வாராந்த வினா விடைப் போட்டி அறிவித்தல் !


சமூக ஊடகங்கள் மூலம் இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்துவதற்கான ஓர் முயற்சி… 
வாராந்த வினா விடை போட்டி
     சவூதி அரேபிய ரியாத் மாநகரில் அமையபெற்றுள்ள சர்வதேச பல்கலைகழகமான அல் - இமாம் முஹம்மத் பின் சுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் தமது உத்தியோக பூர்வ இணையத்தளம் மூலமாக இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்தி வருகின்றனர். அதன் தொடராக சென்ற (2017) ரமலான் மாதத்தில் தமிழ் பேசும் உலகில் ரவ்லது ரமலான் என்ற தொனிப்பொருளில் தபால் மூலம் போட்டி நிகழ்ச்சி ஒன்றை சிறப்பாக நடாத்தியிருந்தது. அந்தவகையில் மேலும் தொடராக வாராந்த  வினா விடை போட்டி நிகழ்ச்சி ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளது.
போட்டி விபரம் :
      இப்போட்டியானது அல் - இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தினால் இயக்கப்படும் www.alimamslsf.com என்ற இணையதளத்தில் நாளாந்தம் பதியப்படும் கட்டுரைகள், பயான்களில் இருந்து வாராந்தம்  கேள்விகள் கேட்கப்பட்டு சரியான விடைகளை அனுப்பும் போட்டியாளர்களில் இருந்து  இருவர் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்படுவர் .
பங்கு பற்றும் முறை :
     இப்போட்டியில் பங்கு கொள்ள விரும்புவோர் எமது இணையதளம் மூலம் வார ஆரம்பத்திலிருந்து இறுதி வரை பதியப்படும்  தகவல்களை படித்து அதில் கேட்கப்படும்  வினாவுக்கான விடையை 2 நாட்களுக்குள் WhatsApp அல்லது SMS ( குறுந்தகவல் ) மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

பரிசு விபரம் :
    வெற்றி பெரும் அதிஷ்டசாலிகள் இலங்கையர்கள் எனில் அவர்கள் இருவருக்கும் தலா 200/- பெருமதியான reload பரிசாக வழங்கப்படும்.
    சவூதி அரேபியாவை சேர்த்தவர்கள் எனில் 10/- பெறுமதியான phone card இருவருக்கு பரிசாக வழங்கப்படும்.

மேலதிக தகவல்களுக்கு :
    இணையத்தில் பதியப்படும் வினாக்களுக்கான இணைப்புகளை Facebook, twitter மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

  
Twitter இல் நமது இணையதள செய்திகள் மற்றும் போட்டி பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள... (Follow alimamslsf) என டைப் செய்து 40404 எனும் இலக்கத்திற்கு SMS அனுப்பவும்.

  WhatsApp இல் இணையதள செய்திகள், மற்றும் போட்டி பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள கீழ் வரும் இலக்கங்களில் ஏதாவது ஒன்றை தொடர்புகொள்ளுங்கள்.

Asshaik Waseem - 0094 75 25 238 25
Asshaik Hizbullah - 00966 53 776 1607

போட்டி விதிமுறைகள் :
01. 15 வயதை பூர்த்தி செய்த ஆண், பெண் என இரு பாலாரும் பங்குபற்றலாம்.
02.ஒருவர் ஒரு தடவை மாத்திரம் விடையை அனுப்ப வேண்டும்.
03.அனுப்புவரின் பெயர், விலாசம், தொடர்பிலக்கம் என்பன சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.
04.விடை www.alimamslsf.com என்ற இணையத்தில் பதியப்படும் தகவல்களிலிருந்து மாத்திரமே எழுதப்படல் வேண்டும்.
05.விடையை SMS (குறுந்தகவல்) அல்லது WhatsApp மூலம் 48 மணித்தியாலத்துக்குள் மேற்குறிப்பிட்ட இரு தொலைபேசிகளில் ஏதாவது ஒரு தொலைபேசி இலக்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
06.பல போட்டியாளர்கள் சரியான விடைகளை அனுப்பி இருப்பின் வெற்றியாளர்கள்   துண்டுகுலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படுவர். போட்டி மத்தியஸ்தர்களின் முடிவே இறுதியானதாகும்.
07.தெரிவு செய்யப்படும் இரு வெற்றியாளர்களினதும் பெயர்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

போட்டி ஆரம்பம் :
·      2018/02/17 (சனி) -2018/02/23 (வெள்ளி) ஆகிய நாட்களில் பிரசுரிக்கப்படும் தகவல்களிலிருந்து 2018/02/24 (சனி) கேள்வி கேட்கப்படும், கேள்விக்கான சரியான விடையை 48 மணித்தியாலத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

       விடைகள் அனுப்பும் முறை
·           பெயர் :
·           விலாசம் : ( வீட்டிலக்கம், ஊர் , மாவட்டம் )
·           தொலை பேசி இலக்கம் :
·           விடை :

-    போட்டி ஏற்பாட்டுக்குழு -

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget