வரலாற்றில் இடம் பிடித்த முஸ்லிம் கலாசார நிகழ்வு

(ஸாஜுதீன் மஹ்ரூப், வஸீம் ஹுஸைன்)
ஸஊதி அரேபிய ரியாத் மாநகரில் அமைந்திருக்கும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதலாவது முஸ்லிம் கலாச்சார நிகழ்வொன்றை 17.03.2017 அன்று வெற்றிகரமாக நாடாத்தி முடித்தனர்.

மன்னர் பஹ்த் கலாச்சார மண்டபத்தில் வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வு அஸர் தொழுகையை தொடர்ந்து ஆரம்பமானது. இந் நிகழ்விற்கு பிரதம அதியாக ஸஊதிக்கான இலங்கைத் தூதுவர் அஸ்மி தாஸிம் கலந்து கொண்ட இந் நிகழ்வில் முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் என சுமார் 2000 பேர் கலந்து சிறப்பித்தனர்.

முஸ்லிம்கள் உலகிற்கு செய்த சேவைகள், முஸ்லிம்களது வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், அடையாளச் சின்னங்கள், இலங்கை நாட்டின் முஸ்லிகளது பணிகள், சுதந்திரப் போராட்ட உயிர்த் தியாகங்கள், அரசியல்,கல்வி, சமூக, இலக்கிய ரீதியான சேவைகள், அரபெழுத்தணிகள், குர்ஆன் கையழுத்துப் பிரதிகள் என்பன காட்சிப்படுத்தப் பட்டன.

அதே போல் இஸ்லாம் என்றால் என்ன? எதனை போதிக்கின்றது? இஸ்லாம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கான தெளிவுகள் போன்ற தலைப்பில் சிறப்புரைகளும், சிறுவர் நாடகம், கஸீதா, போன்ற மேடை நிகழ்வுகளும் அரைகேற்றப்பட்டன.

கலந்து கொண்டவர்களுக்கு இஸ்லாம் தொடர்பான ஐயங்களை தீர்க்கும் நூல்கள், இஸ்லாமிய அடிப்படை, நவ முஸ்லிம்களுக்கான வழிகாட்டி நூல்கள் என்பன  இலவசமாக விநியோகிக்கப்பட்டன.


இந் நிகழ்வில் எமது பல்கலைக்கழக மாணவர்களால் முஸ்லிம்கள் உலகுக்கு செய்த சேவைகள், இலங்கையில் முஸ்லிம்களின் சேவைகள், பணிகள் போன்ற இரு தலைப்புகளிலும் ஸம் ஸம் நீரின் அற்புத தன்மை பற்றிய விபரனமும் காட்சிப்படுத்தப்பட்டன.


இக் கலாசார நிகழ்வில் கண்காட்சி மட்டுமல்லாது இரத்ததானம் செய்வதற்கான ஒழுங்குகள், முதலுதவி வசதிகள், புகைத்தல் தொடர்பான விளிப்புணர்வு பதாதைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

மிக வெற்றிகரமான முறையில் வரலாற்று சாதனையோடு நடைபெற்ற இந்கழ்வு இரவு 11 மணியளிவில் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்









































கருத்துரையிடுக...

ما شاء الله ، مبروك ، جهد ممتاز.

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget