ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 30)பாடம் 07 - வுழூ
7.1. வுழூ கடமை என்பதற்கான ஆதாரம் .
        அல்லாஹ்வுத்தாஆலா கூறுகிறான்முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸ்ஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்).  சூரதுல் மாயிதா : 6
7.2. வுழூவின் சிறப்பு.
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிமான ஓர் அடியான் அல்லது ஒரு மு/மின் வுழு செய்து முகத்தைக்  கழுவினால் அவன் பார்வையால் செய்த பாவங்கள் அனைத்தும் தண்ணீருடன் போய்விடுகிறது, அல்லது இறுதியாக விழும் தண்ணீர் துளியுடன் போய்விடும். அவன் தன் இரு கைகளைக் கழுவினால் கரங்களால் செய்த பாவங்கள் எல்லாம் தண்ணீருடன் போய்விடுகின்றன அல்லது இறுதியாக விழும் தண்ணீர் துளியுடன் போய்விடும். இரு பாதங்களைக்  கழுவினால் பாதங்களினால் செய்த பாவங்கள் எல்லாம் தண்ணீருடன் போய்விடுகின்றன, அல்லது இறுதியாக விழும் தண்ணீர் துளியுடன் போய்விடுகிறது. அவன் பாவத்திலிருந்தும் தூய்மை அடைந்தவனாக மாறுகிறான். ( முஸ்லிம் : 244 )
7.3. வுழூவின் நிபந்தனைகள்.
01. முஸ்லிமாயிருத்தல்.
2. புத்திக்கூர்மையுடையவனாக இருத்தல்.  
3. நிய்யத்து வைத்தல்.
4. சுத்தமான நீரை உபயோகித்தல்.        
5.  வுழூவின் உறுப்புகளை மறைக்கக்கூடியவைகளை நீக்குதல்.

7.4. வுழூவின் பர்ளுகள்.
1. முகத்தைக் கழுவுதல்.
    முகத்தின் வரையறை : தலைமுடி முளைக்கும் இடத்திலிருந்து கழுத்தின் கீழ்பகுதி வரை நீளமாகவும் ஒரு காதில் இருந்து மறுகாது வரை அகலமுமாகும். இந்த வரையறைக்குள் வாய் கொப்பளித்தல், நாசிக்கு நீர் செலுத்துதல், தாடியை அதன் இறுதி பகுதி வரை கழுவுதல் போன்ற செயற்பாடுகளும் அடங்கும். ஏனெனில் இவைகள் அனைத்தும் முகத்தில் அடங்கும் உறுப்புகளாகும். அல்லாஹ்வும் முகத்தை முழுமையாக கழுவும்படியே எமக்குக் கட்டளையிடுகிறான்.
2. இரு கைகளையும் முழங்கை வரை கழுவுதல்.
      இரு கைகளையும் விரலின் நுனியிலிருந்து முழங்கை வரை கழுவுதல்வேண்டும் இதில் ஏதாவது ஒரு பகுதி துண்டிக்கப்பட்டிருந்தால் . எஞ்சியவற்றை கழுவவேண்டும். முழங்கை வரை துண்டிக்கப்பட்டிருந்தால் முழங்கை மூட்டை கழுவவேண்டும். காலுக்குரிய சட்டமும் இதேபோன்றே அமையும்..
3. தலையையும் இரு காதுகளையும் நீரால் தடவுதல்.
      தலையை முழுமையாகவும், காதின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் ஒரே நீரால் ஒரு தடவை தடவவேண்டும்.
4. கணுக்கால் வரை இரு கால்களையும் கழுவுதல்.
    கணுக்கால் என்பது கால்பாதத்தின் இறுதிப்பகுதியாகும். அதாவது கால்பாதத்தையும் காலையும் இணைக்கின்ற இரு எலும்புகளாகும் .
5. தொடராகவும் இடைவெளி விடாமலும் வுழு செய்தல்.
    அதாவது வுழு செய்த ஒரு உறுப்பு காயும் முன் மறு உறுப்பை கழுவுதல் ஆகும்.

7.5. வுழுவின் சுன்னத்துகள்.
1. வுழு செய்வதற்கு முன்னால் பற்துலக்கல்.
    நபியவர்கள் கூறினார்கள்: எனது உம்மத்தினர்கள் மீது சிரமம் இல்லை என்று இருந்தால் ஒவ்வொரு வுழுவுக்கு முன்னாலும் பற்துலக்குமாறு ஏவியிருப்பேன். (அஹ்மத்/ 7364)
2. வுழு செய்வதற்கு முன்னால் கரங்களை கழுவுதல்.
    ஏனைய நேரங்களைவிட தூங்கி எழுந்ததன் பின் கரங்களைக்  கழுவுவது அவசியமாகும். நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தால் அவர் தனது கைகளை கழுவும் முன் பாத்திரத்தினுள் நுழைவிக்க வேண்டாம். ஏனெனில் அவர் தூங்கும் போது அவருடைய கை எங்கே உலாவியது என்று அவருக்குக்  தெரியாது. ( புகாரி162 முஸ்லிம்278 )
03 முகத்தைக்  கழுவும் முன் வாய் கொப்பளித்தல், நாசிக்கு நீர் செலுத்துதல்.
   வாய் கொப்பளித்தல் என்றால் நீரை வாய்க்குள் உட்செலுத்தி வாயை நன்கு அசைத்தலாகும். , நாசிக்கு நீர் செலுத்துதல் என்பது மூக்கின் இறுதிப்பகுதி வரை நீரை உறிஞ்சி எடுத்தல் என்று பொருள்படும்.
4. தாடியைக்  குடைந்து  கழுவுதல்.
    இதற்கு சான்றாக நபியவர்கள் வுழு செய்யும் போது இரு கரங்களாலும் ஓரளவு நீரை எடுத்து,  அதனை தாடிக்குள்  உட்செலுத்தி, குடைந்து கழுகுபவராக இருந்தார்கள். இவ்வாறுதான் எனது இரட்சகன் எனக்கு ஏவினான்  என்று கூறினார்கள். ( அபூதாவூத் பாகம்1 பக்கம்36 )
5. வலதை முற்படுத்தல்.
   வுழு செய்யும் போது, வுழுவின் உறுப்புகளில் இடதைவிட வலதை முற்படுத்த வேண்டும். நபியவர்கள் செருப்பு அணிவதிலும், தலை முடி சீவுவதிலும், சுத்தம் செய்வதிலும், தங்களின் எல்லா விடயங்களிலும்  வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா( ரழி) ஆதாரம்: புஹாரி: 168, முஸ்லிம்: 268.
6. வுழுவின் உறுப்புகளை மூன்று முறை கழுவுதல்.
    முகம், கை, கால் ஆகிய உறுப்புகளை  மூன்று முறை கழுவுதல் வேண்டும் இதற்கு மேல் அதிகப்படுத்த கூடாது. ஏனனில் நபிகளரின்   வுழுவின் வர்ணனை பற்றி வந்துள்ள ஹதீஸ்களில் இடம்பெறும்  அதிக எண்ணிக்கை மூன்று ஆகும்.

கேள்வி இல 30
தாடியை குடைந்து கழுவுவதன் சட்டம் என்ன?

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget