ஸிபான் நஸீரின் பிரியாவிடை

ஸஊதி அரேபியா அல் இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் தனது கலைமானிப் பட்டப்படிப்பை முடித்து விட்டு நாடு சென்ற நமது சகோதரர்களில் சகோதரர் ஷிபான் நஸீர் அவர்களும் ஒருவராவார்.

பொலன்னறுவை மாவட்ட, தம்பாளை எனும் அழகிய கிராமத்தில் முஹம்மது நஸீர், ராஹிலா உம்மா தம்பதியினரின் 3வது பிள்ளையாக பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை 1993-2000 வரை தம்பாளை ரிபாய் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தார். பாடசாலை காலத்திலேயே அதி திறமை மிக்க இவர் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள்  என பல துறைகளில் பெயர் போற்றும் மாணவராக திகழ்ந்தார்.

2000 ஆண்டு தான் ஒரு மார்க்க அறிஞராக வரவேண்டும் என்ற அவாவில் பொலன்னறுவ மஜீதிய்யா அரபுக் கல்லூரியில் சே்ர்ந்து கற்கலானார். தனது அரபுக் கல்லூரி இடை நடுவே நிறுத்தப்படும் நிலை ஏற்பட்ட போது 2004 ஆம் ஆண்டு புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் கல்வி கற்று மௌலவி ஆலிமாக 2008 இல் வெளியேறினார்.

பின்னர் மார்க்கத்துறையில் கலைமானிப்பட்டம் பெற வேண்டும் என்ற நோக்கில் பல சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும்  மத்தியில்  அல்லாஹ்வின் உதவியால்  ஸஊதி அரேபியா ரியாத் நகரில் அமைந்துள்ள அல் இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்கான வாய்ப்பை பெற்றார். 

கணணி,ஆங்கிலம் ஆகிய துறைகளில் ஆர்வம் செலுத்தி அரபு மொழியில் டிப்ளோமா,  பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கறகை நெறிகயையும் பூர்த்தி செய்து இஸ்லாமிய அடிப்படை மூலாதார துறையில் தனது கலைமானிப் படிப்பை பூரத்தி செய்தார்.

அதே போன்று தஃவா பணிகளில் ஈடுபாடு கொண்ட அவர் தனது ஓய்வு நேரங்களை ரியாத் நகரில் தஃவா நிறுவனங்களின் அனுசரணையில் முஸ்லிம், முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கும் பல தொடர் பிரச்சாரங்கள், மார்க்க விளக்க வகுப்புகள், களப் பணிகள் செய்து பல துண்டுப் பிரசுரங்களையும் பல இஸ்லாமிய நூல்களையும் மெழிபெயர்த்தார். இதன் பயனாக அல்லாஹ்வின் உதவியால் சுமார் 35 மாற்றுமத சகோதர்கள்  புனித  இஸ்லாத்தை தழுவினர்.

இவ்வாறு இங்கு தஃவாவில் ஈடுபாடு காட்டிய ஸிபான் அவர்கள் எமது இலங்கைத் திருநாட்டிலும் வீரியமாக தனது தஃவாப் பணியை முன்னெடுக்க வேண்டியும் அல்லாஹ் அவருடைய வாழ்க்கையில் பரக்கத் செய்ய வேண்டும் என்றும் பிராத்தனை செய்கிறோம்.






கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget