ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 27

வுழூவின் சட்டங்கள்

மனதால் நிய்யத்து வைத்து சுத்தமான நீரால் குறிப்பிட்ட சில உறுப்புக்களை பூரணமாக கழுவுவதற்கு வுழூ என்று அழைக்கப்படும்.



வுழூ கடமை என்பதற்கான ஆதாரம்

அல்லாஹ் கூறுகிறான் 'முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸ்ஹூ செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்). (அல்குர்ஆன் - 05 : 06)



வுழூவின் சிறப்பு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : முஸ்லிமான ஓர் அடியான் அல்லது ஒரு முஃமின் வுழூ செய்து முகத்தைக் கழுவினால் அவன் பார்வையால் செய்த பாவங்கள் அனைத்தும் நீருடன் போய்விடுகிறன, அல்லது இறுதியாக விழும் நீர் துளியுடன் போய்விடுகிறது. அவன் தன் இரு கைகளைக் கழுவினால் கரங்களால் செய்த பாவங்கள் எல்லாம் நீருடன் போய்விடுகின்றன அல்லது இறுதியாக விழும் நீர் துளியுடன் போய்விடுகிறது. இரு பாதங்களைக் கழுவினால் பாதங்களினால் செய்த பாவங்கள் எல்லாம் நீருடன் போய்விடுகின்றன, அல்லது இறுதியாக விழும் தண்ணீர் துளியுடன் போய்விடுகிறது. அவன் பாவத்திலிருந்தும் தூய்மை அடைந்தவனாக மாறுகிறான். (முஸ்லிம் : 244)



வுழூவின் நிபந்தனைகள்

01. முஸ்லிமாயிருத்தல்.

02. புத்தியுடையவனாக இருத்தல்.

03. பிரித்தறியும் ஆற்றலுடையவராக இருத்தல்.

04. நஜீஸை நீக்குதல்

05. மனதால் நிய்யத்து வைத்தல்.

06. வுழூவின் உறுப்புகளை விட்டும் மறைக்கக்கூடியவைகளை நீக்குதல்.

07. சுத்தமான நீரை உபயோகித்தல்.





வுழூவின் பர்ளுகள்

01. முகத்தைக் கழுவுதல்.

முகத்தின் வரையறை : நீளத்தால் நெற்றியின் ஆரம்பத்திலிருந்து நாடிக்குழி வரையும், அகலத்தால் இரு காதுகளுக்கும் இடைப்பட்ட பகுதியாகும். இவ் வரையறைக்குள் வாய் கொப்பளித்தல், மூக்கினுள் நீர் செலுத்தி சிந்தி விடுதல், தாடியை அதன் இறுதி பகுதி வரை குடைந்து கழுவுதல் போன்ற செயற்பாடுகளும் அடங்குகின்றன. ஏனெனில் இவைகள் அனைத்தும் முகத்தில் உள்ளடங்கும் உறுப்புகளாகும். அல்லாஹ்வும் முகத்தை முழுமையாக கழுவும்படியே எமக்குக் கட்டளையிடுகிறான்.

02. இரு கைகளையும் முழங்கை வரை கழுவுதல்.

இரு கைகளையும் விரலின் நுனியிலிருந்து முழங்கை வரை கழுவுதல் வேண்டும் இதில் ஏதாவது ஒரு பகுதி துண்டிக்கப்பட்டிருந்தால்; எஞ்சியவற்றை கழுவ வேண்டும். முழங்கை வரை துண்டிக்கப்பட்டிருந்தால் முழங்கை மூட்டை கழுவ வேண்டும். காலுக்குரிய சட்டமும் இதே போன்றே அமையும்.

03. தலையையும் இரு காதுகளையும் நீரால் தடவுதல்.

தலையை முழுமையாகவும் அதே நீரைக் கொண்டு காதையும் ஒரு தடவை மஸ்ஹூ செய்ய வேண்டும்.

04. கணுக்கால் வரை இரு கால்களையும் கழுவுதல்.

கணுக்கால் என்பது கால்பாதத்தின் இறுதிப்பகுதியாகும். அதாவது கால் பாதத்தையும் காலையும் இணைக்கின்ற இரு எலும்புகளாகும்.

05. தொடராகவும் இடைவெளி விடாமலும் வுழூ செய்தல்.

அதாவது வுழூ செய்த ஒரு உறுப்பு காயும் முன் மறுவுறுப்பை கழுவுதல் வேண்டும்.

06. மேலே கூறியவாறு ஒழுங்கு முறைப்படி செய்தல்.



வுழூவின் சுன்னத்துகள்

01. வுழூ செய்வதற்கு முன்னால் மிஸ்வாக் செய்தல்

நபியவர்கள் கூறினார்கள் : எனது உம்மத்தினர்கள் மீது சிரமம் இல்லை என்று இருந்தால் ஒவ்வொரு வுழூவிற்கு முன்னாலும் மிஸ்வாக் செய்யுமாறு ஏவியிருப்பேன். (அஹ்மத் : 7364)

02. வுழூ செய்வதற்கு முன்னால் இரு கரங்களையும் கழுவுதல்.

ஏனைய நேரங்களைவிட தூங்கி எழுந்தவுடன் கரங்களைக் கழுவ வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'உங்களில் ஒருவர் தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தால் அவர் தனது கைகளை கழுவும் முன் பாத்திரத்தினுள் நுழைவிக்க வேண்டாம். ஏனெனில் அவர் தூங்கும் போது அவருடைய கை எங்கே உலாவியது என்று அவருக்குத் தெரியாது. (புஹாரி : 162, முஸ்லிம் : 278)

03. முகத்தைக் கழுவும் முன் வாய் கொப்பளித்தல், மூக்கிற்கு நீர் செலுத்துதல்.

வாய் கொப்பளிப்பதிலும், மூக்கினுள் நீரை செலுத்தி சிந்தி விடுவதிலும் மிகைப்புச் செய்தல். (நோன்பாளியை தவிர)

04. தாடியைக் குடைந்து கழுவுதல்.

இதற்கு சான்றாக நபியவர்கள் வுழூ செய்யும் போது இரு கரங்களாலும் ஓரளவு நீரை எடுத்து, அதனை தாடிக்குள் உட்செலுத்தி, குடைந்து கழுகுபவர்களாக இருந்தார்கள். இவ்வாறுதான் எனது இரட்சகன் எனக்கு ஏவினான் என்று கூறினார்கள். (அபூதாவூத்; : 36)

05. வலதை முற்படுத்தல்.

வுழூ செய்யும் போது, வுழூவின் உறுப்புகளில் வலதை முற்படுத்த வேண்டும். நபியவர்கள் செருப்பு அணிவதிலும், தலை முடி சீவுவதிலும், சுத்தம் (வுழூ) செய்வதிலும், தங்களின் எல்லா விடயங்களிலும் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள். அறிவிப்பாளர் : ஆஇஷா (ரலி) ஆதாரம் - புஹாரி : 168, முஸ்லிம் : 268

06. வுழூவின் உறுப்புகளை மூன்று முறை கழுவுதல்.

முகம்,கை,கால் ஆகிய உறுப்புகளை மூன்று முறை கழுவுதல் வேண்டும். இதற்கு மேல் அதிகப்படுத்த கூடாது. ஏனனில் நபிகளாரின் வுழூவின் வர்ணனை பற்றி வந்துள்ள ஹதீஸ்களில் இடம்பெறும் அதிக எண்ணிக்கை மூன்று ஆகும்.

குறிப்பு : வுழூவின் பூரண நிலை அதன் உறுப்புக்களை மூன்று முறை கழுவுதலாகும். எனினும் நபியவர்கள் சில சந்தர்ப்பங்களில் உறுப்புக்களை இரண்டு அல்லது ஒரு விடுத்தம் கழுவியிருக்கிறார்கள்.

'நபி (ஸல்) அவர்கள் வுழூச் செய்யும்போது அவர்களின் உறுப்புக்களை ஒவ்வொரு முறை கழுவினார்கள்' (புஹாரி : 157)

'நபி (ஸல்) அவர்கள் வுழூச் செய்தபோது அவர்கள் உறுப்புக்களை இரண்டிரண்டு முறை கழுவினார்கள்' (புஹாரி : 158)


வினா இல - 27
 
வுழுவின் கடமைகளில் ஒன்றாகிய முகத்தைக் கழுவும் போது கடைபிடிக்க வேண்டிய முகத்தின் வரையறை என்ன ?

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget