ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 21

பிக்ஹ் கலை ஓர் அறிமுகம்

பிக்ஹ் என்றால் என்ன?


பிக்ஹ் என்றால் செயல் ரீதியான மார்க்க சட்டங்களை தெளிவான ஆதாரங்களின் மூலம் அறிவதனைக் குறிக்கின்றது.

பிக்ஹ் சட்டங்கள்; குர்ஆன், ஹதீஸிலிருந்து நேரடியாகவும், அதன் விரிவுரைகளிலிருந்தும் பெறப்பட்டவையாகும்.

ஷரீஅத்தை உரிய முறையில் விளங்குவதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் அறிஞர்கள் மேற்கொண்ட முயற்சியின் வெளிப்பாடே பிக்ஹ் கலை ஆகும்.



பிக்ஹ் கலையை கற்பதன் முக்கியத்துவம்
1. பிக்ஹ் கலையை கற்பது ஒவ்வொருவரின் மீதும் அவசியமானதாகும். அது மனித வாழ்வுடன் தெடர்புபட்ட வணக்க வழிபாடுகள், குடும்ப வாழ்க்கை, கொடுக்கல் வாங்கல் போன்ற அனைத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்றது.

2. பிக்ஹ் கலையை முறையாக கற்கின்ற போது சமூகத்தில் பிரச்சினைகளும், பிளவுகளும் ஏற்படாது தடுக்க முடியும்.

3. இக்கலையை கற்பவர்கள் புதிதாக சமூகத்தில் எழுகின்ற சட்டப் பிரச்சினைகளுக்கு அறிவுபூர்வமாக தீர்வுகளை வழங்க உதவுகின்றது.



பிக்ஹ் கலையை கற்பதன் பயன்கள்

1. இது அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை பெற்றுத் தருகிறது.

2. தனி மனிதனதும் சமூகத்தினதும் வாழ்வை சீர்செய்கிறது.

3. மனித வாழ்வின் பிரச்சினைகளைத் தீர்க்கிறது.

4. புதிதாக உருவாகும் சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குகிறது.

5. இஸ்லாமிய மார்க்கம் அனைத்து காலத்திற்கும் பொருத்தமானது என்பதனை உறுதிப்படுத்துகிறது.

6. தனி மனிதனதும் சமூகத்தினதும் மார்க்க சட்டங்களை அறிவதற்கு உதவுகிறது.



பிக்ஹ்விற்கும்;, அகீதாவுக்கும் இடையிலான வித்தியாசம்
1. அகீதா என்பது மனிதனின் உள்ளத்துடன் தொடர்புபட்டதாகும். பிக்ஹ் என்பது அவனது செயற்பாட்டுடன் தொடர்புபட்டதாகும்.

2. அகீதாவில் கருத்து வேறுபாடுகள் இடம்பெறாது. பிக்ஹில் கருத்து முரண்பாடுகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன.

3. அகீதாவின் விடயங்கள் தெளிவாக அல்குர்ஆன், ஸுன்னாவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. ஆனால் பிக்ஹ் சட்டங்கள் எல்லாம் அவ்வாறு கூறப்படவில்லை. நவீன பிரச்சினைகளுக்கான தீர்வை இரு மூலாதாரங்களை ஆய்வு செய்தே பெற முடியும்.

4. அகீதாவின் சட்டங்கள் அனைத்து நபிமார்களுக்கும் ஒரே மாதிரியாக இருந்தன. பிக்ஹ் சட்டங்கள் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் மாறுபடுகின்றன.



வினா இல - 21

 பிக்ஹ்விற்கும்;, அகீதாவுக்கும் இடையிலான வித்தியாசம் ஒன்று குறிப்பிடுக?

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget