ரவ்ழதுல் இல்ம் - 2023 (பாடம் : அகீதா, நாள் : 01)


இபாதத் (வணக்கம்)

 

 வணக்கம் ஓர் அறிமுகம்

அல்லாஹ்வை அறிந்துமனதால் விரும்பிஉளமாற ஏற்றுஅவனை நெருங்கிஅவன் அல்லாத ஏனையவற்றை புறக்கணித்து வணக்கத்தை நிறைவேற்றிடவே மனிதர்களையும்ஜின்களையும் படைத்து அவர்களை நெறிப்படுத்துவதற்காக நபிமார்களையும்ரசூல்மார்களையும் அனுப்பி வைத்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.  வணக்கத்தின் பூரணத்துவமே அல்லாஹ்வை அறிந்து கொள்வதில் தான் உள்ளது. ஓர் அடியான் எந்த அளவுக்கு தன் இறைவனை அறிவானோ அந்த அளவிற்கு அவனின் வணக்கமும் பூரணத்துவம் அடைகிறது.

 

அல்லாஹ் கூறுகின்றான் :  "ஜின்களையும்மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை"    (அல்குர்ஆன் -  51 : 56)

 

 வணக்கத்தின் வரைவிலக்கணம்

 "இபாதத்" என்பது அல்லாஹ் விரும்பி பொருந்திக் கொள்ளும் அனைத்து சொல்செயல்ஆகபுற செயல்பாடுகளையும் குறிக்கும் பொதுப் பெயராகும்.

 

 வணக்கத்தின் நிபந்தனைகள்

 ஒரு இபாதத் ஏற்றுக் கொள்ளப்பட இரண்டு நிபந்தனைகள் இருக்கின்றன. அவை இன்றி இபாதத் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவை பின்வருமாறு :

 

 01.  தூய எண்ணம் (அல் இஹ்லாஸ் )

தான் செய்யும் செயற்பாடுகள் அல்லாஹ்வுக்கு மாத்திரமே இருக்க வேண்டும். அது அவ்வண்ணக்கம் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான முதலாவது நிபந்தனையாகும்.  தனது எண்ணத்தில் ஏதும் குறைபாடுகள் ஏற்படும் போது அவ்வண்ணக்கம் அங்கீகரிக்கப்படாமல் பெரிய இணை வைப்பிலோசிறிய இணை வைப்பிலோ வீழ்த்தி விடும்.

 

அல்லாஹ் கூறுகின்றான் :  "தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தை செய்யட்டும்! எமது இறைவணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்"

(அல்குர்ஆன்  -   18 : 110)

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :  "செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. எனவே  எவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுடையவும்அவனது தூதருடையவும் கட்டளைக்கு ஏற்ப அமையுமோ அவரின் ஹிஜ்ரத்தை அவ்வாறே அல்லாஹ் கருதுவான். மேலும் எவருடைய ஹிஜ்ரத் உலகத்தை குறிக்கோளாகக் கொண்டிருந்தால்அல்லது ஒரு பெண்ணை திருமணம் செய்யும் நோக்கமாக இருந்தால் அவருடைய ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அவ்வாறாகவே அமைந்து விடுகின்றது.

 (ஆதாரம்  -  புகாரி : 54,  முஸ்லிம்  1907)

 

 02. நபியவர்களது வழிகாட்டல்.

 அல்லாஹ் தனது வேதத்தில்முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் எவற்றை செய்யுமாறு ஏவியுள்ளானோ அவன் பிரகாரமே அவனை வணங்க வேண்டும். இதற்கு முரணாக இருக்கும் எந்த வணக்கமும் "பித்அத்"  (நூதன அனுஷ்டனங்களாகும்)  அல்லாஹ் அனுமதிக்காதவற்றை தன் மீது கடமையாக்கி குற்றத்திற்கு ஆளாக நேரிடுவதோடு அவருடைய வணக்கம் அல்லாஹ்வால் இரத்து செய்யப்படும்.

அல்லாஹ் கூறுகின்றான் :  "நன்மை செய்த நிலையில் தமது முகத்தை அல்லாஹ்வை நோக்கி திருப்பவர் பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். காரியங்களின் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது" (அல்குர்ஆன் -  31 : 22)

இவ்வாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "தமது முகத்தை அல்லாஹ்வை நோக்கி திருப்புபவர்" என்ற வாசகம் தனது செயற்பாடுகளில் தூய எண்ணம் இருக்க வேண்டும் என்பதையும்,  "நன்மை செய்த நிலையில்" என்ற வாசகம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது செயல்பாடுகளுக்கு அமைவாக இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகின்றது.

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்  :  "எனது மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் செய்கிறாரோ அது இரத்து செய்யப்படும்"

(ஆதாரம்  -  முஸ்லிம் :  1718)

 

 

வணக்கத்தின் வகைகள்

 01. நம்பிக்கை சார்ந்த வணக்கங்கள்

 அல்லாஹ் ஒருவனே இரட்சகன்அவன் படைப்பினங்களை விட்டும் வேறுபட்டவன்நன்மை தீமைக்கு உரித்தானவன்,  அவனின் அனுமதியின்றி சிபாரிசை ஏற்றுக் கொள்ளாதவன்,  எதார்த்தத்தில் வணங்கப்படுவதற்கு தகுதியானவன்  போன்ற அடிப்படைகளை இது கொண்டிருக்கிறது.  இதனால் தான் அல்லாஹ் தன்னை பற்றியும்மலக்குமார்கள்வேதங்கள்அவனின் தூதர்கள்மறுமை நாள்விதி முதலிய அனைத்தையும் அவன் கூறியவாறு உண்மைப்படுத்திமனதாற ஏற்பதே நம்பிக்கை சார்ந்த வணக்கமாக ஆகி உள்ளது.

 

அல்லாஹ் கூறுகின்றான் :  "உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோமேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ்வையும்இறுதி நாளையும்வானவர்களையும்வேதங்களையும்நபிமார்களையும்  நம்புவோருமே நன்மை செய்பவர்கள்.

(அல்குர்ஆன் - 02 : 177)

 

 

 02. உள்ளம் சார்ந்த வணக்கங்கள்

 அல்லாஹ்வை மாத்திரம் நாடி செய்ய வேண்டிய வணக்கங்களை இது குறிக்கும். இதற்கு உதாரணமாக அல்லாஹ்வின் மீது வைக்கும் அன்புஅவனிடமே அனைத்து காரியங்களையும் பொறுப்புச் சாட்டும் தவக்குல்எல்லா சந்தர்ப்பங்களிலும் அவனை மாத்திரம் அஞ்சுதல் போன்றவைக்கு குறிப்பிடலாம்.

அல்லாஹ் கூறுகின்றான் :  "அல்லாஹ் அல்லாதவர்களை (அவனுக்கு) இணையாளர்களாக எடுத்து அல்லாஹ்வை நேசிப்பது போன்று அவர்களை நேசிப்போரும் மனிதர்களில் உள்ளனர். ஆனால்நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் மிக உறுதியானவர்"

அல்குர்ஆன்  -  2 :  165)  

 

 03. சொல் சார்ந்த வணக்கங்கள்

 இது "லாயிலாஹ இல்லல்லாஹ்"  என்ற ஏகத்துவ கலிமாவை மொழிவதற்கு குறிக்கும்.  இதனை ஒருவர் நாவால் மொழிந்து உள்ளதால் ஏற்கின்ற போது,  அவரது உயிருக்கும்உடைமைகளுக்கும் இஸ்லாம் உத்தரவாதம் அளிக்கிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :  "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் இல்லை" என்று மக்கள் கூறும் வரை அவர்களுடன்  போராட வேண்டும் என்று நான் ஏவப்பட்டுள்ளேன்.  யார் "லாயிலாஹ இல்லல்லாஹ்" என்ற கலிமாவை கூறுகிறாரோ அவர் தண்டனைக்குரியதை செய்யாமல் இருக்கும் வரை தனது உயிரையும்உடைமையையும் பாதுகாத்துக் கொண்டு விட்டார். அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் நாட்டத்தை பொறுத்தாகும்.

ஆதாரம் -  புகாரி : 2946,   முஸ்லிம் :  21)

 

 04. உடல் சார்ந்த வணக்கங்கள்

 தொழுகைநோன்புஹஜ் போன்ற வணக்கங்கள் இதில் இடம்பெறுகின்றன.

 

 அல்லாஹ் கூறுகின்றான் :  "எனவே உமது இறைவனைத் தொழுதோ அவனுக்காக அறுப்பீராக!"

அல்குர்ஆன் -  102:   02)

 

 

 05. பொருள் சார்ந்த வணக்கங்கள்

 அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க தனது செல்வத்தில் சிறு பகுதியை கொடுக்கும் ஸகாத்தையும்ஸதக்காவையும் இது குறிக்கும்.

 அல்லாஹ் கூறுகின்றான் :  "தொழுகையை கடைபிடியுங்கள்! ஸகாத்தை கொடுங்கள்! ருகூஉ   செய்வோருடன் (சேர்ந்து) ருகூஉ செய்யுங்கள்.

அல்குர்ஆன் - 02: 43)

 

 

மாதிரி வினாக்கள்

 

01-அல்லாஹ் நபியவர்கள் மூலமும் சஹாபாக்கள் மூலமும் எவற்றை செய்யுமாறு ஏவியுள்ளானோ அதன் பிரகாரமே அவனை வணங்க வேண்டும்? இக் கூற்று

 

02-அல்லாஹ் விரும்பி பொறுந்திக் கொள்ளும் அனைத்து சொல், செயல் அக,புற செயற்பாடுகளை கூறும் சரியான விடை?

 

03-பெரிய நிராகரிப்பில் ஈடுபட்டவருடைய இஸ்லாமிய நிலை?

 

 

 

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget