ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –ஹதீஸ் , நாள் 20)



பாடம் 04
4.1. ஹதீஸ்துறைக்குப் பங்காற்றிய நான்கு மத்ஹப்களின் அறிஞர்களும் அவர்களின் கிரந்தங்களும்

4.1.1 முஸ்னத் அபீ ஹனீபா:

நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளுக்கு சேவை செய்தோரில் கூபாவில் ஹி.80ல் பிறந்து பக்தாதில் ஹி.150ல் மரணித்த இமாமுல் அஃழம் அபூ ஹனீபா நுஃமான் பின் ஸாபித் (ரஹ்) அவர்களும் ஒருவர். பிக்ஹு கலையில் அதிக கவனம் செலுத்தியதால் ஹதீஸ்துரையில் பங்களிப்பு குறைந்தாலும் இவர்கள் அறிவித்த பொன்மொழிகள் சுமார் 14 அல்லது 15 பேர் முஸ்னத் என்ற பெயரில் அறிவித்துள்ளனர். எனினும் அவர்களுடைய சிரேஷ்ட மாணவர்களில் ஒருவரான முஹம்மத் பின் ஹஸன் என்பவர் தொகுத்த முஸ்னத் மாத்திரமே தற்போது அச்சிடப்பட்டு நமது கையில் தவழ்கின்றது. அதில் 524 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த பிரபல மார்க்க அறிஞர் அல்லாமா முல்லா அலீ காரீ என்பவர் இதற்கு விரிவுரை எழுதியுள்ளார்.

4.1.2. முவத்தா மாலிக்:

இமாமு தாரில் ஹிஜ்ரா” என்றழைக்கப்படக்கூடிய அபூஅப்தில்லாஹ் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) அவர்களால் இயற்றப்பட்ட கிரந்தமே முவத்தா ஆகும். இவர்கள் ஹி.97ல் பிறந்து ஹி.179ல் மரணித்தார்கள். இதில் நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸ்கள் உட்பட ஸஹாபாக்களினதும், தாபிஈன்களினதும் கூற்றுக்களும், மார்க்கத் தீர்பபுக்களும் அடங்கியிருப்பது ஒரு சிறப்பம்சமாகும். சுமார் 1720 ஹதீஸ்களை உள்ளடக்கியுள்ள இக்கிரந்தம் பல அறிஞர்களால் விரிவுரை செய்யப்பட்டுள்ளது. இதில் இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்களால் எழுதப்பட்ட “அத்தம்ஹீத்” என்ற விரிவுரை நூல் பிரசித்திபெற்றது.

4.1.3. முஸ்னத் அஷ்ஷாபிஈ:

பலஸ்தீனிலுள்ள கஸ்ஸாவில் ஹி.150ல் பிறந்து எகிப்தில் ஹி.204ல் மரணித்த அபூ அப்தில்லாஹ் முஹம்மத் பின் இத்ரீஸ் அஷ்ஷாபிஈ (ரஹ்) அவர்கள் அறிவித்த ஹதீஸ்களின் தொகுப்பே முஸ்னத் அஷ்ஷாபிஈ என்றழைக்கப்படுகிறது. இமாம் மாலிக் அவர்களின் சிரேஷ்ட மாணவர்களில் இமாம் ஷாபிஈயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்நூலை இமாம் ஷாபிஈ அவர்கள் தொகுக்கவில்லை. இவர்களுடைய சிரேஷ்ட மாணவரான ரபீஃ பின் ஸுலைமான் அல்முராதீ என்பவர் இமாம் ஷாபிஈ அவர்களிடமிருந்து கேட்ட ஹதீஸ்களை அபுல் அப்பாஸ் அல்அஸம்மு என்பவர் ரபீஃ இடமிருந்து பெற்றுத் தொகுத்ததே இந்த முஸ்னத் அஷ்ஷாபிஈ என்ற நூல். எனினும் இந்நூலில் இடம்பெறாத, இமாம் ஷாபிஈ அவர்கள் அறிவித்த ஹதீஸ்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. இந்நூலில் இருக்கும் ஹதீஸ்களின் எண்ணிக்கை 1859. இதற்கு ஷாபிஈ மத்ஹபின் பிற்கால அறிஞர் இமாம் ராபிஈ என்பவர் விரிவுரை எழுதியுள்ளார்கள்.

4.1.4. முஸ்னத் அஹ்மத் :

ஹி.164ம் ஆண்டு பிறந்து ஹி.241ல் மரணித்த அபூஅப்தில்லாஹ் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களால் எழுதப்பட்ட கிரந்தமே முஸ்னத் அஹ்மத் ஆகும். இவர் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் முக்கியமான மாணவர்களுள் ஒருவர். ஏனைய ஹதீஸ் கிரந்தங்களைப் போல் பாடங்கள் அடிப்படையில் ஹதீஸ்கள் தொகுக்கப்படாமல் ஓர் அறிவிப்பாளர் (ஸஹாபி) வேறுபட்ட தலைப்புக்களில் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் அந்த ஸஹாபியுடைய பெயரின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பம்சமாகும். சுமார் நாற்பதாயிரம் ஹதீஸ்களை உள்ளடக்கிய இக்கிரந்தம் ஹதீஸ் கிரந்தங்களில் பெரியதாகும்.

கேள்விஇல 20
இமாம்இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்களால் எழுதப்பட்ட விரிவுரை நூலின்பெயர் என்ன? அந்த நூல்எந்த நூலுக்கு விரிவுரையாக எழுதப்பட்டது?

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget