ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –ஹதீஸ் , நாள் 17)பாடம் - 01
1.1 ஹதீஸ் என்றால் என்ன?
1.1.1 ஸுன்னாஹ் :
மொழிவழக்கில் ‘ஸுன்னாஹ்’ என்ற அரபுப்பதம் ஏதாவதொரு வழிமுறை அல்லது நடைமுறை என்ற கருத்தைப் பொதிந்துள்ளது. இஸ்லாமிய அறிஞர்கள் ஸுன்னாவைப் பல கருத்துக்களில் பிரயோகித்துள்ளனர், அவற்றில் சிலவற்றை நோக்குவோம் :
ஹதீஸ்கலை அறிஞர்களிடத்தில் ஸுன்னா என்பது: ‘நபிகள் (ஸல்) அவர்களின் சொல், செயல், அவர்கள் மௌனமாக இருந்து அங்கீகரித்த விடயங்கள், அவர்களது அங்க அடயாளங்கள், குணநலங்கள் என்பவையாகும்’.
மேற்கூறப்பட்ட வரைவிலக்கணத்தை உற்று நோக்கினால் ஹதீஸ் என்பது ஐந்து விடயங்களை உள்ளடக்குகின்றது:
1.     சொல் : ‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றது’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். இது நபியவர்களுடைய சொல்லுக்கு உதாரணமாகும்.
2.     செயல் : நபியவர்கள் வுழூச் செய்ததை உஸ்மான் (ரழி) அவர்கள் பார்த்துவிட்டு அவ்வாறே செய்து காட்டினார்கள். இது நபியவர்களின் செயலிற்கு உதாரணமாகும்.
3.     அங்கீகாரம் : நபியவர்கள் முன்னிலையில் ஒரு நபித்தோழர் ஒரு சொல்லைச் சொன்னால் அல்லது ஒரு செயலைச் செய்தால், அதைத் தூண்டாமலும் தடுக்காமலும் மௌனமாக இருந்தால் அதை அங்கீகாரம் எனப்படும். மதீனாவில் மஸ்ஜிதுந் நபவிக்கு முன்னால் ஹபசா நாட்டு இளைஞர்கள் பெருநாள் தினத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் சமயம் நபியவர்கள் மௌனம் சாதித்ததை உதாரணமாகக் கொள்ளலாம்.
4.     அங்க அடையாளங்கள் : நபியவர்களின் அங்க அடையாளங்களை ஒரு நபித்தோழர் அறிவித்தால் அதுவும் ஹதீஸில் உள்ளதாகும், நபியவர்கள் மரணிக்கும் போது அவர்கள் தாடியில் 20 முடிகள் நரைத்திருந்தன என்பதாக ஒரு நபித்தோழர் அறிவித்திருப்பதை உதாரணமாகக் கொள்ளலாம்.
5.     குணநலங்கள் : நபியவர்களுடைய நற்குணங்களைப் பற்றி நபித்தோழர்கள் அறிவித்தால் அதுவும் ஹதீஸில் அடங்கும், இதற்கு உதாரணமாக நபிகளாருடைய நற்குணங்கள் பற்றி வந்திருக்கும் அனைத்து நபிமொழிகளையும் குறிப்பிடலாம்.
1.1.2 பலதரப்பட்ட அறிஞர்களிடத்தில் ஸுன்னாவின் விளக்கம் :
1.     ஹதீஸ்கலை அறிஞர்களிடத்தில் ஸுன்னா என்பது: ‘நபிகள் (ஸல்) அவர்களின் சொல், செயல், அவர்கள் மௌனமாக இருந்து அங்கீகரித்த விடயங்கள், அவர்களது அங்க அடயாளங்கள், குணநலங்கள் என்பவையாகும்’.
2.     அகீதாவுடைய அறிஞர்கள் ‘நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத அல்லது அவர்களது வழிமுறைக்கு எதிரான ‘பித்அத்’ எனும் நூதன காரியங்களுக்குப் புறம்பானது ஸுன்னாஹ்’ என வரைவிலக்கணப்படுத்தியுள்ளனர்.
3.     பிக்ஹுக்கலை அறிஞர்கள் ‘வாஜிப்’ அல்லது ‘பர்ளு’க்குப் எதிர்ப்பதம் ஸுன்னாஹ் எனக் கூறுகின்றனர்.
4.     உஸூலுல் பிக்ஹ் அறிஞர்களிடத்தில் ஸுன்னா என்பது: ‘நபிகள் (ஸல்) அவர்களின் சொல், செயல், அவர்கள் மௌனமாக இருந்து அங்கீகரித்த விடயங்கள் என்பவையாகும்’.
எனவே ஸுன்னாஹ் என்ற பதம் மேற்கூறப்பட்ட மூன்று அர்த்தங்களிலும் பிரயோகிக்கப்படுகின்றது. அது பிரயோகிக்கப்படும் இடத்தைப் பொறுத்து அதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.
1.1.3 ஸுன்னாவுடன் தொடர்பான சொற்கள் :
ஹதீஸ் - الحديث :
ஹதீஸ் என்ற அரபுப்பதம் ‘ஹதஸ்’ என்ற வேர்ச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும், ஹதீஸ் என்பது மொழிவழக்கில் உரை, உரையாடல், நிகழ்ச்சி, புதிய செய்தி ஆகிய பொருட்களைக் கொண்டுள்ளது.
ஹதீஸ்கலை அறிஞர்கள் ஸுன்னாஹ், ஹதீஸ் ஆகிய இரண்டையும் ஒரே கருத்தில்தான் பயன்படுத்தியுள்ளனர், அதன்படி ஹதீஸுக்குக் கூறப்பட்ட வரைவிலக்கணத்தையே ஸுன்னவிற்கும் கூறியுள்ளனர்.
ஹபர் - الخبر:
ஹபர்’ என்ற அரபுப்பதம் மொழிவழக்கில் செய்தி என்ற பொருளைக் கொண்டுள்ளது.
ஹதீஸ்கலை அறிஞர்கள் ‘ஹபர்’ என்ற சொல்லை ஹதீஸ், ஸுன்னா ஆகிய அர்த்தத்தில்தான் பயன்படுத்தியுள்ளனர். எனினும் சில அறிஞர்கள் ஹதீஸ், ஸுன்னா என்பது நபியவர்களுடைய கூற்றாகவும், ஹபர் என்பது நபியவர்கள் மற்றும் நபித்தோழர்கள் அனைவருடைய கூற்றுக்களாகவும் கணிக்கின்றனர்.


அதர் - الأثر:
அதர்’ என்ற சொல் மொழிவழக்கில் ஒன்றில் எஞ்சியதற்குக் கூறப்படும். ஹதீஸ்கலை அறிஞர்கள் ‘அதர்’ என்ற சொல்லை ஹதீஸ், ஸுன்னா என்ற கருத்தில்தான் பயன்படுத்தியுள்ளனர். எனினும் பலர் ‘அதர்’ என்றால் நபித்தோழர்கள் மற்றும் அவர்களைப் பின் தொடர்ந்த தாபிஈன்களுடைய கூற்றுக்கள் எனக் கூறுகின்றனர் 
.

கேள்விஇல17

 அதர்என்றால் என்ன?


கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget