மூலம் நாடப்படுவது ஆண், பெண் ஷைதான்களாகும். மேலும் 'குபுஸ்' என்றால் ஷைதான்கள், 'கபாஇஸ்' என்றால் பாவங்கள் என்றும் ஒரு கருத்து (அறிஞர் மத்தியில்) உள்ளது.