"ரவ்ழது ரமழான்" இஸ்லாமிய வினா விடைப் போட்டி - 2018 புள்ளி விபர முடிவுகள்


அன்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு கடந்த ரமழான் மாதம் முழுவதுமாக எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணையத்தள குழு ஆகியன நடாத்திய ரவ்ழது ரமழான் – 2018 வினா விடைப் போட்டியின் பெறு பேறுகளை இங்கு உங்களுக்கு காண முடியும்.

சென்ற வருடம் போன்று இம்முறையும் நாடு பூராகவும் இருந்து சுமார் 674 விடைப் பத்திரங்கள்  எமக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் அதிகப்படிகளாக கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 374 பதில்கள் கிடைக்கபெற்றது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும்.

கிடைக்கப் பெற்ற பதில்களை பார்க்கின்ற போது நாடு பூராகவும் எமக்கு கிடைத்த நற்பெயரும், தூய இஸ்லாத்தை பரப்பிய பூரிப்பும் உண்மையில் எங்களை ஆட்கொண்டு விட்டதெனலாம். அல்ஹம்துலில்லாஹ்.

இவ் விடைகளை பொறுத்த வரைவில் 100 வீதம் எந்த பாரபட்சமின்றி அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக திருத்தங்களை மேற் கொண்டோம். அதில் அதிகப்படியாக நாங்கள் நல்ல பெறுபேறுகளைக் கண்டு அக மகிழ்கின்றோம். அதில் கிட்டத்தட்ட 371 பேர் 100 புள்ளிகள் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அல் - இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

அதே போன்று பலர் 90 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். அவர்களும் பாராட்டப்படவேண்டிய வெற்றியாளர்களே. எனவே போட்டி ஏற்பாட்டுக் குழு சார்பில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

விடைளுக்கான புள்ளிகளை பொறுத்தவரையில் முதல் 20 வினாக்களுக்கு 3 புள்ளிகள் வீதம் 60 உம் மீதமுள்ள 8 வினாக்களுக்கும் 5 புள்ளிகள் அடிப்படையில் 40 ம் என மொத்தமாக 100 புள்ளிகள் வழங்கியுள்ளோம்.

ஏலவே நாம் அறிவித்த பிரகாரம் 1 தொடக்கம் 5௦ வரையான வெற்றியாளர்களுக்கு பணப்பரிசில்களும் கலந்து கொண்ட 675 பேருக்கும்  சான்றிதழ்களும் வெகு விரைவில் அனுப்பி வைப்போம் இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ்விற்காக இப் பணியை ஆரம்பித்து மனிதப் பலவீனங்களுக்கு மத்தியில் பலகெடுபிடிகளுக்குள் 100 வீதம் எந்த கலப்புமில்லாது நடாத்தியது மட்டுமல்லாது, அதில் நாம் எதிர்பார்த்த அடைவை விட ஒரு படி மேலே சென்றுள்ளது.

அதற்கு எமக்கு உதவியாக இருந்த அல்லாஹ்விற்கே நன்றிகள் உரித்தாகட்டும். 

ரவ்லது ரமழான் போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் தாம் எழுதிய விடைப்பத்திரங்களின் புள்ளிகளை தமது மாகாண பெயரை அழுத்துவதின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.


50 வெற்றியாளர்களை மாத்திரம் தெரிவு செய்யும் இப்போட்டியில் 100 புள்ளிகளை பெற்ற 371 போட்டியாளர்களில் சீட்டிழுப்பின் மூலம் 50 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் அவர்களின் பெயர் பட்டியல் இன்ஷா அல்லாஹ் நாளை வெளியிடப்படும்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget