ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –ஹதீஸ் , நாள் 22)



பாடம் 06
6.1. தேங்கி நிற்கும் நீரில் மூழ்கிக் குளிக்கலாகாது
عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «لَا يَغْتَسِلْ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ وَهُوَ جُنُبٌ». أَخْرَجَهُ مُسْلِمٌ. وَلِلْبُخَارِيِّ: «لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ الَّذِي لَا يَجْرِي, ثُمَّ يَغْتَسِلُ فِيهِ» .
பொருள் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் (ஓடாமல்) தேங்கி நிற்கும் நீரில் (மூழ்கிக்) குளிக்க வேண்டாம்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் 282.
புஹாரியின் அறிவிப்பில் :உங்களில் ஒருவர் ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்து விட்டு, பின்னர் அதில் குளிக்க வேண்டாம்.
6.1.1. ஹதீஸ் அறிவிப்பாளர் :
'ராவியதுல் இஸ்லாம்" என்ற சிறப்புப்பெயர் பெற்றவர் அபூ ஹுரைரா அப்துர் ரஹ்மான் பின் ஸக்ர் அத்தௌஸீ அல்யமானீ (ரலி). தான் ஆடு மேய்க்கும் போது பூனைக் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருப்பதை வழமையாகிக் கொண்டதால் இவருக்கு 'அபூ ஹுரைரா" என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டது. 'கைபர்" போர் நடைபெற்ற ஹிஜ்ரி 7ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றார். பின்னர் தொடர்ந்து 4 வருடங்கள் நபிகளாருடனே இருந்தார்கள், நபியவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடனேயே இருந்து நபிமொழிகளைக் கற்பதில் முயற்சி எடுத்து அதில் ஆர்வம் காட்டினார்கள். இதனால் நபிகளாரைத் தொட்டும் அதிக நபிமொழிகளை மனனமிட்டு, 5374 ஹதீஸ்களை அறிவித்து, நபித்தோழர்களில் மிகக் கூடுதலான நபிமொழிகளை அறிவித்தவர் என்ற பெயருக்கு சொந்தமானார். மேலும் மதீனாவின் பிரபல சட்டக்கலை வல்லுனர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். ஹிஜ்ரி 57ம் ஆண்டு மதீனாவில் மரித்து பகீஉல் கர்கதில் அடக்கம் செய்யப்பட்டார்.



6.2. சாரம்சம் :
நீர்த் தொட்டிகள், டேங்கர்கள், மக்கள் நீர் எடுக்கும் இடங்கள் போன்ற ஓடாமல் தேங்கி நிற்கும் நீர்த் தடாகங்களில், சிறுநீர் கழிப்பதை நபியவர்கள் தடுத்துள்ளார்கள். அதனை மக்களுக்கு அசுத்தப்படுத்தி, வெறுக்க வைக்காமல் இருப்பதற்காகவே இது தடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இதுபோன்ற கழிவுப் பொருட்கள் சமூகத்தில் கொடிய நோய்கள் பரவக் காரணமாகின்றன. அதேபோன்று நீரை அசுத்தப்படுத்தாமலிருக்க, ஓடாத நீரில் மூழ்கிக் குளிப்பதையும் நபியவர்கள் தடுத்துள்ளார்கள். மாறாக அள்ளித்தான் குளிக்க வேண்டும். அதுவே குளிப்புக் கடமையான நிலையில் இருந்தால் அவருக்குரிய தடை இன்னும் கடுமையாக இருக்கும். அந்த நீர் (ஆறு, கடல் போன்று) ஓடக்கூடியதாக இருந்தால் அதில் குளிப்பதிலோ, சிறுநீர் கழிப்பதிலோ ஆட்சேபனை கிடையாது. என்றாலும் அதில் சிறுநீர் கழிப்பதால் எவ்விதப் பயனுமில்லாததாலும், ஏனையோருக்கு சில சமயங்களில் இடையூறு ஏற்படலாம் என்பதாலும் அதனைத் தவிர்ப்பது நல்லது.
6.3. படிப்பினைகள் :
1. தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழிப்பது ஹராமாகும். அதிலே மலம் கழிப்பது இன்னும் கடுமையாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அது குறையவோ அல்லது கூடவோ இருந்தாலும் சரி. ஆனால் ஓடக்கூடிய நீரில் அது தடையில்லை. ஏனெனில் ஓடக்கூடிய நீரில் அசுத்தம் கலந்த உடனே அந்த நீர் அசுத்தமாக மாட்டாது. அதன் நிறம், வாடை, சுவை இம்மூன்றிலொன்று மாறினால்தான் அசுத்தமாகும்.
2. தேங்கி நிற்கும் தண்ணீரில் மூழ்கிக் குளிக்கலாகாது. ஏனெனில் அது தண்ணீரை மாசடையச் செய்து விடும்.
3. மக்களுக்குத் தீங்கிழைக்கும் அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
4. மேற்கண்ட நபிமொழியில் வந்திருக்கும் தடையென்பது ஹராம் என்பதையே குறித்து நிற்கின்றது.

கேள்வி இல22
தேங்கி நிற்கும்நீரில் குளிப்பதன் சட்டம்என்ன?

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget