ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 18

வேதக்காரர்களின் பாத்திரங்களைப் பயன்படுத்தலாமா?

عَنْ أَبِي ثَعْلَبَةَ الخُشَنِيِّ رضي الله عنه قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا بِأَرْضِ قَوْمٍ أَهْلِ الكِتَابِ، أَفَنَأْكُلُ فِي آنِيَتِهِمْ؟ قَالَ : لاَ تَأْكُلُوا فِيهَا، إِلَّا أَن لَا تجِدُوا فَاغْسِلُوهَا وَكُلُوا فِيهَا ( أخرجه البخاري 5478 ، مسلم 1930)



ஹதீஸின் பொருள்

அபூ ஸஃலபா அல் குஷனிய்யீ (ரலி) அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் அவர்களே! வேதம் கொடுக்கப்பட்டோருடன் நாங்கள் வசிக்கின்றோம். எனவே அவர்களது பாத்திரங்களில் நாங்கள் உண்ணலாமா? என்று நான் கேட்டேன். அதற்கு அவற்றில் நீங்கள் உண்ணாதீர்கள்! உங்களுக்கு வேறு பாத்திரங்கள் கிடைக்கவில்லையெனில், அவற்றைக் கழுவிவிட்டு அவற்றில் உண்ணுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸஃலபா (ரலி)

ஆதாரம் - புஹாரி : 5478, முஸ்லிம் : 1930.



ஹதீஸ் அறிவிப்பாளர்

அபூ ஸஃலபா அல் குஷனிய்யி (ரலி) அவர்கள் புனைப்பெயர் மூலம் அறியப்பட்ட பிரபலமான ஒரு நபித்தோழர். இவரது பெயரிரும், இவரது தந்தை பெயரும் என்ன என்பதில் அறிஞர்களிடத்தில் கருத்துக்கள் உள்ளன. இவரது பெயர் ஜுர்ஹூம் அல்லது ஜுர்ஸூம் என்பதாகும். இவருடைய தந்தை பெயர் அம்ரு அல்லது கைஸ் என்பதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. ஹூதைபியா உடன்படிக்கையின் போது மரத்துக்கீழ் இவரும் நபியவர்களிடம் பைஅத் செய்தார்கள்.

கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்கள் இவருக்கும் ஹனீமத் பொருளில் ஒரு பங்கு கொடுத்தார்கள். இவர்களது கூட்டத்தாரை இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுக்க நபியவர்கள் அனுப்பினார்கள். அவர்களும் இஸ்லாத்தை ஏற்றனர். இவர் வேட்டையைப் பிரதான தொழிலாகக் கொண்ட கிராமவாசியாவார். நபி (ஸல்) அவர்களிடம் பல கேள்விகள் கேட்டுள்ளார்கள். அவற்றில் வேதக்காரர்களின் பாத்திரங்களில் உண்பது, வேட்டைப் பிராணிகள் பற்றிய கேள்விகள் பிரதானமானவை. இறுதிக்காலத்தில் ஷாம் (ஸிரியா) பகுதியில் வசித்து அங்கேயே ஹிஜ்ரி 75ல் ஸுஜூதுடைய நிலையில் மரணித்தார்கள்.



ஹதீஸின் சாராம்சம்

தாம் யூத, கிறிஸ்தவர்களான வேதக்காரர்களுடன் சேர்ந்து வாழக்கூடிய சூழ்நிலையிலுள்ளதாகவும், அவர்களின் பாத்திரங்கள் அசுத்தமானதென்பதால் அவற்றில் உண்ண முடியுமா என்றும் அபூ ஸஃலபா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் வினவினார்கள். அதற்கு நபியவர்கள், இரு நிபந்தனைகளுடன் அவற்றில் உண்ணலாம் என்று பதிலளித்தார்கள். அவ்விரு நிபந்தனைகளுடன் அவற்றில் உண்ணவோ, பருகவோ முடியுமென்றால் ஏனைய தேவைகளுக்காகப் பயன்படுத்த முடியுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அவர்களுடைய பாத்திரங்களை பாவிப்பதில் இரண்டு முக்கிய நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

01. அவர்களுடைய இப்பாத்திரங்களைத் தவிர வேறு பாத்திரங்கள் கிடைக்காமலிருப்பது.

02. அவற்றை நன்கு கழுவுதல்.

பாத்திரங்களை பாவிப்பதில் பேணுதலாக இருக்க வேண்டும் என்பதே முதல் நிபந்தனையின் நோக்கமாகும். வேறு பாத்திரம் ஏதும் கிடைக்காமல் போனால் அவர்களது பாத்திரத்தை கழுவிப் பாவிக்குமாறு இஸ்லாம் ஏவுகிறது. இரண்டாவது நிபந்தனையான கழுவி பாவித்தல் என்ற அம்சம் அவர்களின் பாத்திரம் அசுத்தமானது என்பதை உணர்த்துவதற்காகவேயாகும்.



ஹதீஸின் படிப்பினைகள்

1. வேதக்காரர்களாகிய யூத, கிறிஸ்தவர்களுடைய பாத்திரங்களில் உண்ணலாகாது. ஏனெனில் அவர்கள் அசுத்தங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளமாட்டார்கள். சிலவேளை அதில் மதுவையோ பன்றி இறைச்சியையோ வைத்திருப்பார்கள். எனவே அப்பாத்திரங்களை பயன்படுத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்வதே சிறந்தது.

2. வேதக்காரர்களுடைய பாத்திரங்களைப் பயன்படுத்த முடியாதென்றால் இந்துக்கள், பௌத்தர்கள் போன்ற இணைவைப்பாளர்கள், இறை நிராகரிப்பாளர்களுடைய பாத்திரங்களை முற்றுமுழுதாக பயன்படுத்த முடியாது. ஏனெனில் வேதக்காரர்களுக்கு ஓரளவாவது வேதம் கொடுக்கப்பட்டதென்ற அடிப்படையில் இஸ்லாத்துடன் நெருக்கமுண்டு. ஆனால் ஏனைய மதத்தினருக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.

3. எமது நாடுகளிலுள்ள காபிர்களுடைய பாத்திரங்களைப் பயன்படுத்தும் தேவை ஏற்பட்டால், வேறு பாத்திரங்கள் கிடைக்காத பட்சத்தில் அவற்றைக் கழுவி பயன்படுத்தலாம்.

4. காபிர்களுடன் நற்காரியங்களை, நல்லுறவுகளை பகிர்ந்து கொள்ள அனுமதியுண்டு. அவர்கள் உறவினர்களாக அல்லது அண்டை வீட்டார்களாக இருக்கின்ற போதே மேற்கூறியவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மாறாக அவர்களின் பக்கம் சாய்வதோ அல்லது அவர்களது இணைவைப்புக் கொள்கைகளை ஆதரிப்பதோ தடுக்கப்பட்டுள்ளன.

5. காபிர்களுடன் அனுசரித்துப் போவதென்பது சாதாரண உலக விடயங்களில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக அவர்களின் மத அனுஷ்டானங்களில் பங்கெடுப்பதோ, அவர்களின் கொள்கைகளை வளர்க்கத் துணைபோவதோ, அவர்களது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவு, பானங்களைப் புசிப்பதோ கூடாது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

6. நபித்தோழர்கள் தாம் அறியாதவற்றை எவ்வளவு ஆர்வத்துடன் நபியவர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்வார்கள் என்பதற்கு இந்நபிமொழி அழகிய முன்மாதிரியாகும். எமது மார்க்க விடயங்களில் சிக்கல்கள் ஏற்படும்போது அவற்றுக்கான தீர்வை நாம் அறியாத பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களை நாடிச் சென்று அதற்கான தீர்வைப் பெற்று அமுல்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்.



வினா இல - 18
 
வேதக்காரர்களின் பாத்திரங்களில் சாப்பிடுவதாயின் இரண்டு நிபந்தனைகள் உள்ளன , அவ்விரண்டையும் கூறுக?

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget