ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – அகீதா, நாள் 03)பாடம் - 03
3.1. இஸ்லாமிய கொள்கையில் நெறிபிறழ்வுகள் ஏற்பட்டமைக்கான காரணங்கள்
தூய இஸ்லாமிய கொள்கையில் நபி r அவர்களின் மரணத்திற்குப் பிறகு பல நெறிபிறழ்வுகள் ஏற்பட்டு, இக்கொள்கை மோசமானவர்களின் நச்சுக் கருத்துக்களால் நிரம்பி வழிந்தது. அவற்றில் சில முக்கியமான விடயங்கள்:
1. இஸ்லாமிய கொள்கையை கற்றல், கற்பித்தல் விடயத்தை மறுத்தமையும், அதில் பொடுபோக்கைக் கையாண்டமையும் பின்னால் ஓர் சமூகம் அதைப் பற்றிய சிறு அறிவு கூட இல்லாமல் வளர்ச்சியுர வழிகோலியது. அவர்கள் இக்கொள்கையின் சரியான கருத்துக்களையும், நிலைமைகளையும் அறியாத காரணத்தினால் சரியானவற்றை தவறென்றும், தவறானவற்றை சரியென்றும் சீர்தூக்கிப் பார்க்கின்றனர். இக்கொள்கைக்கு முரணான கருத்துக்கள், ஒத்துப்போகும் கருத்துக்கள் என இவ்விரண்டையும் சரிவர பிரித்தறிய முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். உமர் t  அவர்கள் கூறினார்கள், “மடமை என்றால் என்னவென்று தெரியாத ஒரு சமூகம் உருவாகும் போது இஸ்லாத்தின் முடிச்சுகள் ஒவ்வொன்றாய் அவிழ்ந்து போய்விடும்.
2. தமது மூதாதையர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவதிலும், தான் பின்பற்றும் மத்ஹபு, இயக்கம், கூட்டம் ஆகியவற்றில் பிடிவாதமாய் இருந்தமையானது, இஸ்லாத்துக்கு முரணான விடயங்களாக இருப்பினும் அவற்றை எடுத்து நடக்கவும், இஸ்லாத்தின் யதார்த்தமான அம்சங்களாக இருப்பினும் அவற்றைப் புரம் தள்ளிடவும் வழிகோலியது. அல்லாஹ் கூறுகிறான், 'அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!' என்று அவர்களிடம் கூறப்பட்டால் 'எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?” (அல்குர்ஆன் 02:170)
3. சரி எது, தவறு எது என்பதை உணராமல், எவ்வித ஆதாரங்களும் இன்றி, மக்கள் கூறும் அனைத்துக் கருத்துக்களையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதும் நெறிபிறழ்விற்கே இட்டுச் செல்கின்றது. தற்போது இஸ்லாத்தில் நம்பிக்கை சார் கொள்கை அடிப்படையில் தோன்றி இருக்கும் குர்ஆனுக்கும், ஸுன்னாவுக்கும் முரணான இயக்கங்களாகிய ஜஹ்மிய்யாக்கள், முஃதஸிலாக்கள், ஸூபியாக்கள், அவர்களைத் துயர்ந்த பல கூட்டத்தினர் தமது வழிகெட்ட தலைவர்கள் கூறும் அனைத்துக் கருத்துக்களையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றியதனால் தான் வழிகெட்ட கூட்டத்தினர்களாக மாறிவிட்டனர்.
4. நல்லடியார்கள் விடயத்தில் எல்லை மீறிச் செயற்பட்டமையும் இதில் அடங்கும். அவர்களை அவர்கள் தகுதிகளை விடவும் உயர்த்திப் பார்த்தல், அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய முடியுமான நன்மைகளை அளித்தல், தீமைகளைத் தடுத்தல் போன்றவற்றை இவர்களும் செய்திடுவார்கள் என நம்பிக்கை வைத்தல், தமது தேவைகள் நிறைவேறிடவும், பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படவும் அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் மத்தியில் இடைத்தரகர்களாய் இவர்களை ஆக்கிக் கொள்ளுதல் போன்ற அனைத்தும் இச்சமூகத்தை நாசம் செய்து, குட்டிச் சுவராக்கியுள்ளன. எந்தளவுக்கெனில் யாரிடம் சென்று அல்லாஹ்விடம் தமது தேவைகளை முன்வைக்குமாறு மன்றாடினார்களோ அவர்களையே கடவுள்களாக மாற்றி விட்டினர். அவர்களின் அடக்கஸ்தலத்திற்குச் சென்று பிராணிகளை அறுத்துப் பலியிடல், நேர்ச்சை வைத்தல், பிரார்த்தனைகள் புரிதல், உதவி வேண்டுதல் போன்ற அல்லாஹ்விடம் மாத்திரமே செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் அங்கு செய்கின்றனர். இவ்வாறே நூஹ் u அவர்களின் சமுதாயத்திலும் நடைபெற்றது என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான், “"உங்கள் கடவுள்களை விட்டு விடாதீர்கள்! வத்து, ஸுவாவு, ஹூஸ், க், நஸ்ர் ஆகியவற்றை (தெய்வங்களை) விட்டு விடாதீர்கள்!'' என்று அவர்கள் கூறுகின்றனர்.” (அல்குர்ஆன் 71:23).
5. இப்பிரபஞ்சத்தில் அல்லாஹ் நிகழ்த்தியிருக்கும் அத்தாட்சிகளை ஆய்வு செய்திடவும், அவற்றை சிந்தித்துப் பார்த்திடவும் னேகர் மறந்துவிடுகின்றனர். இவை அனைத்தும் விஞ்ஞானிகளினதும், ஆய்வு மேதைகளினதும் கண்டுபிடிப்புக்கள் என அவர்களின் முயற்சிகளையும், கண்டுபிடிப்புக்களையும் பாராட்டி மகிழ்கின்றனர். தான் ஒன்றை செய்து சாதித்தாலும், அல்லாஹ்வின் வல்லமையை மறந்து பெருமைப்படுகின்றனர். அல்லாஹ்வின் சக்திக்கு முன்னால் மனிதனின் சக்தியே உயர்வானது என்ற எண்ணத்தை மறைமுகமாக தமது மனங்களில் விதைத்துக் கொள்கின்றனர். அல்லாஹ் காரூனைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறான், பின்னர் நாம் அவனுக்கு நமது அருட்கொடையை வழங்கினால் 'எனது அறிவால் இது எனக்குத் தரப்பட்டது' எனக் கூறுகிறான்.” (அல்குர்ஆன் 39:49). புதிய கண்டுபிடிப்புக்களுக்கான சிந்தனைகளையும், அதற்கான வழிவகைகளையும், தாம் சாதித்திடக் காரணமாக இருந்த அம்சங்களையும் அமைத்துத் தந்தது யார் என்பதை மனிதன் சிந்திக்க மறந்து விடுகிறான். இதுவும் அவனை நெறிபிறழ்விற்கே இட்டுச் செல்கின்றது.
6. வீட்டில் வளரும் குழந்தைகளுக்கும், பிள்ளைகளுக்கும் வழங்கப்படும் தூய்மையான வழிகாட்டல் போதாமை. நபி r அவர்கள் கூறினார்கள், ஒவ்வொரு குழந்தையும் இயற்கை மார்க்கமான இஸ்லாமிய மார்க்கத்தில் தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்களே அவர்களை யஹூதிகளாகவும், நஸாராக்களாகவும், நெருப்பு வணங்கிகளாகவும் மாற்றிவிடுகின்றனர்” (அறிவிப்பவர்:  அபூஹுரைரா t, ஆதாரம்: புஹாரி 1359, முஸ்லிம் 2658).
7. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளிலும், இஸ்லாமிய பிரதேசங்களிலும் தொலைதொடர்பு ஊடகங்களும், கல்வி ஊடகங்களும் தமது சரியான கடமையை செய்திட மறுக்கின்றன. அதிகமான புதிய கற்பித்தல் முறைகளும் இஸ்லாமிய சட்டதிட்டங்களையும், இஸ்லாமிய கொள்கை கோட்பாட்டையும் கற்பிப்பதை ஒரு பொருட்டாகவே பார்ப்பதில்லை. முஸ்லிம்களால் முஸ்லிம்களுக்கென்று உருவாக்கப்பட்டுள்ள ஊடகங்கள் கூட தமது கடமையை ஒழுங்குர செய்திடாமல், வளர்ந்து வரும் சமுதாயத்தினருக்கு வீண்கேலிக்கைகளையும், அனாச்சாரங்களையும் மனதில் விதைத்து, நாத்திகர்களினதும், வழிகெட்ட கூட்டத்தாரினதும் கருத்துக்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் அவர்களை மடைமைவாதத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
இவைகள் அனைத்தும் அப்பாவி பாமர மக்களையும், தெளிவில்லாமல் கற்றுக்கொண்ட கல்விமான்களையும், வளர்ந்து வரும் சமுதாயத்தினரையும் தூய இஸ்லாமிய கோட்பாட்டை விட்டும் நெறிபிறழ வைக்கின்றன.
3.2. நெறிபிறழ்வுகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் முறைகள்.
1. அல்லாஹ்வின் வேதத்தின் பக்கமும், நபி r அவர்களின் வழிமுறையின் பக்கமும் மீண்டிட வேண்டும். அதில் பொதிந்துள்ள இஸ்லாமிய நம்பிக்கை சார் கொள்கைகளை சரிவர விளங்கிட வேண்டும். அத்தோடு இஸ்லாத்தை விட்டும் பிரிந்து சென்றுள்ள வழிகெட்ட கூட்டத்தார்களின் கருத்துக்களையும் ஆய்வு செய்து, அதிலிருந்து நாம் நம்மைப் பாதுகாப்பதோடு, அவர்களுக்கு மறுப்பு வழங்கிடவும் தயாராகிக் கொள்ள வேண்டும். ஸலபுகளும் இவ்வாறே தமது சீரான கொள்கையைப் பெற்றுக்கொண்டனர். இச்சமுதாயத்தின் முதுகெலும்பான இன்றைய வாலிபச் சமூகம் திருந்தாவிட்டால் அவர்களுக்குப் பின்னால் வரும் வம்சமே துவம்சம் ஆகிவிடும்.
2. பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்புக்களுக்கும், அவர்களின் தகைமைகளையும், அறிவுத் திறன்களையும் கருத்தில் கொண்டு, சரியான, நபித்தோழர்களும், அவர்களைப் பின்துயர்ந்து நடந்த நல்லடியார்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களும் தமது வாழ்க்கையாகக் கொண்ட, தூய இஸ்லாமிய கொள்கைகள் சிறப்பாகக் கற்பிக்கப்படல் வேண்டும்.
3. இதற்கென ஓர் பாடத்திட்டத்தைத் தயாரிக்கும் போது, அதற்குத் தேவையான குறிப்புக்களையும், தகவல்களையும் சரியான இஸ்லாமிய கொள்கைகள் சார்ந்து எழுதப்பட்ட நூல்களிலிருந்தே பெற்றிட வேண்டும். ஸூபிய்யாக்கள், ஜஹ்மிய்யாக்கள், முஃதஸிலாக்கள், அவர்களைத் துயர்வோரின் நூல்களிலுருந்து பெறப்பட்ட கருத்துக்களை இதில் இடம்பெறச் செய்திடக் கூடாது.
4. மக்களுக்கு மத்தியில் காணப்பட்டும் தீய, மோசமான கொள்கைகளை சீர்திருத்தி, அவர்களை சரியான இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் அமைத்திட சிறந்த இஸ்லாமிய அழைப்பாளர்களை உருவாக்கிட வேண்டும். அவர்களும் ஸலபுகள் விளங்கிக் கொண்டவாரே விளங்கி, அதனடிப்படையில் செயற்படுவோராயும் இருக்க வேண்டும். அவர்கள் கல்வியைப் பெற்றுக் கொள்ளும் இடங்களிலும் வழிகெட்ட கொள்கைகள் கற்பிக்கப்படுகின்றனவா என்பதனையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் தூயதோர் இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கிட முடியும்.
5. நவீன உலகை ஆட்டிப் படைக்கும் அச்சு ஊடகம், ஒலி,ஒளி ஊடகம், தொலை தொடர்பு சாதனங்கள் போன்றவற்றை இஸ்லாமிய மயப்படுத்துவதோடு மாத்திரம் நின்று விடாமல், அவற்றில் சீரான இஸ்லாமியக் கொள்கைகளை விளம்பரப்படுத்தி, அதன் மூலம் சமூகத்தை சீர்திருத்திட விளைய வேண்டும். வீட்டுச் சூழலில் வசிப்போரும் தமது பொறுப்பில் இருப்பவர்களுக்கு சிறந்த ஊடகமாய் அமைந்து, அவர்களையும் தூய கொள்கையின் அடிப்படையில் வழிநடாத்திட வேண்டும்.

கேள்வி இல 03
இஸ்லாமிய  கொள்கையில் நெறி பிறழ்வு ஏற்படுவதற்கான காரணம் ஒன்றும் அதிலிருந்து பாதுகாப்பு ெபறும் வழிமுறை ஒன்றும் தருக?

கருத்துரையிடுக...

அன்புள்ள சகோதரர்களே!

எமது சமூகவலைத்தளம் மூலமாக இஸ்லாமிய அடிப்படைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற நன் நோக்கில் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் இப் போட்டி நிகழ்வை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.

எனவே தயவு செய்து கேள்விகளுக்கான விடைகளை பின்னூட்டமாக பதிய வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இணைத்தள ஊடகப் பிரிவு

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget