இஸ்லாமிய அகீதா (தொடர் 01) - Waseem Hussain, Dip in Arabic (B.A Rd)
பிற்பட்ட பண்டைய காலந்தொட்டே மனிதனுடைய வாழ்வு ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்குள் உட்பட்டே இருந்திருப்பதை நாம் அறிந்துள்ளோம். அவைகள் எல்லாம் தமது விரும்பு, வெறுப்புகளுக்கு உட்பட்டதாக, தமக்குள் ஏற்படுத்தி கொண்ட சட்டதிட்டங்களாகவே அமையப் பெற்றிருந்தன. அவர்கள் படைப்பின் நோக்கம், படைப்பாளன் யார்? அவர்களைப் பராமரிப்பவன் யார்? என்பனவற்றைப் பற்றி அவர்கள் முரண்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அவற்றிற்கெல்லாம் முற்றுமுழுதாக மாறுபட்ட அமைதியான கொள்கைகளை கொண்டதே இஸ்லாமிய மார்க்கத்தின் அகீதாவாகும். இஸ்லாமிய அகீதாவானது மனிதனின் உள்ளத்திற்கு பொருந்தக் கூடியது. அப்படியான அகீதா மனிதனின் அனைத்து வணக்க வழிபாடுகளிலும் உள்ளடக்கியிருப்பதை அவதானிக்கலாம். அல்லாஹ் கூறுகின்றான். 

اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍؕ‏ 

“எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).” அல்குர் ஆன் 26:89. அதே போன்று இஸ்லாமிய அகீதாவானது அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதை குறித்து நிற்கின்றது. அதே போல ஷிர்க்கில் இருந்து அல்லாஹ்விற்கு நிகராக்குபவைகளை விட்டும் முற்று முழுதாக நீங்கிச் செல்ல வழிகாட்டுகின்றது. அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிட்டுக்காட்டுகின்றான். اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا‏ 

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்குர்ஆன் 4-48) ஆனால் தற்காலத்தில் சில வழிகெட்ட சிந்தனைகள் இஸ்லாமிய அகீதாவில் மாற்றங்கள் செய்து அதற்கு முரணாக நடப்பதை பார்க்கிறோம். ஒரு மனிதன் அகீதா சார்ந்த விடயங்களை மனதால் நம்பிக்கை கொள்ள வேண்டும். உள்ளங்களை சீராக ஆக்குவதில் இஸ்லாமிய அகீதா முக்கியத்துவம் வகிப்பதை பார்க்கின்றோம். அப்படியான மகத்துவம் மிக்க இஸ்லாமிய அகீதாவை விட்டும் தடம்புறளாது இருக்க உள்ளம் சீராக இருப்பது அவசியம். உள்ளம் சீராக வேண்டுமானால் இஸ்லாமிய அகீதாவை அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியவற்றை ஸஹாபாக்கள் விளங்கி ஈமான் கொண்ட பிரகாரம் ஈமான் கொள்ள வேண்டும். 

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆதமின் மக்களின் (மனிதர்களின்) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரேயோர் உள்ளத்தைப் போன்று உள்ளன. அதைத் தான் நாடிய முறையில் அவன் மாற்றுகிறான்" என்று கூறிவிட்டு, "இறைவா! உள்ளங்களைத் திருப்புகின்றவனே! எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிவதற்குத் திருப்புவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். (ஆதாரம் – முஸ்லிம் – 5161) மொழி ரீதியில் அகீதா என்பது – 

அகீதா என்ற சொல்லானது மொழி ரீதியில் முடிச்சு, ஒற்றுமை, பிணைப்பு போன்ற கருத்தில் உள்ளது. இஸ்லாமிய வழக்கில் – 

அதாவது குறிப்பிட்ட சில விடயங்களை ஒரு மனிதன் மனதால் திருப்திகரமாக ஏற்றபதோடு அவற்றை உறுதியாக நம்பிக்கை கொள்வதோடு அதில் எந்த தடுமாற்றமும், சந்தேகமும் கொள்ளாது நம்பிக்கை கொள்வதை குறிக்கின்றது. இஸ்லாமிய அகீதா – 

இஸ்லாமிய அகீதாவானது அல்லாஹ்வையும் அவனது மலக்குகள், வேதங்கள், தூதர்கள், மறுமை நாளோடு தொடர்பான விடயங்கள், கழாக் கத்ர் போன்றவைகளை ஒருவர் எந்த சந்தேகங்களும் இன்றி நம்பிக்கை கொள்வதை குறிக்கின்றது. 

அதே போல அல்லாஹ்வை ஈமான் கொள்வதில் உள்ளடங்குகின்ற உலூஹிய்யத், ருபூபிய்யத், அஸ்மாஉஸ் ஸிபாத் போன்றவைகளையும் நம்பிக்கை கொள்வது மிகப் பிரதானமான அம்சமாகும். அவைகளே மார்க்கத்தின் அடிப்படையும் மறைமுகமான அம்சங்களுமாகும். இஸ்லாமிய அகீதாவிலுள்ள அம்சங்கள் – 

முதலாவது – நம்பிக்கை சார்ந்தது – ஈமான் கொள்ள வேண்டிய ஆறு விடயங்களையும் எந்த சந்தேகமுமின்றி இஸ்லாம் எப்படி ஈமான் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளதோ அதன் பிரகாரம் எந்த வகையான வழிகேடுகளோ, அசுத்தங்களோ, அல்லாமல் நம்பிக்கை கொள்வதை குறிக்கும். இரண்டாவது – செயற்பாடு சார்ந்தது – அதாவது நம்பிக்கை சார்ந்த ஆறு விடயங்களை அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி, அவற்றை அமல் (செயலாற்றுவதை) செய்வதை குறிக்கும். அந்த அமல் ஆனாது வாஜிபாகவோ அல்லது சுன்னதாக்கவோ இருந்தாலும் சரியே. அதே போல் ஒரு மனிதன் செய்கின்ற அமலை வைத்தே அவனுடைய அகீதா மிகச் சரியானதா அல்லது தவறானதா என்பதை படம் பிடித்துக் காட்டுகின்றது. ஒருவர் செய்கின்ற அமல் இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த விடயங்களோடு ஒத்துப் போகின்ற போதுதான் அல்லாஹ் அவ்வமலை ஏற்றுக் கொள்கின்றான். எனவேதான் எமது அமல்கள் சரியான அமைய வேண்டுமானால் எமது நம்பிக்கை சார்ந்த (அகீதா) விடயங்களை சரியாக நம்பிக்கை கொள்ள வேண்டும். அந்த ஈமான் கொள்ள வேண்டிய விடயங்கள் சீராக அமைந்தால் எமது வணக்கமும் சீராம அமைந்து அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமையும். வளரும்… இன்ஷா அல்லாஹ்

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget