2018/2019 புதிய கல்வியாண்டிற்கான நிர்வாக தெரிவு

- வஸீம் ஹூஸைன் -

எமது பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தின் இறுதிக் கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் கடந்த சனிக்கிழமை (21) அன்று மாணவர் விடுதியில் இடம் பெற்றது.

ஒன்றியத்தின் தலைவர் நயீமுல்லாஹ் தப்லிஹி (PhD Reading) தலைமையில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தன்னோடு உதவியாய் இருந்தவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து புதிய நிர்வாகத்தில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து செயலாளர் ஸாஜிதீன் ஸஹ்வி அவர்களால் சென்ற மன்ற அறிக்கையோடு அவரது செயலாளர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்களை மின்னி மறையச் செய்தார். அத்தோடு தனக்கு பக்கபலமாய் உதவியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

பொருளாளர் ஹூஸ்னி முபாரக் கபூரியினால் சென்ற ஆண்டிற்கான கணக்கரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து கடன் திட்ட பொருப்பாளர் அவ்ன் நுரியினால் கடன் திட்ட அறிக்கை மன்றத்தில் ஒப்பிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் புதிய நிர்வாகத்திற்கான தெரிவு நடைபெற்றது. அதன் பிரகாரம்

தலைவர் - ரிஸ்மி ஜூனைத் அப்பாஸி (PhD Reading)

செயலாளர் - முஹம்மத் ஸரூக் நூரி

உப தலைவர் - ரிஸ்வான் இஸ்மாயில் ஹாமி

பொருளாளர் - ரஸ்லான் ஷஹாப்தீன் நூரி

கடன் திட்ட பொறுப்பாளர் - ஹூஸ்னி முபாரக் கபூரி

ஆகியோர் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டனர்.

பின்னர் புதிய தலைவர் அவர்களால் அடுத்த ஆண்டிற்கான செயற்திட்டம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு கூட்டம் முடிவு பெற்றது.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget